2023 ரீவைண்ட்: தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்
- ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடங்கியது
- 75 நாட்களை கடந்து தீவிரமாக இப்போர் நடைபெற்று வருகிறது
கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 3000 பேர் தரை, வான் மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் எல்லை பகுதிகளில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர். அந்த பயங்கரவாதிகள் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்தி கொடூரமாக கொன்றனர். மேலும், சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் நிறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது.
போர் நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் அழைப்பு விடுத்தும் இஸ்ரேல் சம்மதிக்கவில்லை.
75 நாட்களை கடந்து தீவிரமாக தொடர்ந்து நடைபெறும் இப்போரில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, அங்கு மருத்துவமனைகள் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
இப்போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால் உலக போராக மாறும் அபாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.