புதுச்சேரி

காந்திவீதி-நேரு வீதி சந்திப்பில் பொதுமக்களுக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் இனிப்பு வழங்கிய காட்சி.

பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2023-09-05 08:17 GMT   |   Update On 2023-09-05 08:17 GMT
  • புதுவை மாநிலத்தில் சென்டாக் மூலமாக மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடை பெறும்.
  • பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடை பெறும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை-எளிய மாணவர்க ளின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் செல்வம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பாளர் இளங்கோ, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் பட்டியலணி மாநில தலைவர் தமிழ்மாறன் மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தொழில் துறை பிரிவு மாநில அமைப்பாளர் ஆசீர்வாத் ரமேஷ், வக்கீல் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் கார்த்தி ராஜகணபதி ராஜபவன் தொகுதி தலை வர் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதா நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News