என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
இந்தவார ராசிபலன்
22.1.2024 முதல் 28.1.2024 வரை
சகல சவுபாக்கியங்களையும் அடையும் அதிர்ஷ்டம் உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட கால திட்டங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றக் கூடிய நல்ல வாய்ப்புகள் கூடி வரும். இது வரை தொழில் உத்தியோகத்தில் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கும். தடைபட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு தானாக வந்து சேரும். தொழிலுக்கு உதவியாக நிரந்தரமான திறமையான வேலையாட்கள் அமைவார்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
தவறாக புரிந்த உறவுகள் உங்களின் நல்ல பண்பை புரிந்து கொள்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நிம்மதி கூடும்.வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். வீடு, வாகனம் போன்ற புதிய சொத்துக்களை வாங்க, பழைய சொத்துக்களை விற்க ஏற்ற காலம். திருமண வயதை அடைந்த ஆண், பெண்களுக்கு நல்ல வரன் அமையும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள், பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தைப் பூசத்தன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
15.1.2024 முதல் 21.1.2024 வரை
இடமாற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய அதிபதி குருவுடன் பரிவர்த்தனை என முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் மேஷ ராசியினருக்கு சாதகமாக உள்ளது. மிக உன்னதமான சுப பலன்கள் ஏற்படும். தடைபட்ட பணி மாற்றம், ஊதிய உயர்வு, இடமாற்றம் இப்பொழுது சாத்தியமாகும்.தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளதால் உள்ளத்தில் அமைதி குடிபுகும். சொத்துக்களின் மதிப்பு கூடும். புதிய சொத்துக்கள் சேரும். வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இடப்பெயர்ச்சிகள் நிகழும். உபரி வருமானத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். தாயாரின் சொத்துக்களைப் பிரிப்பதில் சகோதர சகோதரிகளால் ஏற்பட்ட இடையூறு மன உளைச்சல் சீராகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்துவது பற்றி சிந்திப்பீர்கள். ராசிக்கு சனி பார்வை பதிவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முருகனை வழிபட மேன்மையான பலன் உண்டு.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
8.1.2024 முதல் 14.1.2024 வரை
அபரிமிதமான லாபம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுவது மிக சிறப்பான அமைப்பு. சுய தொழிலில் வளர்ச்சி உண்டு. சிலருக்கு புதிய தொழில் துவங்கும் ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. குடும்ப பிரச்சினைகள் குறையத் துவங்கும். நினைத்ததை நிறைவேற்றும் வகையில் அபரிமிதமான லாபம் உண்டாகும்.
வீடு கட்டுதல், வீடு வாங்கி குடியேறுதல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடைபெறும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். .பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கையால் நிம்மதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். உடலை அச்சுறுத்திய நோய்கள் விலகி மருத்துவ செலவுகள் குறையும். வயோதிகர்களுக்கு ஆயுள் பயம் விலகும். 9.1.2024 இரவு 9.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிலைமையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுவது நல்லது.அரச மரத்தடி விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
1.1.2024 முதல் 7.1.2024 வரை
குடும்ப பிரச்சினைகள் தீரும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் தொழில், உத்தியோக அபிவிருத்தி உண்டு. புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் கூடும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டக் கூடிய புதிய வாய்ப்புகள் கைகூடி வரும். குடும்பத்தில் நிலவிய மனகசப்பான சம்பவங்கள் முற்றுப்புள்ளியாகும். பிள்ளைகள் தொழில் உத்தி யோகத்திற்காக இடம் பெயரலாம். பாக்கிய அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் ஆத்ம ஞானம் அதிகரித்து உடலுக்கும் ஆன்மா வுக்கும் புத்துணர்வு உண்டாகும். குல
தெய்வ வழிபாடு பித்ருக்கள் நல்லாசி பெற உகந்த காலம். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும். சுப விசேஷ நிகழ்வுகள் நடக்கும்.7.1.2024 மாலை 4.03க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினை, தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை.கிருத்திகையன்று அங்காரகனை வழிபட முத்தாய்பான முன்னேற்றம் உண்டு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
25.12.2023 முதல் 31.12.2023 வரை
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் பாக்கிய அதிபதி குருவின் பார்வையில் சஞ்சரிப்பதால் மிகப் பெரிய யோகமான பலன்களை பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பலவித வழிகளில் வந்து கொண்டே இருக்கும். செல்வாக்கு உயரும்.எதிர்ப்புகள் அகலும். வழக்குகள் வெற்றியாகும்.
பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும் அரசு வகை யில் மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து தடைகள் விலகும். சொத்துச் சேர்க்கை அதி கரிக்கும். குடும்ப விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உரு வாகும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனைக்கு மதிப்பு கொடுப்பார்கள்.குடும்பப் பிரச்சினைகள் விலகும். திருமணம், மறுமணம் முயற்சிகள் வெற்றி தரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள். துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
18.12.2023 முதல் 24.12.2023 வரை
நல்ல செயல்கள் நடைபெற வழி பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபதி குருவின் பார்வை யில் சஞ்சரிப்பதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறு கிறது. நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் வாய்ப்புகள் உருவாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். புத்திர பாக்கியம் கைகூடும். திருமணத் தடை அகலும். மறுமண முயற்சி வெற்றி தரும். சுப செய்திகள் தேடி வரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சுமூ கமான சூழல் நிலவும்.
அடமானச் சொத்துக்களை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடிவரும்.பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு சொல்வாக்கு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் சீராகும். மாமனாரால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் சீராகும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும்.வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். உடலும் உள்ளமும் மகிழும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். சொத்துக்கள் வாங்க விற்க உகந்த நேரம். உயர்கல்வி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏகாதசியன்று நெய்தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
11.12.2023 முதல் 17.12.2023 வரை
பண நெருக்கடி விலகும் வாரம். 2,7-ம் அதிபதி சுக்ரன் 7-ல் ஆட்சி பலம் பெறுவதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் சிறப்பாக நடக்கும்.சில உடன்பிறப்புகள் இணைந்து புதிய கூட்டுத்தொழில் துவங்கலாம். வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பார்கள். பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அதி கரிக்கும். உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பார்கள். வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா பிரச்சினை சீராகும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். ராகுவால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.13.12.2023 அன்று காலை 11.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள். விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை அணிவித்து வழிபட வினைகள் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
4.12.2023 முதல் 10.12.2023 வரை
சுபகாரிய முயற்சியில் வெற்றி உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாயும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் புத்திர பாக்கியத்திற்கான வைத்தியம் பலன் தரும். கருத்தரிப்பு உண்டாகும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.வீண் மனசஞ்சலம் அகலும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும்.உங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள். தான, தர்மம் செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். 7ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும்.
மறு விவாகத்திற்கு நல்ல வரன் அமையும்.வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு தொகுதிப்பணியால் அலைச்சல் அதிகமாகும். வேலையில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பெண்களுக்கு நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் விலகும்.தினமும் சிவபுராணம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
26.11.2023 முதல் 3.12.2023 வரை
மங்களகரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சனி பார்வையில் ஆட்சி பலம் பெறுவதால் நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.வீடு, மனை என சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல் என உங்கள் சிந்தனை எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். எதிர்பார்த்த அனைத்து வழிகளிலும் வரவுகள் இருக்கும். சுய தொழிலில் நிலவிய சங்கடங்கள், குறுக்கீடுகள் விலகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.அலுவலகத்தில் உங்கள் மீது ஏற்பட்ட வீண் பழி விலகும்.
வார இறுதியில் 7-ம் அதிபதி சுக்ரன் கேதுவின் பிடியில் இருந்து விடுபட்டு துலாத்தில் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சுப நிகழ்வுகள் மங்களகரமானதாகவும், அற்புதமாகவும் அமைய உள்ளது. நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நேரம். சமூக அந்தஸ்து உயரும்.கணவன் மனைவி ஊடல் கூடலாக மாறும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். உடல் நிலை தேறும். செவ்வரளி மலர்களால் முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
20.11.2023 முதல் 26.11.2023 வரை
நிதானமாக செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் மற்றும் 3,6-ம் புதனுடன் ராசிக்கு 8-ல் இணைவது விபரீத ராஜயோகம். திட்டமிட்டு செயல்படுவீர்கள். இதுவரை உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி அமைதி நிலவும்.பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். சிலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாத சொத்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்.ஆண்கள் மனைவி பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம்.
சிலர் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக தாயாரை பிரிந்து செல்ல நேரும். உங்கள் அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். பெண்களுக்கு கணவர் மற்றும் பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும்.பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. திருமண முயற்சி பலன் தரும். ஆரோக்கிய குறைபாடு சீராகும். பவுர்ணமியன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
13.11.2023 முதல் 19.11.2023 வரை
நிதானமாக செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் மற்றும் 3,6ம் அதிபதி புதனுடன் ராசிக்கு 8ல் இணைவது விபரீத ராஜயோகம். பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். விற்ற பணத்தில் தாயார் சகோதரருக்கு அதிக பங்கு கொடுப்பது மன உளைச்சலை அதிகமாக்கும்.சிலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாத சொத்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்.ஆண்கள் மனைவி பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம்.சிலர் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக தாயாரை பிரிந்து செல்ல நேரும்.
உங்கள் அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. திருமண முயற்சி பலன் தரும். ஆரோக்கிய குறைபாடு சீராகும்.13.11.2023 இரவு 9.17 முதல் 16.11.2023 அன்று 3am வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லதாக நினைத்து பேசினாலும் அதை மற்றவர்கள் தவறாக பேசுவார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. சஷ்டியன்று முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
6.11.2023 முதல் 12.11.2023 வரை
சங்கடங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி செவ்வாயும், குருவும் சம சப்தமாக பார்ப்பது குரு மங்கள யோகம். தொழில், லாப, ஸ்தான அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி என பல கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பது மேஷத்திற்கு சிறப்பு.தொழிலில் முன்னேற்றமான போக்கு தென்படும். உத்தியோக மாற்ற சிந்தனை அதிகமாகும்.புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாகும்.
அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் பெரிய பொறுப்புகளை சுமக்க நேரும். வீடு, வாகன பராமரிப்புச்செலவுகள் அதிகரிக்கும்.தீபாவளி உற்சாகத்தில் சேமிப்புகள் கரையும்.2,7ம் அதிபதி சுக்ரன் நீசம் பெறுவதால் பணப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கலில் சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பழைய நண்பர்களை எதிர்பாராத விதமாக சந்தித்து மகிழ்வீர்கள். வெளியூரில் வேலை பார்த்த கணவர் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். தெய்வ அருளும், அனுகூலமும் உண்டாகும். தீபாவளியன்று தைரிய லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406