கணினி

விரைவில் 4 ஆயிரம் எழுத்துக்களில் ட்விட் செய்யலாம் - எலான் மஸ்க் அதிரடி!

Published On 2022-12-13 05:06 GMT   |   Update On 2022-12-13 05:06 GMT
  • ட்விட்டரில் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் அளவை எலான் மஸ்க் விரைவில் மாற்றுகிறார்.
  • முன்னதாக ட்விட்களின் அளவு 140 எழுத்துக்களாக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் அளவு 280-இல் இருந்து 4 ஆயிரமாக அதிகரிக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். ட்விட்டரில், ட்விட் செய்வதற்கான அளவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்து இருந்தார். அதில், ஆம் என்று குறிப்பிட்டு இருந்தார். 2017 வாக்கில் ட்விட் அளவை 280 ஆக அதிகரிக்கும் முன் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ட்விட்டரில், ட்விட் செய்ய 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும். பின் 2018, நவம்பர் 8 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 280 ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த சுமார் 1.5 பில்லியன் அக்கவுண்ட்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எலான் மஸ்க் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

இவைதவிர ட்விட்டர் புளூ சேவையை மீண்டும் வெளியிடும் பணிகளில் ட்விட்டர் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டர் புளூ மூலம் பயனர்கள் புளூ செக்மார்க் பெற முடியும். எனினும், இம்முறை ட்விட்டர் புளூ சேவைக்கான கட்டணம் ஐஒஎஸ் தளத்தில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ கட்டணம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வலைதளத்தில் ட்விட்டர் புளூ சேவையில் இணையும் போது பயனர்கள் 8 டாலர்களை கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆப்பிள் நிறுவனம் அறிவித்த 30 சதவீத கமிஷன் தொகையை கருத்தில் கொண்டு ட்விட்டர் விலை உயர்வை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News