search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    பிறரைப் பார்த்தவுடன் நட்பாகப் பழகிவிடும் கடக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் உள்ள குருவும் வக்ரம் பெறுகிறார். மாதத்தின் மையப் பகுதியில் சனி வக்ர நிவர்த்தியாவதால், 'அஷ்டமத்துச் சனி' வலுவடைகிறது.

    எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். உங்களின் சேமிப்புகள் கரையலாம். யார் மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட முடியாது. உத்தியோகத்திலும், தொழிலிலும் புதிய திருப்பங்கள் வந்துசேரும்.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு விலகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சொத்து விற்பனை மூலம் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம். சொந்தங்களை அனுசரித்துச் செல்லுங்கள். பிறரை நம்பி எடுத்த முயற்சிகளில் ஏமாற்றங்களையே சந்திக்க நேரிடும்.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் ஒரு பெரும் விரயம் ஏற் படக்கூடும். எனவே கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை தீவிரமாகப் பேசி முடிக்கலாம்.

    இதன் மூலம் வீண் விரயங்கள், சுப விரயமாக மாறும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டதூரத்தில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். உடன்பிறப்புகள் வழியில் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். இப்பொழுது சனி பலம் பெறுவதால் அஷ்டமத்துச் சனியின் வலிமை கூடுகிறது. எனவே அனைத்து வழிகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரித்து, மருத்துவச் செலவை ஏற்படுத்தும்.

    இடமாற்றம் இனிமை தருவதாக அமையாது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வர்.

    விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, யாரை நம்புவது என்பதே தெரியாத நிலை உருவாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.

    கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மாணவ - மாணவி களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்கள், தங்களின் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 20, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ×