பாரிஸ் ஒலிம்பிக்ஸ்.. வரலாற்று சாதனை படைத்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா
- டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
- கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட்ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியிருந்தார்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவாடேவை எதிரிகொண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 4-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு [pre-quarterfinals] முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஆடிய மறக்கமுடியாத ஆட்டமாக நேற்று நடந்த ஆட்டம் மாறியுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதி பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.