தொழில்நுட்பச் செய்திகள்
வீடியோ கிரியேட்டர்களுக்கு ஃபேஸ்புக் கொடுத்த சர்ப்ரைஸ்
ஃபேஸ்புக் சமீபகாலமாக டிக்டாக் செயலியிடம் தனது தினசரி பயனர்களை இழந்து வருகிறது. இதை ஈடு செய்ய மெட்டா நிறுவனம் புதிய புதிய அம்சங்களை ரீல்ஸில் அறிமுகம் செய்து வருகிறது.
குறைந்த அளவிலான வீடியோக்களை பதிவிடுவது இன்று இணைய உலகில் பரவாக இருக்கிறது. டிக்டாக் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இதுபோன்ற வீடியோக்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மெட்டா நிறுவனமும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ரீல்ஸ் என்ற சேவையை குறு வீடியோக்கள் சேவையை வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சேவையில் புதிய மாற்றம் ஒன்றை தற்போது மெட்டா அறிவித்துள்ளது.
இதன்படி வீடியோ கிரியேட்டர்கள் இனி தங்களுக்கு பிடித்த வீடியோவை வேறு செயலிகளில் இருந்து ரீல்ஸில் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ரீல்ஸ் சேவைக்குள் சென்று வீடியோவை பிடித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை பயன்படுத்தி வீடியோவை எடிட் செய்து பகிர வேண்டும். அல்லது வேறு செயலிகளில் வீடியோவை எடிட் செய்து, பின் அதை டவுன்லோட் செய்து ரீல்ஸில் பகிர வேண்டும். இந்நிலையில் இனி ஸ்மியூள், விட்டா, விவாவிடியோ உள்ளிட்ட வீடியோ எடிட்டிங் செயலிகளை பயன்படுத்தி அதில் தங்களுக்கு பிடித்தவாறு எடிட் செய்து நேரடியாக ரீல்ஸில் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பயனர்கள் ரீல்ஸ் பயன்படுத்துவதை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் சமீபகாலமாக டிக்டாக் செயலியிடம் தனது தினசரி பயனர்களை இழந்து வருகிறது. இதை ஈடு செய்ய மெட்டா நிறுவனம் புதிய புதிய அம்சங்களை ரீல்ஸில் அறிமுகம் செய்து வருகிறது.