புதுச்சேரி

மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

ரூ.90 லட்சம் செலவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

Published On 2023-07-02 08:11 GMT   |   Update On 2023-07-02 08:11 GMT
  • அங்காளன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
  • இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ,வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

புதுச்சேரி:

திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையம் பகுதியில் அப்பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறை போக்கிடும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் 2 கோடியே 90 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் கீழ்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது.

இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் பீனாராணி இளநிலை பொறியாளர் சுதர்சனம் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் ஜல் ஜீவன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ,வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags:    

Similar News