- திருக்கனூரில் செப்டிக் டேங்க் லாரியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார்.
- தினமும் செப்டிக் டேங்க் லாரியை திருக்கனூர் கடை வீதியில் ஒரு ஆயில் மில் எதிரே நிறுத்துவது வழக்கம்.
புதுச்சேரி:
கடலூர் திருப்பாபுலியூர் சுரேஷ்நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது41). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
தினமும் செப்டிக் டேங்க் லாரியை திருக்கனூர் கடை வீதியில் ஒரு ஆயில் மில் எதிரே நிறுத்துவது வழக்கம்.
இந்தநிலையில் அந்த லாரியை டிரைவர் திருக்கனூர் கடை வீதியில் நிறுத்திவிட்டு சென்றார். ஜெயக்குமார் லாரியின் டிரைவர் இருக்கையில் தூங்கினார். பார்த்த போது இருக்கையில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
குடிபோதையில் அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமார் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து போன ஜெயகுமாருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.