புதுச்சேரி

 சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

செல்லிப்பட்டு கிராமத்தில் சாலை அமைக்கும் பணி

Published On 2023-10-01 05:17 GMT   |   Update On 2023-10-01 05:17 GMT
  • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

புதுச்சேரி:

திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு கிராமத்தில். உள்ள பூந்தோட்ட வீதியில் சாலை வசதி இன்றி அப்பகுதி பொதுமக்கள் மழைக் காலங்களில் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்வதற்கு கூறி தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கருங்கல் சாலை அமைப்பதற்காக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மேம்பாட்டு நிதியில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தொகுதியின் அங்காளன் எம்.எல்.எ பங்கேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News