search icon
என் மலர்tooltip icon

    கடகம் - வார பலன்கள்

    கடகம்

    வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

    22.12.2024 முதல் 28.12.2024 வரை

    அஷ்டமச் சனி பற்றிய பயம் விலகும். லாப குருவால் மறைமுக ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

    புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். மனைவி, பிள்ளைகளுக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.முன்னேற் றத்துக்குத் தடை இருக்காது. பூர்வீக நிலப் பிரச்சினை தீர்ந்து பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளை தொடங்கலாம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும், நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை

    15.12.2024 முதல் 21.12.2024 வரை

    வழிபாட்டால் சங்கடங்கள் விலகும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 6ம்மிடம் செல்கிறார். பணிச் சுமை சற்று அதிகரிக்கும்.நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும். சிலருக்கு கால் நடை வளர்ப்பில் அல்லது செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக சித்தப்பாவுடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்ற நேரம். ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.கணவன், மனைவியிடையே நிலவிய பனிப் போர் மறையும்.

    கடந்த கால மனக்கசப்புகள் குறையும். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தாயகம் திரும்ப கால தாமதமாகும். தொழிலில் நிலவிய மந்த நிலை மாறும். நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்தல் நலம். உணவுக் கட்டுப்பாடு அவசியம். புதிய தொழில் முயற்சிகள், பெரிய மூலதனம் போடுவதற்கு ஏற்ற காலம் அல்ல. தாய், வீடு, வாகனம் போன்றவற்றின் மூலம் சில விரயங்கள் தோன்றி மறையும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சியால் ஆதாயம் உண்டாகும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிர்சசினைகள் தீரும்.குலதெய்வ வழிபாடு குறைகளை நீக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை

    8.12.2024 முதல் 14.12.2024 வரை

    மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும் வாரம். ராசியில் உள்ள பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் வக்ரம் பெறுகிறார். இதனால் நீச்ச பங்க ராஜயோகம் ஏற்படுகிறது. வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பிள்ளைகளுக்கு சுபநிகழ்வுகள் நடத்தி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள்.

    பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தாராள தன வரவு ஏற்பட்டாலும் மிகைப்படுத்தலான சுப விரயமும் இருக்கும். கடன் தொல்லையில் இருந்து சிறிது சிறிதாக மீள்வீர்கள். கடன் பிரச்சனையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். 9.12.2024 அன்று காலை 9.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை

    1.12.2024 முதல் 7.12.2024 வரை

    நிம்மதி பெருமூச்சு விடும் வாரம். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய்க்கு சுகாதிபதி சுக்ரனின் பார்வை. வெகு விரைவில் அஷ்டமச் சனி முடியப்போகிறது. தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது புத்திசா லித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலைமாறும்.

    அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியும் கூடும். புத்திரம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. 7.12.2024 அன்று காலை 5.06 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும் பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிவ வழிபாடு முன்னேற்றத்தை அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

    24.11.2024 முதல் 30.11.2024 வரை

    எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 5-ல் முயற்சி ஸ்தான அதிபதி புதனுடன் சேருகிறார். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும்.உங்கள் யோசனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை நேர்மறையாகச் செயல்படும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனச் சுமை குறையும்.அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அஷ்டமச் சனியால் தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும்.

    கடன், நோய், எதிரி தொல்லை நிவர்த்தியாகும். கடக ராசிக்கு மார்ச் 29-க்குப் பிறகு திருமணம் நடத்தலாம். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும்.பூர்வீகத்தை விட்டு தொழில், உத்தியோகத்திற்கு சென்றவர்கள் நல்ல பொருளாதாரத்துடன் பூர்வீகத்தில் வந்து செட்டிலாவார்கள். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும்.கை,கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியிலிருந்து விடுதலை உண்டாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை

    17.11.2024 முதல் 23.11.2024 வரை

    வெற்றி நிறைந்த வாரம். உப ஜெய ஸ்தான அதிபதி புதன் தன அதிபதி சூரியனுடன் ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை.அனுபவ மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்.நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

    நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும்.பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.வீடு, வாகன முயற்சி பலிக்கும். அஷ்டமச் சனி முடியும் வரை புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம். தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை

    தன வரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம். கடக ராசிக்கு 7, 8-ம் அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் அஷ்டமச் சனியால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து காரியங்களும் சீராக நடந்து முடியும். தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டு. விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

    கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். காசு, பணம், துட்டு, மணி பல வழிகளில் வாசல் கதவைத் தட்டும். விவசாயிகளுக்குத் தடைபட்ட குத்தகை வருமானம் வந்து சேரும். குடியிருப்புகளுக்கு புதிய வாடகைதாரர் வரலாம். ஆன்மீக நாட்டம் கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். 12.11.2024 அன்று காலை 2.21 வரை சந்திராஷ்டமம் உள்ளது. பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். பவுர்ணமியன்று சிவசக்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை

    3.11.2024 முதல் 9.11.2024 வரை

    தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் வாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார். திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும்.உங்களின் ஆளுமைக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். விரும்பிய ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வந்து சேரும். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். சேமிப்புகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடு அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். சமுதாய அந்தஸ்து மிகுந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வீடு கட்டும் பணி துரிதமாகும்.

    வாழ்க்கைதுணை, கூட்டாளிகள் அல்லது நண்பர்களால் ஏற்பட்ட மனக் கசப்பு சீராகும். சிலருக்கு உயில் எழுதும் சிந்தனை மிகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள். மார்ச் மாதம் அஷ்டமச் சனி முடிந்த பிறகு திருமணத்தை நடத்தவும். புத்திர பிராப்தம் சித்திக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டு தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை

    27.10.2024 முதல் 3.11.2024 வரை

    குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் வாரம். யோகாதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் வருமான பற்றாக்குறை அகலும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் தீபாவளி லாப விகிதம் அதிகமாக இருக்கும்.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். பூமி, மனைகள் வாங்குவதில் நிலவிய தடைகள் அகலும். மறு திருமண முயற்சி சாதகமாகும்.

    வெகு விரைவில் அஷ்டமச் சனியின் தாக்கம் குறையப் போவதால் பெரிய அளவிளான எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். உள்ளம் மகிழும் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும் வாரம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.கணவன் மனைவி உறவு பலப்படும்.பெண்களுக்கு மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். காதல் பிரச்சனையால் வம்பு, வழக்கு வரலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. அம்மன் பாடல்கள் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

    20.10.2024 முதல் 26.10.2024 வரை

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். தன ஸ்தான அதிபதி சூரியன் நீசம் பெறுவதால் வியாபாரத்தில் லாபம் குறைவது போல் இருந்தாலும் பண வரவு திருப்தியாக இருக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.

    5, 10-ம் அதிபதி செவ்வாய் ராசியில் நீசம் பெறுவதால் சிலர் உத்தியோகம், தொழிலுக்காக இடம் பெயரலாம். முன்னோர்களின் சொத்தில் முறையான பங்கீடு கிடைக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப்பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். குழந்தைகள் தீபாவளிக்கு விதவிதமான பட்டாசு வாங்கி மகிழ்வார்கள். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். நவகிரக சந்திரனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

    மனச் சங்கடம் குறையும் வாரம். ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 4,11-ம் அதிபதி சுக்ரன் குரு பார்வையில் உள்ளார். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே காணப்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகளால் பிரகாசமான எதிர்காலம் உருவாகும். ஆன்லைன் வர்த்தகர்களுக்கு தீபாவளி தொழில் நல்ல லாபத்தை பெற்றுத் தரும்.

    தீபாவளி போனஸ் உற்சாகப்படுத்தும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். 13.10.2024 அன்று மாலை 3.44 முதல் 15.10. 2024 அன்று மாலை 4.48 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக வேலைப்பளுவினால் மனஅழுத்தம் உருவாகும்.மனதில் கலக்கம் தோன்றும். ஞாபக சக்தி குறையும். இரட்டைப் பிள்ளையாரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

    6.10.2024 முதல் 12.10.2024 வரை

    நன்மைகள் நிறைந்த வாரம்.ராசிக்கு 4-ம்மிடமான சுக ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சுக ஸ்தான அதிபதி சுக்ர னுடன் 3, 12-ம் அதிபதி புதன் சேர்க்கை. லாப ஸ்தானதில் குரு வக்ரம் அடைகிறார்.மனபலம், தேகபலம் கூடும். படுத்தவுடன் நிம்மதியாக தூங்குவீர்கள்.வீடு, வாகன யோகம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும்.

    குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். சிலர் பழைய வாகனத்தை புதுப்பிப்பார்கள். சொத்து தொடர்பான முக்கிய நிகழ்வுகள் நடக்கும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வேலை மாற்றம் செய்யலாம்.பெண்களுக்கு உயர்ரக ஆடம்பர ஆடை, பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாயகம் வந்து செல்ல வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சேமிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பராசக்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×