புதுச்சேரி

கோப்பு படம்.

தமிழகத்தில் எது நடந்தாலும் கருத்து சொல்ல எனக்கு உரிமை உள்ளது

Published On 2023-08-16 08:18 GMT   |   Update On 2023-08-16 08:18 GMT
  • கவர்னர் தமிழிசை ஆவேசம்
  • மாலையில் தெலுங்கானா செல்ல வேண்டி இருப்பதால் இங்கு நல்ல விருந்தாகவே கொடுக்க நினைத்து உணவு பட்டியலை நானே தயாரித்தேன்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் மாளிகையில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த தேனீர் விருந்தை தி.மு.க. வினர் புறக்கணித்தனர். எதிர்கட்சிகள் புறக்கணிப்பு குறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறிய தாவது:-

தமிழகத்தில் கவர்னர் விருந்து மழை காரணமாக நடத்தப்படவில்லை. மழை அங்கு அதிகமாக பொழிகிறது.இங்கு நாம் அனைவரையும் சகோதரத்துடன் அழைத்து கொண்டாட வேண்டும் என்பது ஆசை. காலகாலமாக சுதந்திர தினத்தில் விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம். மாலையில் தெலுங்கானா செல்ல வேண்டி இருப்பதால் இங்கு நல்ல விருந்தாகவே கொடுக்க நினைத்து உணவு பட்டியலை நானே தயாரித்தேன்.

அனைவருக்கும் தேவை எது என்பதை பார்த்து பார்த்து செய்தேன். இதில் புறக்கணிப்பு என்பது பெருமைக்குரியது அல்ல. அரசியல்,கொள்கைகளை தாண்டி நடைபெறும் வழிமுறை. இதில் வரவில்லை என்றால் எனக்கு எதுவும் குறையில்லை. வராதவர்களை பற்றி கவலை இல்லை. வந்தவர்களை மகிழ்ச்சியாக வரவேற்றோம்.

நான் தமிழகத்தை சேர்ந்தவள். தமிழகத்தில் எது நடந்தாலும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தமிழகத்தில் தமிழிசை ஏன் மூக்கை நுழைக்கிறார் என புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா கேட்கிறார். சுதந்திர தினத்தன்று ஒரு கவர்னரை பார்த்து தமிழத்தை பற்றி எப்படி பேச முடியும் என கேட்கிறார்கள். தமிழக சட்ட மன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என கூறும் போது எனக்கு தெரிந்த உண்மையை கூறினேன்.

தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்கு இங்கு எப்படி பதில் சொல்லலாம். அதற்கு நான் வர மாட்டேன் என தி.மு.க. சிவா கூறுவதால் எனக்கு நஷ்டமில்லை.

புதுவை ஆட்சியை நான் பிடித்து வைத்திருப்பதாக எதிர்கட்சிகள் தவறாக கூறுகிறார்கள். புதுவையின் மீது அக்கறை இருந்தால் தமிழகத்தில் இருந்து புதுவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை வாங்கி தர வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

Tags:    

Similar News