search icon
என் மலர்tooltip icon

    மேஷம்

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    லட்சியங்களும், கனவுகளும் நிறைந்த மேஷ ராசியினருக்கு பிறக்கப் போகும் குரோதி ஆண்டு மிகச் சிறப்பான ஏற்றம் நிறைந்த ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.

    தன குருவின் பலன்கள்:

    ஜென்ம குருவாக சனியின் பார்வையில் நின்று தர்ம கர்மாதிபதி யோகம் வழங்கிய குருபகவான் மே 1, 2024 முதல் தன ஸ்தானம் செல்வது முதல் தரமான யோகம். தன ஸ்தானத்தில் 6, 8, 10ம் மிடத்தை பார்வையிடுகிறார். 6ம்மிடம் என்பது ருண, ரோக, ஸ்தானமாக இருந்தால் கூட அது உப ஜெய ஸ்தானம். குருவின் 5ம் பார்வை உப ஜெய ஸ்தானத்தில் பதிவதால் வெற்றிகள் உங்களைத்தேடி வரும்.

    எதிரிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். நிம்மதியும் தைரியமும், தெம்பும் உங்களை வழி நடத்தும். தாய்மாமன் மூலம் உங்களுக்கு நல்லது நடக்கும்.

    வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். 7ம் பார்வையால் அஷ்ட ஸ்தானத்தை பார்ப்பதால் அதிர்ஷ்டம் உங்களை அரவணைக்கும். 8ம்மிடம் என்பது பண பர ஸ்தானம். விபரீத ராஜ யோகம்.

    விட்டதை பிடிக்கும் நேரம். இதுவரை நீங்கள் அனுபவித்த பிரச்சனைகள், சங்கடங்கள், கஷ்டங்கள், குறைந்து, உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படும்.

    நீண்ட நாட்களாக இருந்து வந்த நீதிமன்ற வழக்குகள், பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்ப்பு கிடைத்து மனநிறைவு அடைவீர்கள். எதிர்காலத் தேவைக்காக அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். 9ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில், உத்தியோக அனுகிரகம் பல விதத்தில் நற்பலன்களை அள்ளித் தருவதாக இருக்கும்.

    வெற்றிகளை அள்ளி குவிப்பீர்கள். 10ம்மிடம் என்பது தொழில் ஸ்தானம் மட்டுமல்ல. கர்ம ஸ்தானமாகும். புத்திரப் பேறில் நிலவிய தடைகள் விலகி கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். இதுவரை சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும்.எதிரில் பார்த்தாலும் பார்க்காமல் விலகிச் சென்ற சகோதரர் நலம் விசாரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.

    லாப சனியின் பலன்கள்

    மேஷ ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் நிற்கும் சனி தனது 3ம் பார்வையால் ராசியை பார்க்கிறார். எதையும் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உண்டாகும்.எத்தனை அலைச்சல்கள் இடமாற்றங்கள் வந்தாலும் மனஉறுதியும் நம்பிக்கையும் தளராது. வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும்.

    உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். 7ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். பணம் எனும் தனம் சமூக அங்கீகாரம், பெற்றுத் தரும்.ராஜ மரியாதை கிடைக்கும். தாராள பணவரவால் கடன் பிரச்சினைகள் குறையும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். மனக்கவலைகள் அகலும். சமுதாயத்தில் ஒரு கவுரவமான நிலையை எட்டக் கூடிய யோகமும் உயர் பதவி அதிர்ஷ்டமும் உள்ளது.

    வாழ்க்கைத் துணை, பிள்ளைகளுக்கு ஏற்பட்ட ஆரோக்கிய கேடு சீராகும். தாய்மாவுடன் ஏற்பட்ட மனச்சங்கடம் மாறும். 10ம் பார்வை அஷ்டம ஸ்தானத்தை பார்க்கிறார். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும்.

    தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனையால் எதிர்கால கல்வி பற்றிய நல்ல முடிவு கிடைக்கும்.பருவ வயது பிள்ளைகளை பெற்றோர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பது நல்லது.

    விரய ராகு / ருண, கோகு கேதுவின் பலன்கள்

    ராசிக்கு 12ல் ராகுவும் 6ல் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். 6ம்மிடம் என்பது ருண, ரோக. சத்ரு ஸ்தானம், உப ஜெய ஸ்தானம். 12ம்மிடம் என்பது அயன, சயன ஸ்தானம், வெளிநாட்டு பயணம் பற்றிக் கூறுமிடம். யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும்.தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும்.

    எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். அரசுப்பணி, வெளிநாட்டுப் பணி போன்ற விருப்பங்கள் நிறைவேறும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு செல்லலாம்.

    எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் நிலுவை சம்பளம் மனதை மகிழ்விக்கும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். வீண் செலவுகள், விரயங்கள் இருந்தாலும் சமாளிக்க முடியும். நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். உற்றார், உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். விபரீத ராஜ யோகத்தால் உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும்.

    6ம்மிட கேதுவால் ஏற்படும் உடல் உபாதைகளை இயற்கை உணவுகளை உண்பதால் ஆரோக்கியத் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.

    சிலருக்கு புதிதாக எதிர்பாலின நட்பு கிடைக்கும். பெண் வழிப் பிரச்சனைகள் ஏற்படலாம்.சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு. ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

    அசுவினி:

    கேது பகவானின் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடதமிழ் புத்தாண்டில் எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும். வசீகரமான தோற்றம் ஏற்படும். ஆன்ம பலம் பெருகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் தொடங்கலாம்.

    சுபவிரயம், சுப மங்கலச் செலவு உண்டாகும். கருத்தரிப்பில் சிரமம் உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சனை ஒரளவு குறையும்.

    தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும். சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். சில குழந்தைகள் பள்ளி மாறலாம். கால பைரவரை வழிபட காலத்தால் ஏற்படும் இன்னல்கள் நீங்கும்.

    பரணி:

    சுக்ர பகவானின் பரணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தமிழ் புத்தாண்டான குரோதி வருடத்தில் மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். கடன், வட்டி தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.

    எதிரிகள் தொல்லை குறையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும்.

    வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் நல்ல நேரம். புதிய சொத்துக்கள், உயர்ரக வாகனங்கள் சேரும். மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும். தேவையற்ற கற்பனை, சிந்தனைகளை தவிர்க்கவும்.

    மனதிற்கு பிடித்த வரன் அமையும். குடும்ப பெரியோர்களின் அன்பும் நல் ஆசியும் கிடைக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். அரசு அங்கீகாரமற்ற வங்களில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கவும்.

    கிருத்திகை 1

    சூரிய பகவானின் கிருத்திகை1ம் பாதம் மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு தமிழ் புத்தாண்டான குரோதி வருடம் லாபகரமான ஆண்டாக அமையும். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும்.

    தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும்.தாய், தந்தைவழி தாத்தா மூலம் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கலாம்.உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்களால் ஏற்பட்ட மன பாரம் குறையும். ஆரோக்கிய குறைபாடு அகலும்.

    புத்திர பாக்கியம் உண்டாகும். பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். மாணவர்கள் நல்ல கல்லுரியில் இணைந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும் பங்குதாரர்கள், நண்பர்களிடம் சிறு மன பேதம் ஏற்படும். ஜென்ம நட்சத்திர நாளில் முருகனை வழிபடவும்.

    பெண்கள்

    பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும் நல்ல வருடம்.இருக்கும் நிலையை விட முன்னேற்றம் தரக்கூடியதாக, ஆடம்பரமான வாழ்க்கை அமையும். 6ம்மிட கேதுவால் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும்.

    புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நீண்ட வருடங்களாக பாதிக்கப்பட்ட தேக ஆரோக்கியம் சீராகும். கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.தன குருவால் குடும்பத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மனஉளைச்சல் குறையும்.

    திருமணம்

    குடும்ப ஸ்தானத்திற்கு செல்லும் குருபகவானால் திருமணத் தடை அகலும். தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமாக திருப்பம் ஏற்படும். மனதிற்கு பிடித்த நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு திருமண முயற்சி வெற்றி தரும்.

    பரிகாரம்:

    பிறக்கும் குரோதி வருடத்தில் மேஷ ராசிக்கு ராகு மற்றும் கேதுவால் 6, 12ம்மிடங்கள் இயக்கப்படுகிறது. தன குருவால் ஏற்படும் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க கடன் மற்றும் நோய் தாக்கத்திலிருந்து விடுபடவும் வீண் விரயங்களை தவிர்க்கவும் நீங்கள் சென்று வர வேண்டிய ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில், நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு. சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம். தமிழ் புத்தாண்டிற்கு இங்கே சென்று வழிபாடு நடத்தினால் மனதில் அமைதி குடிபுகும்.

    ×