search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

    மேஷம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேஷ ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். சென்ற மாதத்தில் தேங்கிய சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். தொழில் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால், தொழில் முன்னேற்றம், புதிய ஒப்பந்தங்களில் லாபம் ஏற்படும். அதே நேரம் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    செவ்வாய் - சுக்ரன் பார்வை

    மாதத் தொடக்கத்தில் கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனை சப்தம பார்வையாகப் பார்க்கிறார். கும்ப ராசிக்கு சுக்ரன் சென்றபிறகும், அவரை அஷ்டமப் பார்வையாக செவ்வாய் பார்க்கிறார். எனவே இந்த மாதம் முழுவதுமே செவ்வாய் - சுக்ரன் பார்வை இருக்கிறது. உங்கள் ராசிக்கு தனம், குடும்பம், களத்திரம் ஆகியவற்றிற்கு அதிபதியானவர் சுக்ரன். அவரை மங்களகாரகனான செவ்வாய் பார்ப்பதால், குடும்பத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும். புத்திரப் பேறுக்காகக் காத்திருக்கும் தம்பதிக்கு நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் சூழ்நிலையும், பொருளாதாரத்தில் நிறைவும் ஏற்படும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும், பாக்கியாதிபதியாகவும் விளங்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெறுகிறார். எனவே நன்மையும், தீமையும் கலந்த பலன்களே நடைபெறும். குறிப்பாக விரயாதிபதி வக்ரம் பெறுவதால் விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். அதே நேரம் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    'பெற்றோர் தன்னிடம் காட்டும் பாசத்தைவிட மற்ற சகோதரர்களிடம் காட்டும் பாசம் அதிகமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்பு களின் அனுசரிப்பு குறையலாம். யோசித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதார நிலை உச்சத்தை எட்டும். கொடுக்கல் - வாங்கலில் சரளநிலை உருவாகும்.

    கைமாற்றாகவோ, கடனாகவோ வாங்கிய தொகையைக் கொடுத்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தானாகவே வரலாம்.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் போது, ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் இப்பொழுது தானாக வந்துசேரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நெருக்கடி நிலை அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவ-மாணவி களுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 30, 31, ஜனவரி: 4, 5, 9, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மேஷம்

    2024 கார்த்திகை மாத ராசிபலன்

    மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மேஷ ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே எல்லா காரியங்களிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் இது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    மருத்துவச் செலவுகளும், மற்ற வழிகளில் வீண் விரயங்களும் ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை வரலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வரவு திருப்தி தரும். என்றாலும் செலவு இருமடங்காகும்.

    குரு வக்ரம்

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியானவர், குரு. விரயாதிபதியான அவர் வக்ரம்பெறுவது நன்மைதான். என்றாலும் பாக்கியாதிபதியாகவும் அவர் விளங்குவதால், ஒருசில காரியங்களில் தடை, தாமதம் வரத்தான் செய்யும்.

    பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை. உற்றார், உறவினர்களின் பகை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகளை தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்களில் பொறுப்பு சொல்வதால், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    சனி - செவ்வாய் பார்வை

    கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதி பதியானவர், சனி பகவான். அவர் சிறப்பாக செயல்பட்டால்தான் தொழில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். ஆனால் பகைக் கிரகமான செவ்வாயின் பார்வையால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    ஒருவரையும் நம்பி செயல்பட இயலாது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். தன்னம்பிக்கை மட்டுமல்லாது, தெய்வ நம்பிக்கையும் அதிகம் தேவைப்படும் நேரம் இது. பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

    மகர - சுக்ரன்

    கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள், உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்யவும் முன்வருவர். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

    'புதிதாக முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவியும், எதிர்பாராத புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். 'நினைத்ததை சாதிக்க வேண்டும்' என்ற எண்ணம் மேலோங்கும்.

    செவ்வாய் வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். செவ்வாய், உங்கள் ராசிநாதனாக மட்டுமல்லாமல் அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் சில இடர்பாடுகள் நீங்கும். நீண்டநாட்களாக கைகூடாத காரியங்கள் கைகூடும். கடன்சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் நற்பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கலைஞர்கள் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். உடல்நலனில் கவனம் தேவை.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 16, 17, 20, 21, 22, டிசம்பர்: 2, 4, 8, 9, 13,14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மேஷம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    ஆலோசனை சொல்வதில் வல்லவர்களாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் செவ்வாய் வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். எனவே வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். விரயத்திற்கேற்ற லாபமும் கிடைக்கும். விரயாதிபதி குரு வக்ரம் பெறுவதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். சனி வக்ர நிவர்த்திக்குப் பிறகு ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசி செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். 'ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெறுகிறாரே' என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அஷ்டமாதி பதியாகவும் செவ்வாய் விளங்குவதால், நீச்சம் பெறுவது நன்மைதான். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

    இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. மருத்துவச் செலவு ஏற்படும்.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் ஒரு அற்புதமான நேரமாகும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்.

    மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கும். இனத்தார் பகைமாறும். எதிரி களின் தொல்லை குறையும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகம், தொழிலில் உன்னத நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இப்பொழுது சனி பலம்பெறுவதால் அதன் பார்வைக்குப் பலம் கூடுகிறது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.

    அதிகார வர்க்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வீடு மாற்றம், இடமாற்றம் தானாக வந்துசேரும். குடும்ப பிரச்சினைகளை சமாளிப்பது கடினம். பண நெருக்கடி ஏற்படும். பிறரை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தன - சப்தமாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய கடன்கள் வசூலாகும்.

    ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அலுவலகப் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் வந்துசேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் படிப்படியாக நடைபெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும்.

    கலைஞர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 21, 25, 26, நவம்பர்: 6, 7, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மேஷம்

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம்பிடித்த மேஷ ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி சுக்ரன் நீச்சம் பெற்றிருந்தாலும், குருவின் பார்வை மற்றும் பரிவர்த்தனை கிரகத்தின் சேர்க்கை ஆகியவற்றால் அவர் நீச்சபங்கம் அடைகிறார்.

    எனவே பொருளாதாரம், குடும்பம், உடல்நிலை, உத்தியோகம், தொழில் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமின்றி உங்கள் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். லாப ஸ்தானத்தில் உள்ள சனி, வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஒரு சில சமயங்களில் பணத் தட்டுப்பாடு வரலாம். அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் ஸ்தானாதிபதியான அவர் வக்ர இயக்கத்தில் இருப்பதால், தொழில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

    முக்கியப் பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது, உங்கள் மேற்பார்வை அவசியம் தேவை. ஒரு சில பயணங்களில் தடைகள் ஏற்பட்டாலும், எதிர்பாராத சில பயணங்கள் உங் களுக்கு லாபத்தைத் தேடித் தரும்.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். ஜீவன ஸ்தானத்தில் அவர் உச்சம் பெறும் இந்த நேரம், தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உயர்பதவி, ஊதிய உயர்வு கிடைக்கும்.

    அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இதுநாள் வரை பலமுறை பஞ்சாயத்து செய்தும் முடிவுக்கு வராத பாகப்பிரிவினை, இப்போது முடிவடையும். தொழிலை விரிவு செய்வதற்காக, கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும்.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் பலம்பெற்றிருக்கும் இந்த நேரம், உங்களுக்கு பொன்னான நேரமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

    வரன்கள் வாசல் தேடி வந்து மகிழ்ச்சியைத் தரும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெற வழிபிறக்கும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். அடகு வைத்த நகைகளை மீட்டு வந்து அழகு பார்ப்பீர்கள்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந்தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதார நிலை உச்சம்பெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறை வேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, தேவையான சலுகை களைப் பெறுவர்.

    வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்பு கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எடுத்த முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு சாதகமான நேரம் இது. மாணவ - மாணவி களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் கூடும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 17, 18, 22, 27, 28, அக்டோபர்: 9, 10, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மேஷம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    வரவு அறிந்து செலவு செய்ய நினைக்கும் மேஷ ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், விரயாதிபதி குருவுடன் சேர்ந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டேயிருக்கும்.

    சனியின் பார்வை உங்கள் ராசியில் பதி வதால் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடல்நலக் குறைபாடும், அதனால் மருத்துவச் செலவும் ஏற்படலாம். இனம்புரியாத கவலை உருவாகும். சனி - சூரியன் பார்வையால் பிள்ளைகள் வழியில் பிரச்சினைகளும், விரயங்களும் உருவாகலாம்.

    சனி- சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரைப் பார்க்கிறார். பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. அதிலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனும், லாப ஸ்தானத்தில் சனியும் இருப்பதால் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.

    அவர் களுக்கான சுபகாரியங்கள் பலவும் நடைபெறுவது போல் வந்து கைநழுவிச் செல்லும். பாகப்பிரிவினை முடிவடையாமல் போகலாம். அண்ணன், தம்பிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்புண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளில் இருந்து மாற்றம் ஏற்படும் சூழல் அமையும்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி, கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியான சுக்ரன் வலிமை இழக்கும் இந்த நேரத்தில், பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமலும், கொடுத்த கடனை வசூலிக்க முடியாமலும் திணறுவீர்கள். குடும்ப ஒற்றுமை குறையும்.

    குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், உங்களிடம் கேட்காமலேயே முடிவெடுத்து காரியங்களை செய்யத் தொடங்குவர். அதன் விளைவாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வந்த வரன்கள் கைநழுவிச் செல்லும். இக்காலத்தில் யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இதன் விளைவாக முக்கியப் புள்ளிகளின் சந்திப்பும், அதனால் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு அகலும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகி மகிழ்ச்சியைத் தரும். உடன் பிறப்புகள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர். உத்தியோகத்தில் இனிமை தரும் விதத்தில் இடமாற்றம் வந்துசேரும். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    சிம்ம - புதன்

    ஆவணி மாதம் 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அடியெடுத்து வைப்பது நல்ல நேரம்தான். வெற்றிகள் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது மதிப்பும், மரியாதையும் கூடும். மக்கள் செல்வங் களால் மேன்மை உண்டு. எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்து ஆதரவு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர் களுக்கு, தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் முயற்சி கைகூடும். கலைஞர் களுக்கு செல்வாக்கு மேலோங்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் பணியாற்றும் நிலை உருவாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 21, 27, 31, செப்டம்பர்: 1, 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மேஷம்

    ஆடி மாத ராசிபலன்

    எதையும் உற்சாகத்தோடு செய்யும் மேஷ ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இதனால் 'குரு மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே இந்த மாதத்தில், நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடைபெறுவதோடு, பொருளாதார வளர்ச்சியும் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் மாதம் இது.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    உங்கள் ராசிநாதன் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் விரயாதிபதி குருவோடு இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். எனவே விரயத்திற்கேற்ற தனவரவு வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழல் உருவாகும். தங்களுக்கோ, தங்கள் குடும் பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, திருமண வயதடைந்த தங்கள் பிள்ளைகளுக்கோ வரன் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த காரியம் நல்ல படியாக முடியும். 'இடம், பூமி வாங்க வேண்டும், வீடுகட்ட வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும் நேரம் இது.

    புதன்-வக்ரம்

    ஆடி 5-ந் தேதி கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 28-ந் தேதி வரை அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே இக்காலத்தில் சகோதர ஒற்றுமை கொஞ்சம் குறையலாம். உடன்பிறப்புகள் உங்கள் குண மறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். வேலைப்பளு கூடும். மேலதிகாரிகள், உங்கள் மீது கூடுதல் பொறுப்புகளை சுமத்தலாம். கொடுக்கல் - வாங்கலில் சில பாக்கிகள் மனதை உறுத்தும். அதே நேரத்தில் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடலாம். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு அதிகார யோகம் உண்டு.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது, மிகுந்த யோகம் தரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வர நினைப்பீர்கள். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சுக்ரனின் ஆதிக்கத்தால், சொத்து விற்பனையும், அதன் மூலம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபமும் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூட்டுமுயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. கலைஞர்களின் செல்வாக்கு உயரும். மாணவ-மாணவிகள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். பெண் களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 19, 20, 24, 25, 31, ஆகஸ்டு: 1, 4, 5, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    மேஷம்

    ஆனி மாத ராசிபலன்

    சுறுசுறுப்பாக செயல்பட்டு சுற்றம் போற்ற வாழும் மேஷ ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு செயல் படுவீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல சம்பவம் நடைபெறும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். என்றாலும் இம் மாதம் சனி வக்ரம் பெறுவதால் ஒரு சில சம யங்களில் அதிக விரயமும், வருமானத்தில் தடுமாற்றமும் ஏற்படலாம். கவனம் தேவை.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும்போது தொழிலில் சில இடையூறுகள் வரலாம். பணிச் சுமை அதிகரிக்கும். பங்குதாரர்கள் விலகிக்கொள்வ தாகச் சொல்லி அச்சுறுத்துவர். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் தாமதமாக வந்துசேரலாம். எளிதாக முடிய வேண்டிய காரியங்களைக் கூட போராடிப் பெற வேண்டிய நிலை உருவாகும்.

    உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுத்ததன் காரணமாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதுபோன்ற நேரங்களில் சனிக்கிழமை விரதம் இருந்து சனி பகவானை வழிபடுவது நல்லது. மற்றவர் களுக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் முன்பாக யோசித்து செயல்படுவது அவசியம். பொருளாதாரப் பற்றாக் குறையை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    கடக - புதன்

    உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆனி 12-ந் தேதி சுக ஸ்தானத்திற்கு செல்லவிருக் கிறார். உங்கள் ராசி அடிப்படையில் பார்க்கும் பொழுது, 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும்பொழுது வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் நீங்கள் வைத்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தாய்வழி ஆதரவு உண்டு. பழைய வாகனங் களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி களின் கெடுபிடி மாறும். அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், 4-ம் இடத்திற்கு வருவது பொன்னான நேரமாகும். புதிய பாதை புலப்படும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, உங்கள் ராசிநாதன் செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்கிறார். அவர் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் திருப்தி ஏற்படும். வருமானம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்ப முன்னேற்றம் கூடும் நேரம் இது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள், பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்குத் தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 22, 23, 27, 28, ஜூலை: 3, 4, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    மேஷம்

    வைகாசி மாத ராசிபலன்

    முடியாத காரியத்தை முடித்துக் கொடுக்கும் மேஷ ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். அதே சமயம் தனாதிபதி சுக்ரன், சகாய ஸ்தானாதிபதி புதனோடு இணைந்து உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு. வீடு மாற்றம், இடமாற்றம் மகிழ்ச்சி தரும். உடன்பிறப்புகள் வழியே திரு மணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசிக்கு தனாதிபதியான அவர், தன ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகமான நேரமாகும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். புணிபுரியும் இடத்தில் வீடு, வாகனம் வாங்க விண்ணப்பித்தவர்களுக்கு, அந்த முயற்சி கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நீண்ட நாட்களாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6-க்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்தில் வருவது நல்ல நேரம்தான். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். வாங்கிய கடனை கொடுத்து மகிழ வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா?' என்று யோசிப்பீர்கள்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிநாதன், உங்களுடைய ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உயர் பதவி யில் இருப்பவர்கள், உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சில சூட்சுமங்களை மேலதிகாரிகளே கற்றுக் கொடுப்பார்கள். உங்கள் பணி, மற்றவர்களின் மனதை ஈர்க்கும் விதத்தில் அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். சகாய ஸ்தானாதிபதி புதன், சகாய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும். செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். செய்தொழிலில் லாபம் உண்டு. வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் கைகூடிவரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்கும் சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு செல்லும்போது பொருளாதார நிலையில் திருப்தி காணப்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

    திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்கள், பலமான போட்டிகளுக்கு இடையில்தான் வெற்றியைப் பெற முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர் களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ-மாணவிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண் களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 14, 15, 26, 27, 28, ஜூன்: 1, 5, 6, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மேஷம்

    பங்குனி மாத ராசிபலன்

    பிறருடைய பிரச்சினைகளுக்கு நல்ல வழி கூறும் மேஷ ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்க நாளிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். அவரோடு லாபாதிபதி சனியும், தன - சப்தமாதிபதி சுக்ரனும் இணைந்திருக்கிறார்கள். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். ஜென்ம குருவின் ஆதிக்கத்தால் இடமாற்றம், வீடு மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு.

    செவ்வாய் -சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே செவ்வாய், கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் அங்கு லாபாதிபதி சனியோடு சேர்ந்து மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். எதிலும் துணிந்து செயல்பட இயலாது. எவ்வளவு பணம் வந்தாலும் உடனுக்குடன் செலவாகி மனக்கலக்கத்தை உருவாக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் இந்த நேரத்தில், கூட்டாளிகள் தங்களுக்குரிய பங்கைப் பிரித்துக் கேட்பதால் அச்சம் ஏற்படும். மற்றவர்களை நம்பி செயல்பட முடியாது. பழைய கடன்களை அடைக்க எடுத்த முயற்சிகள் கைகூடும். என்றாலும் புதிய கடனும் வாங்குவீர்கள்.

    உத்தியோகத்தில் அதிகாரிகள் மற்றும் சகப் பணியாளர்களின் ஆதரவு குறையும். இதனால் வாக்குவாதங்கள் ஏற்பட்டு 'விருப்ப ஓய்வில் வெளிவரலாமா?' என்று கூட சிந்திப்பீர்கள். இதுபோன்ற காலங்களில் செவ்வாய் மற்றும் சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை, யோகபலம் பெற்ற நாட்களில் செய்வது நல்லது. கும்பத்தில் தன - சப்தமாதி சுக்ரனும் இருப்பதால் சுபச் செலவுகளை மேற்கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    புதன் வக்ரம்

    நீச்ச வீடான மீனத்தில் சஞ்சரிக்கும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரம் பெறுகிறார். ஏற்கனவே நீச்சம் பெற்று சஞ்சரிக்கும் புதன் இப்பொழுது வக்ரம் பெற்று வலிமை இழப்பது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப, நல்ல பலன்கள் நடை பெறும். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனால், சகோதர ஒற்றுமை பலப்படும். புதிய உத்தியோக முயற்சி கைகூடும். கடன் சுமை குறையும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். புதிய பங்குதாரர்களால் பொருளாதாரம் உயரும்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு உச்ச வீடாகும். அவர் அங்குள்ள புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு உயர் பதவி உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு சிந்தனையில் தெளிவு பிறக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். பணத்தேவை பூர்த்தியாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 15, 16, 20, 21, ஏப்ரல்: 1, 2, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மேஷம்

    மாசி மாத ராசிபலன்

    திட்டமிட்டு செயலாற்றும் மேஷ ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் லாபாதிபதி சனி, லாப ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அது கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காரியம் இம்மாதம் நடைபெறும்.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதி பதியான புதன், லாப ஸ்தானத்திற்கு வருவது யோகமான நேரம்தான். சகோதர வர்க்கத்தினரால் நன்மைகள் கிடைக்கும். உங்கள் கூட்டு முயற்சிக்கு அவர்கள் உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். புதிய உத்தியோகத்திற்காக ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால் அது கைகூடும்.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளில், மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கும்போது 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படும். எனவே குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறப்பு களின் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். 'வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைத்து வருமானம் உயரும்.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது நன்மைதான். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவதால் சில நன்மை கள் நடைபெறும். எதிரிகள் விலகுவர். எடுத்த காரியத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். கடன் சுமை குறையும். உடல்நலம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். அதேசமயம் உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துவர். உறவினர்கள் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும்.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாபஸ்தானத்திற்குச் செல்லும்போது, தொழில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். கூடுதல் லாபம் கிடைக்கும். பஞ்சமாதிபதி சூரியனும் புதனோடு இணைந்து சஞ்சரிப்பதால், பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறும். அவர்களின் மேற்படிப்புக்காகவும், வெளிநாடு செல்லும் வாய்ப்பிற்காகவும் முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு ஊதிய உயர்வின் காரணமாக இடமாற்றம் செய்யும் வாய்ப்பு அமையும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு, போட்டிகளை சமாளிக்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 17, 18, 22, 23,

    மார்ச்: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மேஷம்

    தை மாத ராசிபலன்

    தன்னை சார்ந்தவர்களும் முன்னேற நினைக்கும் மேஷ ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிந்து `குரு மங்கள யோக'த்தை உருவாக்குகிறது. எனவே சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானச் சனியின் ஆதிக்கத்தால் பொருளாதார நிலை உச்சம் பெறும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கும் குருவால் வளர்ச்சி அதிகரிக்கும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் குரு என்பதால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல் தானாக விலகும். சிந்தனைகள் வெற்றி பெறும் விதத்தில் செயல்பாடுகள் இருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தூர தேசத்தில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும். வாகன யோகம் உண்டு. இட மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலைக்கு முயற்சி செய்திருந்தால் அது கிடைக்கும். உதிரி வருமானங்களும் உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்திருந்தவர்களுக்கு அது கை கூடும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். எனவே `புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணி அமையலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் உங்களைத் தேடி வரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கலாம்.

    மகர செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறும் இந்த நேரம் உடல்நலம் சீராகும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, கல்யாண சீர்வரிசைப் பொருட்களை வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நாட்பட்ட நோய் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் எளிதில் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து அலைமோதும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நேரமிது. பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 21, 22, 26, 27, பிப்ரவரி: 6, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மேஷம்

    மார்கழி மாத ராசிபலன்

    மற்றவர் உணர்வுகளைப் புரிந்து செயல்படும் மேஷ ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு 3, 6-க்கு அதிபதியான புதனும் இணைந்துள்ளார். தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.

    சனிப்பெயர்ச்சியும் இந்த மாதம் நிகழ இருப்பதால் லாப ஸ்தானத்திற்கு வரும் சனி பகவானால் பொருளாதாரநிலை உயரும். அருளாளர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுக்கும்.

    கும்ப ராசியில் சனி

    மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நற்பலன்களை உங்களுக்கு வழங்கப்போகின்றது. முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தொழில் அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து மறையும்.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய ராசிக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்திற்கு வரும்பொழுது எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப்பிடிப்போடும் செயல்பட இயலாது. தனவரவு வந்தாலும், வந்த மறுநிமிடமே செலவாகி விடும். எதிர்பாராத விரயங்கள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் வழங்கமாட்டார்கள். குடும்பப் பிரச்சினை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

    தனுசு-செவ்வாய்

    தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாம் இடத்திற்கு வருவது யோகம் தான். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். தந்தைவழி உறவில் இருந்த விரிசல் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தீர்த்த யாத்திரைகளையும், தெய்வ தரிசனங்களையும் மேற்கொள்வீர்கள். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. பொதுவாக குரு வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் குருமங்கள யோக அடிப்படையில் இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும். ெவளிநாடு செல்பவர்கள் அங்கேயே வீடு வாங்கலாமா, அல்லது சொந்த ஊரில் சொத்துக்கள் வாங்கலாமா என்று சிந்திக்கும் நேரமிது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

    வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வால் மகிழ்ச்சி காண்பர். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு பிரச்சினைகளில் இருந்து விடுபடும் சூழ்நிலை அமையும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 19, 20, 25, 26, 29, 30,

    ஜனவரி: 10, 11, 14

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு

    ×