புதுச்சேரி

கோப்பு படம்.

கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து விளையாட்டு வீரர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-19 08:20 GMT   |   Update On 2023-10-19 08:20 GMT
  • நாளை நடக்கிறது
  • மாலை மற்றும் இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மின்சார விளக்குகள் அமைத்து தரவேண்டும்.

புதுச்சேரி:

புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கும், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கும் சுகாதாரமான நவீன கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மாலை மற்றும் இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மின்சார விளக்குகள் அமைத்து தரவேண்டும்.

இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜீவ் காந்தி உள் விளையாடரங்கத்தின் பாதுகாப்பு உறுதி செய்திட தகுதியான காவலாளிகளை நியமிக்க வலியுறுத்தியும் ரூ. 7 கோடி ரூபாய் செலவு செய்து சிந்தடிக் ஓடு பாதை அமைத்து 2 ஆண்டு களாகியும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டி வைத்து ள்ளனர்.

ராஜீவ் காந்தி உள்விளை யாட்டு அரங்கத்தில் ஏசி வசதி செய்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் தகுந்த மின்சார வசதி புதுவை அரசு செய்து கொடுக்க வேண்டும்.

விளையாட்டு போட்டி கள் நடத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும். கோவாவில் நடைபெற வுள்ள தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு மாநிலத்தின் சார்பில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்கள் வீராங்கனை களுக்கு தேவை ப்படும் அனைத்து செலவையும் முழுவது மாக புதுவை அரசை ஏற்க வேண்டும்.

ராஜீவ் காந்தி விளை யாட்டு அரங்க த்திலும் இந்திரா காந்தி விளை யாட்டு அரங்கத்திலும் முழுவதுமாக சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விளையாட்டு வீரர்கள நலச்சங்கம் சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. மேலும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அரசு இதுவரை எதனையும் நிறைவேற்ற வில்லை.

இது தொடர்பாக விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News