என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
நம்பிக்கை மேம்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ராசியில் ஆட்சி பலம் பெறுவதால் மனதில் நிலவிய இனம் புரியாத பய உணர்வு மறையும். இழந்த தைரியம், தெம்பு அதிகரிக்கும். மிகுதியான பொருள் வரவு இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மறைமுக நெருக்கடிகள், கடன் தொடர்பான சர்ச்சைகள் முழு மையாக விலகி தொழிலில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் கிடைக்கும். சுபவிரயங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வுகள் விலகும் நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அரசு உத்தியோக முயற்சி பலிக்கும். தகுதிக்கும், திறமைக்கும், படிப்பிற்கும் தகுந்த வேலை தேடி வரும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். புத்திரப் பிராப்தம் உண்டாகும். இழந்த பல பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
24.6.2024 முதல் 30.6.2024 வரை
எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி செவ்வாயின் பார்வைக்கு புதன் செல்வதால் எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். அரசின் சட்ட திட்டத்தால் ஏற்பட்ட தொழில் இடர்கள் அகலும். தொழில், வியா பாரம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இடமாற்றத்தை எதிர் பார்த்தவர்களுக்கு சொந்த ஊருக்கே வேலை மாற்றம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் விசயத்தில் நன்கு அறிமுகமானவர்கள் மூலம் கடன் கிடைக்கும்.
காணாமல் போன ஆவணங்கள், கை மறதியாக வைத்த உயில், சொத்து பத்திரங்கள் கிடைக்கும். குடும்பத்திற்கு அதிகமான வருவாய் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் திறமையாக செயல்பட்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள். சகோதர, சகோதரிகளின் திருமண முயற்சியில் அலைச்சல் மிகுந்த பயணம் உண்டு.விவாகரத்து வழக்கு சாதகமாகும். இரண்டாவது பிள்ளை கல்வி, தொழிலுக்காக இடம் பெயரலாம்.பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். நீண்ட நாள் வேண்டுதல்கள் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். துர்க்கையை வழிபட மேன்மை உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிபலன்
17.6.2024 முதல் 23.6.2024 வரை
வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் வாரம்.ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் சனியின் பார்வை பெற்று 4, 7, 8-ம் மிடத்தை பார்க்கிறார் தைரிய வீரிய, பராக்ரம ஸ்தானத்தில் புதன் ஆட்சி பலம் பெறுகிறார். பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். சிலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாத சொத்தால் பிரச்சினைகள் கூடும். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித் தன்மை மிளிறும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.வீண் செலவு களை குறைத்து சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிப்பு உயரும்.வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மாமனாரின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சுமாரான நேரம்.தொழில், வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்.புத்திர பாக்கியம் சித்திக்கும். சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும். உடல் நலனில் முன்னேற்றம் இருக்கும். 19.6.2024 பகல் 1.05 மணி முதல் 21.6.2024 மாலை 6.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயலில் தடுமாற்றம், சிந்தனையில் குழப்பம் ஏற்படலாம். பவுர்ணமியன்று முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
10.6.2024 முதல் 16.6.2024 வரை
தெளிவுகள் பிறக்கும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் சனி பார்வையில் ஆட்சி. எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுவதால் செயல்பாடுகளில் பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களின் வழியில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திருமணத்தடை அகன்று மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும்.பொன்,பொருள் சேர்க்கை கூடும். வீடு, வாகன யோகம் கிட்டும். வாழ்வாதார உயர்வால் மனதில் இருந்துவந்த கவலைகள் விலகும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய தெளிவு பிறக்கும். சேமிப்புகளை மேம்படுத்து வதற்கான மார்க்கம் தென்படும். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் அனுகூலமான திருப்பம் ஏற்படும். முருகன் வழிபாட்டால் நிம்மதி நிலைக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
3.6.2024 முதல் 9.6.2024 வரை
களிப்பான வாரம். ராசியில் செவ்வாய் ஆட்சி.தன ஸ்தானத்தில் சுக்ரன் ஆட்சி.லாப ஸ்தானத்தில் சனி ஆட்சி முக்கிய கிரகங்கள் சாதகமாக உள்ளது. மனக்குழப்பம், சங்கடங்கள் விலகும். நினைத்ததை சாதிப்பீர்கள். மூளை பலமே மூலதனம் என்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு வியாபாரத் தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் அகலும். மனைவியால் பணவரவு பல மடங்காக அதிகரிக்கும். பங்குச் சந்தை, பங்கு பத்திர முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
ராசிக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் முறையான பாகப் பிரிவினை சொத்துக்கள் கிடைக்கும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ சொத்து, பங்குபத்திரம் வாங்குவீர்கள். வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளிநாட்டில் சென்று செட்டிலாகும் வாய்ப்பு ஏற்படும். இடது கண்ணில் சிறு உபாதைகள் தோன்றி மறையும் அல்லது அறுவை சிகிச்சை செய்ய நேரும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசி பலன்
27.05.2024 முதல் 02.06.2024 வரை
மாற்றம் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை உங்களுக்கு எதிராக இருந்த பிரச்சனைகள் வலு இழக்கும். தொழில், வேலையில் சாதகமான பலன் நடைபெறும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வைராக்கியம், விடாமுயற்சியுடன் செயல்பட்டு லட்சியத்தை அடைவீர்கள். பணவரவு நீர்வீழ்ச்சி போல் கொட்டும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். வீடு, மனை, வாகனம் என சுப விரயச் செலவுகள் ஏற்படும். இடமாற்றம் மன நிம்மதியை அதிகரிக்கும். போட்டி, பொறாமை, எதிரி, கடன் இவற்றின் பாதிப்புகள் குறையும். ஆரோக்கியம் சிறக்கும். தான, தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களால் மனதில் நிம்மதி குடிபுகும். இளம்பெண்களுக்கு மனம் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு மத மாற்ற சிந்தனை மேலோங்கும். காதல் விசயங்களால் மன உளைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகளில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பங்காளிகளால் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை செவ்வரளி மாலை அணிவித்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
20.5.2024 முதல் 26.5.2024 வரை
பொருளாதாரப் பற்றாக்குறை அகலும் வாரம். தன ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்ரன் என தன, லாபத்தை வழங்கும் கிரக கூட்டணி இருப்பது மேஷத்திற்கு சுபபலனை மேம்படுத்தும் அமைப்பாகும். இதனால் உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பீர்கள். அன்றாட தேவையை சமாளிக்க திணறியவர்களுக்கு தாராள தன வரவால் மகிழ்ச்சி ஏற்படும்.குடும்ப ஸ்தான சுக்ரனால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். தொழில். உத்தியோகம் லாபகரமாக இருக்கும். கரைந்த சேமிப்புகள் உயரும். கடன் சுமை குறையும்.அரசு உத்தியோக முயற்சி சித்திக்கும்.
அரசியல் பிரமுகர்களின் பேச்சு திறமையால் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பிள்ளை பேறில் ஏற்பட்ட தடைகள் அகலும். திருமணம் நடைபெறும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் நேரம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. உடல் நிலை சீராகும். 23.5.2024 அன்று அதிகாலை 2.55 மணி முதல் 25.5.2024 அன்று காலை 10.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் போட்டி பந்தயங்களை தவிர்க்கவும். செயல்களில் நிதானம் அவசியம். நவகிரக செவ்வாய் பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
13.5.2024 முதல் 19.5.2024 வரை
தாராள தனவரவு ஏற்படும் வாரம். ராசியில் தன அதிபதி சுக்ரன். தன ஸ்தானத்தில் குரு, சூரியன் சேர்க்கை என தன ஸ்தானமும், தன கிரகமும் பலம் பெறுவது மேஷத்திற்கு உன்னதமான தனவரவை ஏற்படுத்தும் அமைப்பாகும். கொடுக்கல் வாங்கல் சிரமமின்றி நடைபெறும். பிறரை நம்பி கொடுத்த பணம், வராக் கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பும். ராசியில் உள்ள புதன் எதையும் ஏfற்றுக் கொள்ளும் தைரியத்தையும் மன வலிமையையும் நல்குவார்.கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது.
தொழில் போட்டிகளால் ஏற்பட்ட அவஸ்தைகள் சீராகும். கூட்டுத்தொழிலில் இருந்த மாற்றுக் கருத்துகள் மறையும். திருமணத் தடை அகலும். புத்திரப் பேறு உண்டாகும்.புதிய சொகுசு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழியில் உள்ள சொத்துப் பிரச்சினைகள் அகலும். பெண்களால் ஏற்பட்ட தேவையற்ற மன உளைச்சல் அகலும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும்.
மேஷம்
இந்த வார ராசிபலன்
6.5.2024 முதல் 12.5.2024 வரை
முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம். ராசியில் தன அதிபதி சுக்ரன் சூரியன் மற்றும் புதனுடன் சேருவதால் நன்மைகள் பெருகும். வெற்றிகள் உங்களைத் தேடி வரும். இதுவரை சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும்.உங்களது கருத்துக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரம் உங்கள் மன மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். எதிரிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். நிம்மதியும் தைரியமும், தெம்பும் உங்களை வழி நடத்தும். வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும்.உடன் பிறப்புகளுடன் இருந்த கோபதாபங்கள் மாறும். புத்திரப் பேறில் நிலவிய தடைகள் விலகும். தாய்மாமன் மூலம் நல்லது நடக்கும். வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். இதுவரை நீங்கள் அனுபவித்த பிரச்சினைகள், சங்கடங்கள், கஷ்டங்கள், குறைந்து, வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகள் சுமூகமாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும்,திருமண வாய்ப்புகள் கூடி வரும். அமாவாசையன்று உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசியில் சூரியன் சுக்ரன் சேர்க்கை. தன ஸ்தானத்தில் குரு. விரய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராகு என கிரகங்களின் சஞ்சாரம் இருப்பது மேஷத்திற்கு ஏற்றமான பலன் தரும் அமைப்பாகும்.
சங்கடங்கள் விலகி வாழ்க்கை வளமாகும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். சுய தொழில் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலர் கோபத்தால் நல்ல வாய்ப்புகளை தவற விட்டு பின் வருந்துவார்கள்.
சிலருக்கு ஊர் மாற்றம் அல்லது வேலை மாற்றம் நடக்கும். முக்கிய பொறுப்புகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. வழக்குகளை வாபஸ் பெறலாம் அல்லது ஒத்தி வைக்கலாம். வாடகை வீட்டுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். திருமண வயது ஆண், பெண்களுக்கு இந்த வாரத்தில் சாதகமான பலன் உண்டு. நன்மையும், தீமையும் சேர்ந்தே நடைபெறும் என்பதால் தைரிய லட்சுமியை வழிபட மேன்மை உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
சுபகாரியங்கள் கைகூடும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும் பாக்கியாதிபதி குருவும் ராசியில் சஞ்சரிப்பதால் திருமணம், பிள்ளைப்பேறு, உயர்கல்வி, வீடு, வாகன யோகம் என தடைபட்ட அனைத்து சுப காரியங்களும் கை கூடி வரும்.
மனோதைரியம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நோய், பிணி, மூப்பு உங்களை அண்டாது. வழக்குகளின் தீர்ப்புகள் சாதகமாகும். சிலருக்கு அரசின் இலவச வீடு மனை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் தேடி வரும். சம்பள உயர்வு உண்டு.
வியாபாரிகளுக்கு விரயம் குறையும். வெளிநாட்டு வேலை, தொழில் முயற்சிகள் வெற்றி தரும். கிடைத்த வாய்ப்யை பயன்படுத்தக்கூடிய நல்ல நேரமாக இந்த வாரம் அமையும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். தம்பதிகள் ஒருமித்த கருத்துடன் வாழ்வார்கள். 25.4.2024 இரவு 8 மணி முதல் 28.4.2024 அன்று அதிகாலை 4.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் கடன் பெறுவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி பெற பவுர்ணமியன்று பராசக்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
15.4.2024 முதல் 21.4.2024 வரை
சாதகமான வாரம். உச்சம் பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் பாக்கியாதிபதி குருவுடன் ராசியில் சஞ்சாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் ஒருங்கே பலம் பெறும் இந்த அமைப்பு மேஷ ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் கிரக நிலவரமாகும். ஆழ்மன எண்ணங்கள் மற்றும் ஆசைகள் நிறைவேறும்.
சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளில் நல்ல விதமான மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். வெளிநாட்டு பயணம் மற்றும் வேலை, புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். பெற்ற பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.வீடு கட்டுதல், புதிய வீடு ,வாகனம், புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.குருவின் ஆசியோடும் பெரியோர்களின் ஆசியோடும் ஆடம்பரமாக சீரோடும், சிறப்போடும் திருமணம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடைபெறும்.
பங்குச் சந்தை ஆதாயம், பொருளாதார முன்னேற்றம் உண்டு. தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். உடல் நிலை சிறக்கும். முருகனை வழிபட இன்பங்கள் இரட்டிப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406