கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவித்த சாம்சங்
- இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- விலை குறைப்பு தவிர வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் கேலக்ஸி A54 5ஜி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A54 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 40 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.
தற்போதைய விலை குறைப்பின் படி கேலக்ஸி A54 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 36 ஆயிரத்து 999-க்கும் 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 38 ஆயிரத்து 999-க்கும் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் வைட், ஆசம் லைம், ஆசம் வைலட் மற்றும் ஆசம் கிராஃபைட் நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A54 5ஜி மாடலில் 6.4 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், சாம்சங் எக்சைனோஸ் 1380 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. 5.1, டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இத்துடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP டெப்த் சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.