என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024
அருகில் உள்ளவர்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தி அளிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். பயணங்களின்போது பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024
யோகமான நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024
பூசல்கள் அகன்று புதிய பாதை புலப்படும் நாள். வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்களில் வெற்றி ஏற்படும். கட்டிடப்பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024
முன்னேற்றம் கூட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024
அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024
கோவில் வழிபாட்டில் குதூகலம் வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி பலன் தரும். பகையொன்று நட்பாகலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வீடு கட்டும் முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகன பராமரிப்புச் செலவு உண்டு. உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் நட்பு கிட்டும். விரதம், வழிபாடுகளில் ஆர்வம் கூடும். பணவரவு திருப்தி தரும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழி சச்சரவு அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024
கவலைகள் தீர கண்ணனை வழிபட வேண்டிய நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் பலன்தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பணநடமாட்டம் அதிகரிக்கும்.