என் மலர்
மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்
மேஷம்
கார்த்திகை மாத ராசிபலன்
உதவி செய்து பிறர் உள்ளத்தைக் கவரும் மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு பஞ்சமாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்திருக்கின்றார்கள். எனவே போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இட மாற்றங்கள், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். பொருளாதாரப் பற்றாக்குறை தீர எடுத்த புதுமுயற்சி பலன்தரும்.
வக்ர குருவின் ஆதிக்கம்
மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின் றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவரது வக்ர இயக்க காலத்தில் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் வரலாம். அண்ணன்-தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பூர்வீக சொத்துகளை விற்கும் சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும்.
பயணங்களால் பலன் கிடைக்காது. எனவே எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. விரயாதிபதியாகவும் குரு விளங்குவதால் திடீர், திடீரெனச் செலவுகள் வந்து மனதை வாடவைக்கும். ஏதேனும் ஒரு பொருள் வாங்கவோ அல்லது சுபகாரியங்கள் நடத்தவோ சேமித்த தொகை வேறு வழியில் செலவாகலாம். வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானை உள்ளன்போடு வழிபடுவதன் மூலம் நல்ல செயல்கள் நடைபெற வழி பிறக்கும்.
துலாம்-சுக்ரன்
உங்கள் ராசிக்கு 2, 7ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தன சப்தமாதிபதியான சுக்ரன் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். மனதில் நினைத்ததை மறு கணமே செய்ய முடியவில்லையே என்ற கவலை இருக்கும். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் பெயர்ச்சியாகி வருகின்றார்.
சப்தமாதிபதி பலம்பெறும் இந்த நேரத்தில் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். இல்லறம் நல்லறமாக அமையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பொருளாதார நிலை உயரும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவதோடு சம்பள உயர்வு வருவதற்கான சூழ்நிலையும் உருவாகும்.
தனுசு-புதன்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானம் எனப்படும் இடத்திற்கு கார்த்திகை 14-ம் தேதி வருகின்றார். அங்கிருந்தபடி தன் வீட்டைத் தானே பார்ப்பது நன்மை தான். வழக்கு கள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியக் குறைபாடு கள் அகலும். ஆதாயம் தரும் விதத்தில் பயணங்கள் உண்டு.
மறைமுக எதிர்ப்புகள் மாறும். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும்.
மேஷம்
ஐப்பசி மாத ராசிபலன்
18.10.2023 முதல் 16.11.2023 வரை
தன்னம்பிக்கையோடு செயல்படும் மேஷ ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மீது அவரது பார்வை பதிகின்றது. எனவே 'குரு மங்கள யோகம்' உருவாகின்றது. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
சனி வக்ர இயக்கம்!
ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி, வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகி பலமடைவது யோகம்தான். எனவே இனி தொழில் வளம் சிறப்பாக இருக்கும். குறுக்கீடு சக்திகள் அகலும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வருமானம் உயர வழிபிறக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு மேலிடத்து ஆதரவும், தலைமைப் பதவிகளும் தானாகக் கிடைக்கலாம். புதிய நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இருக்கும் நிறுவனமே உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர நிலையில் இருக்கும் பொழுது தந்தை வழியில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத் தொல்லையும், வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தடைகளும் ஏற்படலாம். வியாழன் விரதமும், குரு வழிபாடும் வெற்றிக்கு வித்திடும்.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தனாதிபதியாக விளங்கும் சுக்ரன் நீச்சம் பெறுவதால் பணப்புழக்கம் குறையும். புனிதப் பயணங்களால் விரயங்கள் ஏற்படும். கைகூடுவது போல் இருந்த கல்யாண முயற்சி கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 14-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 8-ல் வரும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். இதுபோன்ற காலங்களில் பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள்.
போட்டிகளுக்கு மத்தியில் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நாடி வரும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் உண்டு. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யம் நாட்கள்: அக்டோபர் 20, 21, 22, 25, 26, நவம்பர் 1, 2, 5, 6
மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.
மேஷம்
புரட்டாசி மாத ராசிபலன்
18-09-2023 முதல் 17-10-2023 வரை
விடாமுயற்சியே வெற்றி தரும் என்று கூறும் மேஷ ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் இருக்கும் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. கன்னி ராசியில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எண்ணிய காரியங்கள் நடந்தேற ஏராளமாகச் செலவிடும் சூழல் உருவாகும்.
புதன் வக்ரம்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் புரட்டாசி மாதம் 10-ந் தேதி கன்னி ராசியில் வக்ரம் பெறுகிறார். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகும். புதன் வலிமை இழந்திருப்பது யோகம்தான். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிப்பது ஆறாம் இடமாகும். அந்த இடத்திற்கு அதிபதி வலிமை இழக்கும் பொழுது எதிரிகள் விலகுவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். உடல்நலம் முற்றிலும் சீராகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். கடன்சுமை குறையப் புதிய வழிபிறக்கும். தொடர்ந்து பொருளாதார பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு, இப்பொழுது சரளமான பணப்புழக்கம் ஏற்பட்டு சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
துலாம் - செவ்வாய்
புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். மேலும் குரு பார்வையால் குருமங்கல யோகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக காலம் காலமாக காத்திருந்தும் நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். கட்டிய வீட்டைப் பழுதுபார்ப்பது போன்றவற்றிலும் கவனம் செலுத்த இயலும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு பணிபுரியச் செல்லலாமா?' என்று சிந்திப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல காரியம் நடைபெறும். தொழில் வெற்றி நடைபோடும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலையை உயர்த்த வழிவகுத்துக் கொடுப்பர்.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான புதன் சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். மாமன், மைத்துனர் வழியில் சுமுகமான உறவு ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணங்களால் பலன் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் புதிய பங்குதாரர்களால் வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். மாணவ-மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பா்: 23, 24, 27, 28, அக்டோபர்: 4, 5, 8, 9, 10. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
மேஷம்
தமிழ் மாத ராசிபலன்கள்
18-08-2023 முதல் 17-09-2023 வரை உழைப்பின் மூலமாக உயர்வை எட்டும் மேஷ ராசி நேயர்களே!
ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன.
கூட்டுக்கிரக யோகம் இருப்பதோடு, 'புத ஆதித்ய யோகம்', 'சந்திர மங்கல யோகம்', 'புத சுக்ர யோகம்', 'குரு மங்கல யோகம்' ஆகிய யோகங்களும் இருப்பதால், உங்களின் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். கடக - சுக்ரன் ஆவணி மாதம் 1-ந் தேதி முதல், கடக ராசிக்கு சுக்ரன் வக்ரமாகி செல்கிறார்.
உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதி சுக்ரன் என்பதால், அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. புதிய முயற்சிகளில் ஒன்றிரண்டு தாமதப்படும். அதிக ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்த தொழிலில், ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாமல் போகலாம். கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள்.
கன்னி - செவ்வாய் ஆவணி 2 -ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்திற்கு வருகிறார். 8-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்திற்கு வருவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, சில நல்ல காரியங்களும் இப்பொழுது நடைபெறும்.
ஆதாயம் தரும் விதத்தில் பயணங்கள் அமையும். ஒரு சிலருக்கு இடமாற்றமும் ஏற்படலாம். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, வக்ர இயக்கத்தில் மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, இதுவரை லாப ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரித்தார். இனித் தொழில் ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். எனவே தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பிவரும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. வியாபாரப் போட்டிகளை சமாளிக்க புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார்.
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவதால் உடன்பிறப்புகளின் வழியில் சுமுகமான பேச்சுவார்த்தை உருவாகும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். வராத பாக்கிகள் வசூலாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ், கீர்த்தி மேலோங்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும் காலம் என்பதால் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 26, 27, 31, செப்டம்பர்: 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
மேஷம்
தமிழ் மாத ராசிப்பலன்
17.7.23 முதல் 17.8.23 வரை
நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்ற மேஷ ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் கிரக நிலைகள் சாதகமாகவே இருக்கின்றன. 'புத ஆதித்ய யோகம்', 'குரு மங்கல யோகம்', 'சுக்ர மங்கல யோகம்' போன்றவை அமையும் விதத்தில் கிரக நிலைகள் இருப்பதால், பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் திருப்பங்களும், திரவிய லாபமும் உண்டு.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று சொல்லக்கூடிய குரு பகவான், மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தெய்வ பலம் உங்களை வழிநடத்திச் செல்லும். எனவே கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு அனுகூலம் தரும் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, புகழ்பெற்ற புராதனக் கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கல்யாணம் சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும். பூர்வீக சொத்து, பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
குருவின் பார்வை பலத்தால் சப்தம ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தங்கு தடைகள் தானாக விலகும். ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருந்தாலும் குரு பார்வை பதிவதால் இதுவரை உங்களுக்கு எந்தெந்த செயல்பாடுகளில் எல்லாம் சிக்கல்கள் இருந்ததோ அவை அனைத்தும் விலகி நன்மைகளை வழங்கப் போகிறது.
உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகள் செய்தால் அது கைகூடும். 9-ம் இடத்தைக் குரு பகவான் பார்ப்பதால் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். குருவை வியாழக்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களை பெறமுடியும்.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். நம்பிக்கைக்குரிய விதத்தில் நண்பர்கள் நடந்துகொள்வர். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் எதிர்பாராத விதத்தில் வந்துசேரும். வழக்குகள் சாதகமாக அமையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரும் சந்தர்ப்பங்களால் வளர்ச்சி கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். மாணவ-மாணவிகள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே மற்றொரு தொகை கரங்களில் புரளும். பொறுமை தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 19, 20 ஆகஸ்டு: 1, 2, 4, 5, 10, 15, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
மேஷம்
தமிழ் மாத ராசிப்பலன்
நம்பியவர்களுக்கு கைகொடுத்து உதவும் மேஷ ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நீச்சம் பெற்ற உங்கள் ராசிநாதன், சனியைப் பார்க்கிறார். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு- கேதுக்களின் ஆதிக்கம் இருப்பதால் ஏற்ற- இறக்கம் கலந்த நிலையே அமையும்.
மிதுன - புதன்
ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது புதனுக்கு சொந்த வீடாகும். அவர் அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். அரசு வழியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால், அது கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாயின் மீது பதிகிறது. இதனால் 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது. எனவே இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும். குரு பார்வையைப் பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொள்வதோடு, குருவோடு இணைந்திருக்கும் ராகுவையும், அதைப் பார்க்கும் கேதுவையும் யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் தடைகள் தானாக விலகும். தக்க விதத்தில் பொருளாதார நிலை உயரும். தொழிலில் இருக்கும் குறுக்கீடுகள் அகலும்.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். அதே நேரம் குரு பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுவதால் வியாபாரம் வெற்றிநடை போடும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெளிநாட்டில் இருக்கும் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பாகப்பிரிவினை சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு செல்வது நன்மை தான். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் தகவல்கள் வந்துசேரும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடைவர். கலைஞர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ-மாணவிகளுக்கு தள்ளிப் போட்ட முயற்சிகள் தானாக நடைபெறும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக உழைப்பும், அதற்கேற்ற பலனும் உண்டு. பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 17, 18, 22, 23, ஜூலை: 3, 4, 7, 8, 14,15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
மேஷம்
தமிழ் மாத ராசிப்பலன்
15.5.23 முதல் 15.6.23 வரை
வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான குணமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாதத் தொடக்கத்திலேயே நீச்சம் பெற்று சனியைப் பார்க்கிறார். விரயாதிபதி குரு உங்கள் ராசியிலேயே இருக்கிறார். லாபாதிபதியான சனி, லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். ராகு -கேதுக்களின் பலம் கூடுதலாக இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும்.
ராகு-கேது சஞ்சாரம்
மாபெரும் கிரகங்களின் வரிசையில் 'சாயா கிரகம்' என்று அழைக்கப்படும் கிரகங்கள், ராகு - கேதுக்கள் ஆகும். நிழல் கிரகங்களாக இருந்து அவை பின்னோக்கிச் சென்றாலும், வாழ்க்கையில் நாம் முன்னேற்றிச் செல்ல வழிவகுத்துக் கொடுக்கும். ஜென்மத்தில் ராகு, ஏழில் கேது என்று இருப்பதால் உங்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. எனவே அதற்குரிய சர்ப்பதோஷ நிவர்த்தி பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில், அனுகூலமான தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது. முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம். காரியம் முடிவடையும் நேரத்தில் விட்டுப் போகலாம். ஏற்றமும் இறக்கமும் வந்து கொண்டேயிருக்கும். 'எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது.
கடக - சுக்ரன்
வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு கைகூடும். சுக்ரன் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே நீண்ட நாட்களாக இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, திருமணம் கைகூடிவரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய திருப்பங்களை சந்திப்பீர்கள். வியாபாரம், தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு, அனைத்து சலுகைகளையும் பெறும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் உள்ளத்தை மகிழ்விக்கும்.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி ரிஷப ராசிக்கு புதன் வருகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். சகாய ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், சுக்ரனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, வெளிநாடு செல்வது சம்பந்தமாகவோ எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அளவோடு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு சலுகைகளை பெறுவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பு சிறப்பாக அமையும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 20, 21, 24, 25, 26, ஜூன்: 5, 6, 10, 11.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
மேஷம்
தமிழ் மாத ராசிப்பலன்
விடா முயற்சி வெற்றி தரும் என்று கூறும் மேஷ ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். சனி பகவான் லாப ஸ்தானத்தில் வீற்றிருக்கின்றார். எனவே நீங்கள் நினைத்ததெல்லாம் நடைபெறும். எடுக்கும் முயற்சிகள் எளிதில் வெற்றிபெறும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கிறது. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை, சொல்லியபடியே நிறைவேற்றுவீர்கள். ஆண்டின் தொடக்கமே அமோகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நவக்கிரங்களில் நான்கு கிரகங்கள் வலிமையோடு வீற்றிருந்து மாதம் தொடங்குவதால், மகிழ்ச்சி அதிகரிக்கும் மாதமாகவே இம்மாதம் அமையப் போகின்றது.
சனியின் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்குப் பதினோறாம் இடமான லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கின்றார். எனவே தொழில் வெற்றி நடைபோடும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். கூட்டாளிகளின் ஆதரவோடு கூடுதல் லாபம் கிடைக் கும் நேரம் இது.
சனி உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர். எனவே, அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக லாபம் வர வழிவகுத்துக் கொடுப்பார். வாக்கிய கணித ரீதியான இந்தப் பெயர்ச்சி திடீர்அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்கப்போகின்றது.
மேஷ - குரு
சித்திரை 9-ந் தேதி உங்கள் ராசியான மேஷ ராசிக்கு, குரு பகவான் பெயர்ச்சியாகி வருகின்றார். ஜென்ம குருவாக இருந்தாலும் அவரது பார்வைக்கு பலன் அதிகம். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப அந்த மூன்று ஸ்தானங்களும் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும்.
இதனால் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் சுபச்செய்திகள் வந்துசேரும். அவர்களின் கல்வி முன்னேற்றம், கல்யாண வாய்ப்பு போன்றவை கைகூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வியாபாரத்தில் பிரமிக்கத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்படலாம். வேலைக்கு செல்பவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளைக் கண்டு, அவர்களுக்கு மேலதிகாரிகள் உயர் பதவியை வழங்குவர்.
மிதுன - சுக்ரன்
சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியான சுக்ரன், 3 ம் இடத்திற்கு வரும்பொழுது உடன்பிறப்புகள் வழியில் நல்ல காரியம் நடைபெறலாம். அவர்களின் கல்யாணம் மற்றும் கடல்தாண்டிச் செல்லும் வாய்ப்புகளுக்கு உறுதுணைபுரிவீர்கள். சகோதர வர்க்கத்தினரின் சுப காரியங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
இம்மாதம் விநாயகப்பெருமான் வழிபாடு வெற்றியை வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 16, 17, 22, 23, 24, 28, 29, மே: 9, 10, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
மேஷம்
தமிழ் மாத ராசிப்பலன்
15.3.2023 முதல் 13.4.23 வரை
எல்லோரிடமும் சரளமாகப் பேசும்மேஷ ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மிதுனத்தில் சஞ்சரித்து மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் குறைய வேண்டுமானால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அசதி ஏற்படாமல் இருக்க ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தனாதிபதி சுக்ரன், உங்கள் ராசியிலேயே இருப்பதால் பொருளாதார நிலை திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக விளங்குபவர் சனி. அவர் மீது செவ்வாயின் பார்வை பதியும் பொழுது தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். தொழிலில் போட்ட முதலீட்டை எடுப்பது பற்றி யோசிப்பீர்கள். லாபம் வருவதற்கு புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். ஒருசிலர் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் சூழ்நிலை ஏற்படலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள், ஆதாயத்தை பெறுவது என்பது அரிதுதான். பங்குதாரர்களின் அச்சுறுத்தல் கூடும். அவர்களே தொழிலை நடத்துவதாகச் சொல்லி உங்களுக் குரிய பங்குத் தொகையைக் கொடுப்பதாகவும் ஏற்பாடு களைச் செய்வர். மனக்குழப்பம் கூடும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் அனுசரிப்பு குறையும். கொடுக்கப்பட்ட பொறுப்பை திருப்திகரமாக முடிக்க இயலாது.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். வெற்றிகளின் ஸ்தானாதிபதியாக புதன் விளங்குவதால் வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். சுற்றத்தார் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிக்க நினைக்கலாம். சகோதர வர்க்கத்தினர் உங்களோடு இணைந்து செயல்பட முன்வருவர். பாகப்பிரிவினைகள் கூட சுமுகமாக முடியும்.
ரிஷப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு தனாதிபதியான சுக்ரன், பங்குனி 24-ந் தேதி தன ஸ்தானமான ரிஷபத்திற்குச் செல்கிறார். இதனால் பற்றாக்குறை பட்ஜெட் மாறும். மிதமிஞ்சிய பொருளாதாரம் வந்துசேரும். தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உங்கள் கை மேலோங்கும். தொழில்புரிபவர்கள் விரிவாக்கம் செய்ய எடுத்த முயற்சி பலன்தரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள் மட்டுமல்லாமல், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். மாணவ - மாணவியர்கள், படிப்பில் ஆர்வம் காட்டினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். பெண்களுக்கு உடல்நலம் சீராகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும்.
இம்மாதம் வள்ளி - தெய்வானை உடனாய முருகப் பெருமானை வழிபட்டால் வளர்ச்சி உண்டாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 15, 16, 20, 21, 26, 27, 31, ஏப்ரல்: 1, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
மேஷம்
தமிழ் மாத ராசிப்பலன்
13.2.2023 முதல் 14.3.2023 வரை
வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்படும் மேஷ ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் இருக்கிறது. விரய ஸ்தானத்தில் குரு இருப்பதால், விரயங்கள் அதிகரிக்கும். என்றாலும் அதற்கேற்ப வருமானமும் வந்துசேரும். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் தாய் வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்கிக் கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் மங்கல ஓசை கேட்கும் சூழல் உருவாகும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெறும்பொழுது, பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். பழைய பாக்கிகளை கொடுத்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் உதிரி வருமானங்கள் வந்துசேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாடு சம்பந்தமான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு, சகோதர-சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். 6-க்கு அதிபதியான புதன், 12-ம் இடத்தில் நீச்சம் பெறுவது யோகம்தான். மேலும் குருவோடு புதன் சேர்வதால், 'நீச்சபங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. அது மட்டுமின்றி 'விபரீத ராஜயோக' அடிப்படையிலும் பல நல்ல சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார வசதி பெருகும். வாகனம் வாங்கும் யோகம் முதல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து யோகமும் வந்து சேரும். வரன்கள் முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். தனாதிபதியான சுக்ரன், உங்கள் ராசிக்கு வரும்போது தனவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பெண் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, எடுத்த முயற்சி வெற்றிபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிக மிக கவனம் தேவை. குறிப்பாக ஆரோக்கியத்திலும், அதிகார வர்க்கத்தினருடன் பழகும் பொழுதும் பிரச்சினைகள் உருவாகலாம். மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்ப்பதால் திடீர் திடீரென மாற்றங்கள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் வீண்பழி வந்துசேரலாம். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். சுய ஜாதக அடிப்படையில் வழிபாடுகளை மேற்கொண்டால் நல்லது நடக்கும்.
இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 16, 17, 21, 22, 28, மார்ச்: 1, 4, 5.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
மேஷம்
தமிழ் மாத ராசிப்பலன்
16.12.22 முதல் 14.1.23 வரை
சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்டும் மேஷ ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் ராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய் வக்ரம் பெற்று 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாக கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது அரிது. உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் பாடுபடும் சூழ்நிலை உருவாகும். செவ்வாய் வக்ர நிவர்த்தி வரை பொறுமையாக செயல்படுவது நல்லது.
புதன் வக்ர இயக்கம்
மார்கழி 3-ந் தேதி, தனுசு ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகோதர சகாய ஸ்தானம் மற்றும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கும் அதிபதியான அவர், வக்ரம் பெற்று வலிமை இழக்கும் பொழுது உடன்பிறப்புகளின் வழியே சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகம் மற்றும் தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு, சகப் பணியாளர் ஒருவருக்கு சென்றடையலாம். ஆரோக்கியத் தொல்லை குறையும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடலை சீராக்கிக் கொள்வது நல்லது. மாமன், மைத்துனர் வழியில் உள்ள உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
மகர-சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். வாக்கு, தனம், குடும்பம், வாழ்க்கைத் துணை ஆகிய இடங்களைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதியான அவர், தொழில் ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். எதிர்பார்த்தபடியே தொழிலில் லாபம் கிடைக்கும். பணநெருக்கடி அகலும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் தற்போது துரிதமாக நடைபெறும். குடும்பத்தில் 'மங்கல ஓசை கேட்கவில்லையே' என்ற கவலை அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
புதன் வக்ர நிவர்த்தி
மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சகாய ஸ்தானாதிபதி புதன் வக்ர நிவர்த்தியாவதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். சகப் பணியாளர்களுக்கு மத்தியில் உங்கள் கை மேலோங்கும். ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள் கூட சாதாரண சிகிச்சையின் மூலமாகவே உங்கள் ஆரோக்கியம் சீராக வழிவகுத்துக் கொடுப்பர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் இனிய காலமாக அமையும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து சில காரியங்களை முடிப்பீர்கள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். செவ்வாய் உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் பலம்பெறும் இந்த நேரத்தில் கேட்டது கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். பொருளாதார பற்றாக்குறை அகலும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உடன்பிறப்புகளின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மாறும். மூத்த சகோதர வழியில் ஏற்பட்ட முரண்பாடான கருத்துக்கள் அகலும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கி பயணிக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். மருத்துவச் செலவுகள் குறையும். மனக்குழப்பம் அகலும். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டு.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 23, 24, 28, 29, ஜனவரி: 4, 5, 8, 9. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
17.11.21 முதல் 15.12.21 வரை
வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், உங்கள் ராசியில் உள்ள சந்திரனை பார்ப்பதால் 'சந்திர மங்கள யோகம்' உருவாகின்றது. குரு பகவான் இப்பொழுது லாப ஸ்தானத்திற்கு வந்துவிட்டார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
செவ்வாய்-சனி பார்வைக் காலம்
மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. சனியின் பார்வை, செவ்வாய் மீதும், செவ்வாயின் பார்வை சனியின் மீதும் பதிகின்றது. உங்களைப் பொறுத்தவரை இந்த பார்வை நன்மையே செய்யும். செவ்வாயோடு சகாய ஸ்தானாதிபதி புதனும் இருப்பதால் தொழில் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வழக்குகள் சாதகமாக மாறும்.
விருச்சிக புதனின் சஞ்சாரம்
கார்த்திகை முதல்நாளே விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைப்பது யோகம் தான். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியப் பாதிப்புகள் அடிக்கடி தலைதூக்கும்.
தனுசு புதனின் சஞ்சாரம்
கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகின்றார். எனவே பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். செய்தொழிலில் இருந்த மந்த நிலை மாறி வெற்றிநடைபோடும். தந்தை வழியில் இருந்த விரிசல் மாறும். கல்யாணம், காது குத்து, மணி விழா போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.
மகர சுக்ரனின் சஞ்சாரம்
கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு. எனவே இந்த நேரத்தில் வீடு வாங்கலாமா? இடம் வாங்கலாமா? தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றலாமா? என்றெல்லாம் சிந்திப்பீர்கள். பிற இனத்தாரின் கூட்டு முயற்சியோடு சாதனைகள் நிகழ்த்தும் நேரம் இது.
விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். மனக்குழப்பங்கள் அதிகமாக ஏற்படும். உத்தியோகத்தில் கடுமையாகப் பணிபுரிந்தும் மேலிடத்து ஆதரவு கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வெற்றிகள் வந்து சேர குரு பகவானை வழிபடவும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 24, 25, 26, டிசம்பர்: 6, 7, 10, 11
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.