டென்னிஸ்

செர்பிய வீரர் ஜோகோவிச் பந்தை திருப்பி அடிக்கிறார் - 2-வது சுற்றில் வெற்றி கண்ட சபலென்கா ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தமிட்ட காட்சி.

null

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-01-18 03:53 GMT   |   Update On 2024-01-18 03:53 GMT
  • நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, பிரன்டா புருவிர்தோவாவை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மெல்போர்ன்:

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 7-6 (8-6), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி 37 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 75-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீரர் டாமஸ் மசாக் 6-4, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாயோவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.

மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டெய்லர் பிரைட்ஸ் (அமெரிக்கா), செபாஸ்டியன் பயஸ் (அர்ஜென்டினா), கரன் கச்சனோவ் (ரஷியா), தாமஸ் மார்ட்டின் எட்ச்வெர்ரி (அர்ஜென்டினா), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் நுழைந்த பிரன்டா புருவிர்தோவாவை (செக்குடியரசு) விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான கோகோ காப் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கரோலின் டோலிஹிட்டை வீழ்த்தினார்.

உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 0-6, 2-6 என்ற நேர்செட்டில் 16 வயது ரஷிய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதேபோல் முன்னாள் சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட வீராங்கனையான மரியா டிமோபீவாவிடமும் (ரஷியா), 8-ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரி (கிரீஸ்) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ரஷியாவின் எலினா அவனிஷியானிடமும் வீழ்ந்தனர்.

மற்ற ஆட்டங்களில் ஹாடட் மையா (பிரேசில்), ஸ்டாம் ஹூன்டெர் (ஆஸ்திரேலியா), அலிசியா பார்க்ஸ் (அமெரிக்கா), பார்பரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), லிசி சுரென்கோ (உக்ரைன்), அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா), டியானி பேரி (பிரான்ஸ்), அனஸ்டாசியா ஜகாரோவா (ரஷியா) ஆகியோரும் வெற்றி கண்டனர்.

Tags:    

Similar News