புதுச்சேரி
ரூ.11 லட்சம் செலவில் சாலை பணி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அங்காளன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து சாலை அமைத்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனர்.
- மல்லிகார்ஜுணன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருவண்டார்கோயில் அருகே உள்ள ஞானசுந்தரி நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேரும் சகதியுமாகி மழை நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் அங்காளன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து சாலை அமைத்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மண்ணாடி பட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள உட்புற சாலைகள் கிராவல் சாலைகளாக அமைக்க பூமி பூஜை விழா நடைபெற்றது.
இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.