புதுச்சேரி

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கென்னடி எம்.எல்.ஏ. பரிசு வழங்கிய காட்சி.

null

மாணவர்களின் தனித்திறமைகளை அரசு வெளி கொண்டு வரவேண்டும் முதல்-அமைச்சரிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-01-24 04:38 GMT   |   Update On 2023-01-24 04:38 GMT
  • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் வாய்மை இயக்கம் மூலம் வாய்மை விருதுகள் வழங்கப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல போட்டிகள் நடைபெற்றது.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் வாய்மை இயக்கம் மூலம் வாய்மை விருதுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல போட்டிகள் நடைபெற்றது.

ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ,நடனப் போட்டிகளும் சிறந்த சமூக சேவைக்கான விருது, கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றார்கள், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .

மேலும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களை வாழ்த்தி பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், மணிமாறன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News