புதுச்சேரி
- அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனைத் தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தால் குப்பம் ரமணா நகர் மற்றும் திருபுவனை பகுதியில் உள்ள செல்வ கணபதி நகர், ராம கிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளில் தார்சாலை இன்றி மழை நீர் சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் தார் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனை ஏற்று மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து தார் சாலை அமைக்க ரூ. 50 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜையை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.