search icon
என் மலர்tooltip icon

    கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

    கும்பம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். தன ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார். எனவே லாபமும், விரயமும் சம அளவிலேயே இருக்கும். செலவிற்கு முன்னதாகவே வரவு வந்து சேரும் என்றாலும் அஷ்டமத்தில் கேது இருப்பதால் எந்தக் காரியத்தையும் உடனடியாக முடிக்க இயலாது. போராடியே முடிக்க நேரிடும். எனவே புது முயற்சிகள் செய்யும் போது அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்டுக்கொள்வது நல்லது.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தனலாபாதிபதி என்பதால் தனவரவில் தடைகள் ஏற்படும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வருவதில் தாமதம் ஏற்படும். உறவினர் பகை உருவாகும். உடல்நலத்தில் தாக்கங்கள் ஏற்படும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 4, 9-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெறுகின்றார். எனவே சுகங்களும், சந்தோஷங்களும் குறையும். பணப்பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலர் கடன் வாங்கும் சூழ்நிலை கூட உண்டு. நகைகளை அடகு வைத்தும் பணம் புரட்டிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கார்த்திகை 14-ம் தேதி தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகின்றார். இதன் விளைவாகப் பாக்கியஸ்தானம் வலுவடைகின்றது. எனவே அதன் பிறகு படிப்படியான நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிம்மதியோடு புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கார்த்திகை 14-ம் தேதி லாப ஸ்தானத்திற்கு வருகின்றார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்பாராத நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு அது கிடைக்கலாம்.

    கும்பம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    நட்பால் நன்மை உண்டு என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் வக்ரம் பெற்று விளங்குகின்றார். விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும், ராசிநாதனாகவும் சனி விளங்குவதால் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது. கூடுதல் விரயங்கள் வந்தாலும் அதற்கேற்ப வருமானங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். 2-ல் ராகு இருப்பதால் தொழில் வளர்ச்சியும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால் உடல்நலம் சீராக வழிபிறக்கும். அதே நேரம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும், கூட்டாளிகளுக்காகவும் விரயங்களைச் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். வீண் விரயங் களிலிருந்து விடுபட்டு சுபவிரயங்களை மேற்கொள்ளவும் முயற்சிப்பது நல்லது, இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் முதலீடு செய்யலாம். திருமண வயதடைந்த பெண் குழந்தைகளுக்கு சீர்வரிசைப் பொருள் வாங்குவதில் கவனம் செலுத்தலாம்.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு தனலாபாதிபதியாக விளங்கும் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணத்தட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம். ஒரு சிலருக்கு ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற காலங்களில் பிறருக்கு பணப்பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். இளைய சகோதரத்தோடு இருந்த உறவில் விரிசல்கள் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர்களின் ஆதரவு குறையும். பணநெருக்கடி காரணமாக வாங்கிய இடத்தை விற்க நேரிடும். வாகனப் பழுதுகளின் காரணமாக வாட்டம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகலாம். கவனம் தேவைப்படும் நேரமிது.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் 10-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். வியாபார அபிவிருத்தி உண்டு. பொருளாதார நிலை சீர்படும். சருமப் பிரச்சினைகள் தகுந்த சிகிச்சையினால் குணமடையும். புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். வியாபரம் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும் நேரம் என்பதால் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 20, 21, 27, 28, நவம்பர் 1, 2, 3, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.

    கும்பம்

    புரட்டாசி மாத ராசிபலன்

    18-09-2023 முதல் 17-10-2023 வரை

    நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் கும்ப ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் விரய ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே வரவை விட செலவு அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லைகளும், அதனால் மன உளைச்சலும் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைப்பது போல் இருந்தாலும் அது கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். இம்மாதம் உங்கள் எண்ணங்கள் செயலாக, யாரேனும் ஒருவருடன் இணைந்துதான் செயல்பட வேண்டும்.

    புதன் வக்ரம்

    உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கன்னி ராசியில் உச்சமும், வக்ரமும் பெறுகிறார். புரட்டாசி 10-ந் தேதி இந்த நிகழ்வு நடைபெறஇருக்கிறது. இதன் விளைவாக இடமாற்றம், ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் வரலாம். பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். கல்யாணம், காதுகுத்துவிழா போன்றவை நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும்.புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சியில் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரலாம். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு லாபம் தரும் விதத்தில் விற்பனையாகலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் வருகிறார். பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் துலாம் ராசிக்கு வரும்பொழுது, பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில் குறுக்கீடுகள் வந்தாலும் அதை வெல்லும் ஆற்றல் உங்களுக்குப் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு பலன்தரும். அவர்கள் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்திருந்தால் வாய்ப்புகள் கைகூடும். காரிய வெற்றிக்கு நண்பர்களும், உறவினர்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவுவர். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ -மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கலாம். பெண்கள் புத்துணர்ச்சியோடு புதுமை படைப்பர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்:- 18, 19, 23, 24, 29, 30, அக்டோபர்: 4, 5, 14, 15. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை

    எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் வெற்றிகரமாக முடிக்கும் கும்ப ராசி நேயர்களே!

    ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது,  மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். சில நாட்கள் கழித்து அந்த வக்ர இயக்கத்தோடு விரய ஸ்தானத்திற்கும் வருகிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் பற்றாக்குறையும் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை குறிப்பிட்டபடி செய்ய இயலாது.

    வழிபாட்டினை மேற்கொள்வதன் மூலம் வக்ரச் சனியின் காலத்தில் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள இயலும். கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். எதையும் தன்னிச்சையாகச் செய்ய இயலாது. மனஅழுத்தம், நிம்மதியின்மை போன்றவை ஏற்படலாம்.

    தொழிலில் பங்குதாரர்கள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். அலுவலகத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை.

    கன்னி -செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. எனவே மிகுந்த பொருள் விரயம் ஏற்படும் நேரமிது. குறைந்த செலவில் முடிவடைய வேண்டிய காரியம் அதிகச் செலவில் முடியும். ஒருவேலையை ஒருமுறைக்கு இருமுறை செய்யும் நிர்பந்தம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. வம்பு, வழக்குகள் வாசல் தேடி வரலாம். அஷ்டமத்துச் செவ்வாய் மாறும்வரை முறையான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, வக்ர இயக்கத்திலேயே மகர ராசிக்கு செல்கிறார்.

    உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, கூடுதல் விரயங்களைச் சந்திக்க நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரப் போட்டி அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தின் காரணமாக பல நல்ல வாய்ப்புகளை நழுவவிட நேரிடும். 'விரிவு செய்த தொழிலை தொடர்ந்து நடத்த மூலதனம் இல்லையே' என்று கவலைப்படுவீர்கள்.

    புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் பலம் பெறும் இந்த நேரம், பிள்ளைகளின் சுபாகரிய பேச்சுக்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பாகப்பிரிவினைகள் நடைபெற்றால் அது திருப்தி தரும். தேகநலன் படிப்படியாகக் குணமாகும்.

    வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் யோசித்துச்செய்வது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காக உயரும்.பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 22, 23, 26, 27, செப்டம்பர்: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    உழைப்பையே மூலதனமாக்கி செயல்படும் கும்ப ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்க்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். மனநிலையில் மாற்றம் ஏற்படும். தொடக்கத்தில் வேகமாகச் செய்த வேலையை நிறுத்திவிடுவீர்கள். பல வேலைகள் அரைகுறையிலேயே நிற்கக்கூடும். எனவே திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். வழிபாட்டின் மூலமே வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளலாம்.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகத்தில் சுப கிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். தன - லாபாதிபதியாக விளங்கும் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். அதே நேரம் ராகுவோடு இணைந்திருப்பதால், குருவால் ஓரளவே நன்மை செய்ய இயலும். அவரது பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. 7-ம் இடம் களத்திர ஸ்தானம் என்பதால் குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். கடுமையாக முயற்சித்தும் முடிவடையாத திருமணங்கள் இப்போது நடைபெறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானம் கிடைக்கலாம்.

    குருவின் பார்வை 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் பாக்கிய ஸ்தானமும், லாப ஸ்தானமும் புனிதமடைகிறது. எனவே தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் கட்டி வைத்து சிதிலமடைந்த கோவில்களைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். லாப ஸ்தானம் பலம்பெறுவதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இதுவரை கேட்டும் கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கும். வரும் வாய்ப்புகள் எல்லாம் வளர்ச்சிக்குரியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    சிம்ம - புதன்

    ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் களத்திர ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகளின் திருமணப் பேச்சுக்கள் திடீரென முடிவாகும். வெளிநாடு சென்று படிக்கவோ, வேலை பார்க்கவோ நினைக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு அது கைகூடும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு இணக்கமாக நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குத் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் பெறுவதற்கான அறிகுறி தென்படும். கலைஞர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. மாணவ - மாணவியர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்களுக்கு எதையும் யோசித்து செய்ய வேண்டிய காலகட்டம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. வீண்பழிகளுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 25, 26, 30, 31, ஆகஸ்டு: 6, 7, 10, 11.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    உழைப்பால் உயர முடியும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி முடியாது. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். ஒட்டி உறவாடிய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் இணக்கம் குறையும். எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கலாம்.

    மிதுன - புதன்

    ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். கல்யாண முயற்சி கைகூடலாம். 'படித்து முடித்தும் வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். பூர்வ புண்ணியத்தின் பலனாக, சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக முடியும். பூமி விற்பனை மூலம் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்போது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது. இதனால் சுபகாரியங்கள் நடைபெறும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் ஆராக்கியத் தொல்லை அகலும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்கு வரமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும், தாய் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும் இப்பொழுது வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் கூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். இதன் விளைவாக 'சுக்ர மங்கல யோகம்' நடைபெறுகின்றது. குருவின் பார்வை செவ்வாய் மற்றும் சுக்ரன் மீது பதிவது யோகம்தான். சொத்துத் தகராறுகள் அகலும். சொந்தங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். உள்ளத்தில் உறுதியோடு செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். இப்போது அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். 'இடம், வீடு இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது அவற்றை வாங்கும் யோகம் உண்டு. படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். பரந்த மனப்பான்மை கொண்ட சிலரால் நிரந்த வருமானத்திற்கு வழிபிறக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பயணங்கள் பலன்தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி தானாக கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வீடு தேடிவரும். மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்கும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 17, 28, 29, 30, ஜூலை: 3, 4, 5, 9, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    உழைப்பால் உயர முடியும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி முடியாது. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். ஒட்டி உறவாடிய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் இணக்கம் குறையும். எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கலாம்.

    மிதுன - புதன்

    ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். கல்யாண முயற்சி கைகூடலாம். 'படித்து முடித்தும் வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். பூர்வ புண்ணியத்தின் பலனாக, சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக முடியும். பூமி விற்பனை மூலம் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்போது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது. இதனால் சுபகாரியங்கள் நடைபெறும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் ஆராக்கியத் தொல்லை அகலும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்கு வரமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும், தாய் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும் இப்பொழுது வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் கூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். இதன் விளைவாக 'சுக்ர மங்கல யோகம்' நடைபெறுகின்றது. குருவின் பார்வை செவ்வாய் மற்றும் சுக்ரன் மீது பதிவது யோகம்தான். சொத்துத் தகராறுகள் அகலும். சொந்தங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். உள்ளத்தில் உறுதியோடு செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். இப்போது அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். 'இடம், வீடு இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது அவற்றை வாங்கும் யோகம் உண்டு. படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். பரந்த மனப்பான்மை கொண்ட சிலரால் நிரந்த வருமானத்திற்கு வழிபிறக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பயணங்கள் பலன்தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி தானாக கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வீடு தேடிவரும். மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்கும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 17, 28, 29, 30, ஜூலை: 3, 4, 5, 9, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.5.23 முதல் 15.6.23 வரை

    செயலாற்றல் மிக்கவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே சனி பகவான் சஞ்சரிக்கிறார். ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பொருளாதார நிலையிலும் பற்றாக்குறை ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு கரையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு பாடுபட்டாலும், அதிகாரியின் ஆதரவைப் பெற இயலாது. திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.

    ராகு-கேது சஞ்சாரம்

    பின்னோக்கிச் செல்லும் கிரகங்களில், ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். கேது 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது தாமதப்படும். சில சலுகைகள் உங்களுக்கு மறுக்கப்படலாம். பூர்வீக சொத்துத் தகராறுகள் தலைதூக்கும். பாகப்பிரிவினைகளில் குழப்பங்கள் அதிகரிக்கும். தேக நலனில் அக்கறை தேவை. தெய்வ பலம் உங்களுக்கு கை கொடுக்கும். என்றாலும் குறிப்பிட்ட நாளில் சில ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாமல் போகலாம். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்துகொள்ளுங்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகளைப் பெற முடியும்.

    கடக - சுக்ரன்

    வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.

    ரிஷப - புதன்

    வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், சூரியனுடன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், உத்தியோக உயர்வும் வந்துசேரும். புதியவர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். தொழில் செய்பவர்களுக்கு, தொழில் நடைபெறுவதில் இழுபறி நிலை இருக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். கலைஞர்களுக்கு விலகிச் சென்ற வாய்ப்பு மீண்டும் வந்து சேரும். மாணவர்கள் பாடங்களில் மனதைச் செலுத்தி குறிப்பிட்ட இலக்கை அடைவார்கள். பெண்களுக்கு ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். அசையாச் சொத்துகளை உங்கள் பெயரில் வாங்கும் யோகம் வாய்க்கும். பணவரவு திருப்தி தரும். பணிபுரிபவர்களுக்கு யோகமான நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 20, 21, 31, ஜூன்: 1, 5, 6, 12, 13.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    14.4.2023 முதல் 14.5.2023

    நட்பால் நன்மையைப் பெறமுடியும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடக்கின்றது. எனவே எதிலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திலும் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். ஒருசில வேலைகளை ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செய்யும் சூழ்நிலை ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கலாம். பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்க போதுமான அளவு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பயணங்களைத் திடீர் திடீர் என மாற்றியமைப்பீர்கள். சனி உங்கள் ராசிநாதன் என்பதால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் பிரச்சினைகளைச் சந்திக்காமல் இருக்க முடியாது.

    சனியின் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். இதுவரை விரயச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். வாக்கிய கணித ரீதியாக இந்தச் சனிப்பெயர்ச்சி சில மாதங்கள் தான் என்றாலும், உங்கள் ஜாதக அடிப்படையில் எத்தனையாவது சுற்று என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு இரண்டாவது சுற்றாக இருந்தால் ஓரளவு நன்மை கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகல, புதிய பாதை புலப்படும். முதல் சுற்றாகவோ, மூன்றாவது சுற்றாகவோ இருந்தால் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பின் பெயரில் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்காமல் இருக்க விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. உத்தியோகத்தில் பணி ஓய்விற்குப் பிறகு பணி நீடிப்பு கிடைக்கலாம்.

    மேஷ - குரு

    சித்திரை 9-ந் தேதி, மேஷ ராசிக்கு குரு பகவான் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் அந்த இடங்கள் புனிதமடைகின்றன. எனவே திருமண வயதுள்ளவர்களுக்கு இனிய இல்லறம் அமையும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். நெருக்கடி நிலை அகன்று நிம்மதி கிடைக்கும். பிரிந்தவர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நடக்கும் தொழிலை விரிவுபடுத்த, கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு. வீடுகட்ட, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது நிறைவேறும்.

    மிதுன - சுக்ரன்

    சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும். பிரச்சினைகள் பலவற்றில் இருந்தும் விடுபடுவீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் வளர்ச்சி திருப்திதரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். ஊர் மாற்றங்கள் கேட்டபடியே கிடைக்கும்.

    இம்மாதம் மாரியம்மன் வழிபாடு மகிழ்ச்சியை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 18, 19, 23, 24, மே: 4, 5, 9, 10, 11.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    செயலாற்றல் மிக்கவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி மாதத் தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பங்குனி 14-ந் தேதி வரை விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதிலும் சற்று நிதானமும் கவனமும் தேவை. ஒருசில வேலைகளை ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழல் உருவாகும். மனக்குழப்பம், ஆரோக்கியத் தொல்லை, தொழில் வளர்ச்சியில் இடையூறு, பொருளாதார நெருக்கடி, குடும்பத்தில் குழப்பம் போன்றவற்றை சந்திக்க நேரிட்டாலும் சனி உங்கள் ராசிநாதன் என்பதால் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார்.

    இம்மாதம் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். எனவே பிள்ளைகள் வழியில் விரயங்கள் உருவாகலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும். குறைந்த செலவில் முடிய வேண்டிய காரியம், பெரிய செலவைக் கொண்டு வந்து சேர்க்கும். கடின உழைப்பின் மூலமே வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, மேலதிகாரிகளின் அனுசரிப்புக் குறையலாம்.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலத்தில் இனிய சம்பவங்கள் அதிகம் நடைபெறும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் வரும். வாதாடும் நிலை மாறி வாழ்க்கை சீராகும். தொழில் வளர்ச் சிக்கு வேண்டிய தொகை, கேட்ட இடத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்து எடுபடும். கடன் பிரச்சினைகளால் ஏற்பட்ட கலக்கம் அகலும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உறுதுணையாக இருப்பர்.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நிரந்தர வருமானம் கிடைக்க வழி பிறக்கும். முயற்சிகளில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். காரிய வெற்றியடைய ஓய்வின்றி பணிபுரிவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தேகநலன் சீராகும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்கள் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நேரம் இது. ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் உள்ளவர்களுக்குப் போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். கலைஞர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். மாணவ - மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும், வழிகாட்டுதல்களும் சிறப்பாக அமையும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் பெண்கள் தங்கள் ஆரோக்கி யத்தைச் சீராக்கிக் கொள்ளலாம். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து வருமானம் வரலாம். இல்லற வாழ்க்கையில் இருந்த இடையூறுகள் அகலும்.

    இம்மாதம் அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 15, 16, 22, 23, 26, 27, ஏப்ரல்: 8, 9, 13.

    மகிழ்ச்சி வண்ணம்:- மஞ்சள்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். அதே நேரம் தன ஸ்தானத்தில் குருவும் சொந்த வீட்டில் இருக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உங்கள் ராசிநாதன் சனியோடு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் இணைந்திருக்கிறார். உங்கள் ராசியில் சூரியன், சுக்ரன் சேர்க்கை பெற்றுள்ளனர். சுக ஸ்தானத்தில் செவ்வாய் வீற்றிருந்து தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் குருவின் பார்வை பதிகிறது. எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பிரிந்த உறவு மீண்டும் ஒன்று சேரும். நட்பால் நன்மை கிடைக்கும். தற்காலிகப் பணியில் உள்ளவர்கள் நிரந்தரப் பணியாளராக மாறும் வாய்ப்பு உண்டு.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி கும்ப ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம- அஷ்டமாதிபதியான புதன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் போது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். விரயங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பாகப்பிரிவினைக்காக முயற்சி செய்திருந்தவர்களுக்கு, காரியம் சுமுகமாக கைகூடும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான் என்றாலும், பஞ்சமாதிபதியாகவும் புதன் விளங்குவதால் பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வீடு வாங்கும் முயற்சியில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தென்படும். 'வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து, உதிரி வருமானம் வந்துசேரும். உத்தியோக உயர்வால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் ெசல்கிறார். அங்கிருந்து கொண்டு மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போகிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றம், இடமாற்றம் உறுதியாகலாம். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பணிபுரியும் இடத்தில் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. வேறு இலாகாவிற்கு மாறும் சூழ்நிலை கூட உண்டு.

    இம்மாதம் துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 16, 17, 23, 24, 27, 28, மார்ச்: 10, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    சேவை செய்வதைப் பெருமையாகக் கருதும் கும்ப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் தன ஸ்தானத்தில் தானாதிபதி குரு பலம் பெற்றிருக்கிறார். இரண்டு கிரகங்களும் சமஅளவில் பலம் பெற்றிருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வர். தொழில்வளம் சிறப்பாக அமையும்.

    புதன் வக்ர இயக்கம்

    உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். 8-ம் இடத்திற்கு அதிபதியானவர் வக்ரம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். 5-க்கு அதிபதியாகவும் புதன் இருப்பதால் பூர்வீக சொத்துக்கள் விற்பனையாகலாம். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது குடும்ப முன்னேற்றம் கருதி செலவிடும் சூழ்நிலை ஏற்படும். கல்யாண சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதிலும், குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதிலும் கவனம் செலுத்துவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிலும் கவனம் செலுத்துவீர்கள்.

    புதன் வக்ர நிவர்த்தி

    மார்கழி 24-ந் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக பஞ்சமாதிபதி பலம் பெறும்பொழுது நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறும். அஞ்சும்படியாக இருந்த பகைவர்கள் விலகுவர். ஆதரவுக்கரம் நீட்டு பவர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் இப்பொழுது மனம் மாறுவர். பொருளாதாரம் திருப்தியளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் அமைப்பு சிலருக்கு உண்டு.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பலம் பெறும் இந்த நேரம் சகோதர ஒற்றுமை பலப்படும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். வருமானப் பற்றாக்குறை அகலும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். அரசுவழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிதாகச் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் செவ்வாய் இருப்பதால் புதிய தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலைவாய்ப்பை முன்னிட்டு எடுத்த முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அரசு வழி உத்தியோகம் இப்பொழுது கிடைக்கலாம். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் பகை மாறும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்து பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் பெருமாள், லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 19, 20, 23, 24, 30, 31, ஜனவரி: 4, 5. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    ×