என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)
22.9.2024 முதல் 28.9.2024 வரை
நீண்ட நாள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும் வாரம். ராசிக்கு 6-ல் சூரியன், புதன், கேது சேர்க்கை மற்றும் ராசிக்கு சனி, சுக்ரன் பார்வை இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு உண்டு. அரசாங்க வேலைக்கு அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். கலை, இலக்கியம், பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.
திருமண முயற்சிகள் சாதகமாகும். தாய், தந்தையின் நல்லாசிகள் உங்களை காக்கும். காதல் திருமணம் நடக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கை கூடும். ஆறாம் அதிபதி புதன் உச்ச பலம் பெற்று இருப்பதால் கடன் வாங்குவது, ஜாமின் போடுவதை தவிர்க்கவும். வர வேண்டிய தொகையில் காலதாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். பட்சிகளுக்கு தானியம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)
15.9.2024 முதல் 21.9.2024 வரை
முன்னேற்றமான வாரம். ராசிக்கு சனி, சுக்ரன் பார்வை இருப்பதால் மனதில் புது விதமான எண்ணங்கள் தோன்றும். பொருளாதார ரீதியாக உயர்வான நிலையை நோக்கி முன்னேறுவீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உங்கள் முந்தைய கடனை அடைப்பீர்கள். இதுவரை திருப்ப பெறாத வராக் கடன்கள் வசூலாகும். ஆனால் இதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க நேரும். குடும்ப பொறுப்புகள் கூடும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சினைகள் குறையும்.
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் சீராகும். உங்கள் கடமை உணர்வுக்கும் கடின உழைப்பிற் கும் தகுந்த பலன் கிடைக்கும். ஸ்திர சொத்துக்கள் சேரும்.காதல் விவகாரம் குடும்பத்தில் எதிர்ப்பை அதிகரிக்கும்.இது மனதில் டென்சனை ஏற்படுத்தும். பொழுது போக்கு விசயங்களில் ஆர்வம் கூடும். எதிர்காலம் பற்றிய கற்பனை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் சீராகி திருமணத்தடை அகலும். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை
லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகம். பாகப்பிரிவினை சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாகும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். சிறிய உழைப்பால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். முடியாத காரியம் முடியும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். புகழ், அந்தஸ்து, செல்வாக்கு தொழில் விருத்தி உண்டு. மண், மனை, வாகனம் தங்க நகை வாங்கும் யோகம் உண்டு.
இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளி நாட்டு வேலை, பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். கண்களில் சிறு உபாதைகள் இருக்கும். உரிய மருத்துவ சிகிச்சை முறையை கடைபிடிக்க வேண்டும்.
திருமண முயற்சி வெற்றியாகும்.11.9.2024 அன்று இரவு 9.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழிலில் கவனம் தேவை. பிறரின் புகழுக்கு மயங்க கூடாது. தொட்டது துலங்க விரயத்தை சுபமாக்க மஞ்சள் அபிஷேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)
1.9.2024 முதல் 7.9.2024 வரை
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி. தன ஸ்தானத்தில் குருபகவான் என முக்கிய கிரகங்கள் சாதகமாக உள்ளது. எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். அரசு வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.பங்குச் சந்தையில் புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் கூடும். குல தெய்வ அருளால், முன்னோர்களின் நல்லாசியால் தடைபட்ட அனைத்து இன்பங்களும் வந்து அடையும்.
திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு புண்ணிய பலன்கள் நடக்கப் போகிறது. வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். வாழ்நாள் லட்சியமாக எதிர்பார்த்த பதவி தேடி வரும். எதிர்பாராத சில விரயங்கள் ஏற்பட்டாலும் இது நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். தந்தையின் ஆலோசனைகள் பலன் தரும். சதுர்த்தியன்று பால் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் உப ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மேஷ ராசிக்கு அளப்பரிய சுப பலனை வழங்கும் அமைப்பாகும்.வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் ராசிநாதன் செவ்வாயைச் சேரும். எதிர்பாராத இடமாற்றத்தால் அதிக நன்மைகள் உண்டாகும். பணவரவில் ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் ஆடம்பரச் செலவு செய்யும் வகையில் வாழ்வாதாரம் உயரும்.
வாழ்க்கைத் துணையுடன் நிலவிய பனிப்போர் மறையும். விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். பிள்ளைகளின் நலனுக்காக எடுக்கும் திருமணம் மற்றும் மேற்படிப்பு முயற்சிகள் நிறைவேறும்.வாழ்க்கை இழந்த சகோதரிக்கு மறுவாழ்வு கிடைக்கும். தந்தையின் வாரிசு அரசு வழி வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். தந்தை மகன் ஒற்றுமை பலப்படும். தாய்மை அடைந்த பெண்களுக்கு இந்த வாரம் கிருஷ்ணரே குழந்தையாக பிறப்பார். கிருஷ்ணர் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)
19.8.2024 முதல் 25.8.2024 வரை
எதிர்ப்புகள் விலகும் வாரம். ராசிக்கு வக்ர சனியின் 3-ம் பார்வை உள்ளது. இடப் பெயர்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். சிலர் வீட்டை மாற்றலாம். அல்லது வேலையில் மாற்றம் உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு, கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். போட்டிகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும். வீடு வாக னங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.குடும்பத்தில் நிலவும் மாற்றுக் கருத்துக்களை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.
வாலிப வயதினருக்கு ஆண் குழந்தையும், சற்று வயதானவர்களுக்கு பேரனும் பிறப்பான். முக்கியமான பெரிய பணப் பரிவர்த்தனைகளுக்கான ஆவ ணங்களை பத்திரமாக பாதுகாக்கவும். ஜாமீன் போடு வதை தவிர்க்கவும். சிலரின் பிள்ளைகள் தொழில், உத்தியோகம் உயர் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. சமூகப் பணிகளில் ஆர்வம் கூடும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்புகளால் குதூகலம் ஏற்படும். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். பால் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)
12.8.2024 முதல் 18.8.2024 வரை
கடன் தொல்லை குறையும் வாரம். 3,6-ம் அதிபதி புதன் வக்ரமடைவதால் கடன் சார்ந்த விசயங்களில் மாற்றம் உண்டாகும். உத்தி யோகத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.ஜாமீன் பிரச்சனையால் உண்டான பாதிப்புகள் அகலும்.தாய் வழிச் சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்து சாதகமாகும். கைமறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். காரியத் தடைகள் சீராகும். குடும்பத்தில் நிலவிய தேவையற்ற பேச்சுக்கள் மனஸ்தாபங்கள் குறைந்து புரிதல் அதிகரிக்கும்.
தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் ஒத்திப்போகும். பெற்றோர்கள், குடும்ப உறவுகள் மதிப்பார்கள். மரணத்தின் எல்லையைத் தொட்டவர்களுக்கு ஆயுள் பயம் விலகும். 13.8.2024 அன்று காலை 4.15 மணி முதல் 15.8.2024 அன்று பகல் 12.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். வரலட்சுமி நோன்பு அன்று லலிதா சகஸ்ர நாமம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)
5.8.2024 முதல் 11.8.2024 வரை
புதிய நம்பிக்கை உண்டாகும் வாரம். 2, 7-ம் அதிபதி சுக்ரன் சுய சாரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் சீராகும் . எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகளை அடையும் மார்க்கம் பிறக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். கடன் தொல்லை குறையும். தடைபட்ட பூர்வீக சொத்து விற்பனை தற்போது விற்று முழுத் தொகையும் கைக்கு வந்து சேரும்.
சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.நீண்ட நாள் கனவான சந்தான பாக்கியம் கிடைக்கும். கல்லூரி மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெறுவார்கள். சிலரின் காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். பதவி உயர்வு இடப்பெயர்ச்சிகள் சாதகமாகும். வெளிநாட்டு பயண முயற்சி வெற்றி தரும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆடிப் பூரத்தன்று மங்கலப் பொருட்கள் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
சுப செலவுகள் உண்டாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று உப ஜெய ஸ்தான அதிபதி புதனுடன் சேர்கிறார். வருமானம் திருப்திகரமாக இருக்கும், வளர்ச்சி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். வேலை இல்லாத வர்க ளுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். ஆன்லைன், பங்கு சந்தை வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும்.சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நடக்கும்.
சொத்து தொடர்பாக உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் மன பேதம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளது. ஆனால் நீங்கள் எதார்த்தமாக விட்டுக் கொடுப்பீர்கள். சுபச்செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். சங்கடங்கள் விலகி சாதகமான முன்னேற்றம் ஏற்படும்.மாணவர்கள் தேவையில்லாத வீண் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அரசியல்வா திகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும். ஆடி செவ்வாய் கிழமை குங்கும அர்ச்சனை செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
22.7.2024 முதல் 28.7.2024 வரை
உழைப்புக்கேற்ற பலன் பெறும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாயின் 4-ம் பார்வையில் 3,6-ம் அதிபதி புதன் சஞ்சரிப்பதால் மேஷத்திற்கு உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும்.உயர் அதிகாரியின் ஆதரவு உங்களின் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும்.பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார வளம் சிறக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி, வாடகை பணம், வராக் கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உள்ளது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
உறவினர்கள் வருகையால் வீட்டில் விருந்து நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களுக்கு கணவரு டனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு நிலம், வீடு, தோட்டம், தோப்பு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணத்திற்கு பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து நல்ல பதில் வரும். புத்திர பிராப்தம் நிறைவேறும். செல்வந்தர்கள் அல்லது அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
15.7.2024 முதல் 21.7.2024 வரை
ஆதாயமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய அதிபதி குருவுடன் இணைவது குருமங்கள யோகம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 4-ல் 2,7-ம் அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை. முக்கிய கிரக நிலவரங்கள் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் இருந்த தாமதம் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மாணவர்கள் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கி யத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
வீடு,மனை, சொத்து சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும்.அதிக உற்சாகமாக இருந்தாலும் உடன் பிறந்தவர்கள் தொடர்பான சில மன உளைச்சல் இருக்கும். 16.7.2024 அன்று இரவு 7.51 முதல் 19.7.2024 அன்று அதிகாலை 3.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சலால் மன சஞ்சலம் ஏற்படும். புதிய முயற்சிகள், பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. சமயபுரம் மாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
8.7.2024 முதல் 14.7.2024 வரை
வாழ்வில் வசந்தம் பிறக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் சென்று பாக்கியாதிபதி குருவுடன் இணைவது குரு மங்களயோகம். தொட்டது துலங்கும். பட்டது பூக்கும். பணவரத்து கூடும். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் சூழல் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் ததும்பும்.வாழ்க்கையில் நிலவிய தனிமை உணர்வு குறையும். பிறருக்கு அடிமையாக கஷ்ட ஜீவனம் செய்த நிலை மாறும். சிறை தண்டனையில் வாழ்ந்தவர்களுக்கு தண்டனை காலம் குறையும்.
நோயால் படுத்த படுக்கையாக கிடந்தவர்கள் குணமடைவார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பொது ஜனத் தொடர்பில் இருப்பவர்களின் ஆலோசனை மற்றும் கட்டளைக்கு பலர் அடி பணிவார்கள்.வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பை குறைத்தால் திருமணம் உடனே நடக்கும். கட்டிய வீடு, நிலம், வாகனம் வாங்கலாம். புத்திர பிராப்தம் உண்டாகும். துர்க்கை வழிபாடு நல்லதை அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406