என் மலர்
கடகம்
வைகாசி மாத ராசிபலன்
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் வகையில் மாதம் தொடங்குகிறது. அதே நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. குருவின் பார்வை சகாய ஸ்தானத்தில் பதிவதால் இடையூறுகளுக்கு மத்தியில், சில நல்ல பலன்களும் கிடைக்கும். தனாதிபதியான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார பற்றாக்குறை படிப்படியாக தீரும். எதையும் யோசித்து செய்வதன் மூலமே நற்பலன்களைப் பெற முடியும்.
ரிஷப - சுக்ரன்
வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும். குடும்பத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள், உங்களை விட்டு விலகுவர். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். பழைய ஆபரணங்களை கொடுத்து விட்டு புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
ரிஷப - புதன்
வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகாய ஸ்தானாதிபதியான அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். கருத்து வேறு பாடுகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் கருத்துக்களை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறப்பு களின் திருமண நிகழ்வுகள், உள்ளம் மகிழும் விதம் நடைபெறும். அரசியலில் பிரகாசிப்பவர்களுக்கு ஆச்சரியம் தரும் விதமாக, புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாமன் - மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும்.
மேஷ - செவ்வாய்
வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் அற்புதமான பலன்கள் வந்துசேரும். புதிய தொழில் தொடங்குவது பற்றி தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
மிதுன - புதன்
வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான புதன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கொடுக்கல்- வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பிறரிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல், அதனால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. நட்பை பலப்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.
மிதுன - சுக்ரன்
வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்திற்கு வரும் போது வரவும், செலவும் சமமாகும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். உறவினர்களின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். ஊர் மாற்றங்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை விற்று, அதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் சூழ்நிலை உருவாகலாம்.
அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கை கொடுக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்கள், எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு ஏற்றமும், இறக்கமுமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். கலைஞர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை தேவை. பெண்களுக்கு சேமிப்பு கரையும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, ஜூன்: 1, 2, 5, 6, 12, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.