என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
நிம்மதியான வாரம். 6-ம் அதிபதி குரு 9-ல் ஆட்சி பலம் பெறுவதால் எத்த கைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். தன்னம்பிக் கையுடன் செயல்படுவீர்கள்.சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத் தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.கடந்த கால கடன்கள், பிரச்சினைகள் எல்லாம் நிவர்த்தியாகும். கணவன், மனைவிக்கிடையே நிலவிய பனிப்போர் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். 2-ம் அதிபதி சூரியன் 3,12-ம் அதிபதி புதன் மற்றும் 4,11-ம் அதிபதி சுக்கிரனுடன் ராசிக்கு 6-ல் சேர்க்கை பெறுவதால் தாய் வழிச் சொத்து விஷயத்தில் உடன் பிறந்தவர்களுடன் சிறு சலசலப்பு ஏற்படும்.
பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை பஞ்சாயத்து வரை சென்று சாதகமாகும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள். வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். வெற்றிலை மாலை சாற்றி அமாவாசை யன்று ஆஞ்சநேயரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
முயற்சியில் முனைப்புடன் செயல்பட வேண்டிய வாரம். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதால் பெருந்தன்மையாக நடந்து கொள்வது நல்லது. அஷ்டமச் சனி துவங்கவுள்ளதால் தொழில், வேலையில் மாற்றம் ஏற்படலாம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வேலை, தொழில் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.
சிலர் வாடகை வீட்டில் இருந்து போகியத்திற்கு அல்லது சொந்த வீட்டிற்கு செல்லலாம். சிலருக்கு பொருளாதார பற்றாக் குறையை சமன் செய்ய எளிதான இ.எம்,ஐ. முறையில் கடன் வசதி கிடைக்கும். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடனும் கிடைக்கும்.
ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தாய், தந்தையின் ஆதரவு உண்டு. பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஜாதக தசா புத்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் சங்கடங்களும் விலகும்.சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும். வயதானவர்களுக்கு காலணிகள், போர்வைகள் வாங்கி தானம் தரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பேச்சாலும் செயலாற்றலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். தான, தர்மம் உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் சார்ந்த வருமானம் எதிர் பார்க்கலாம். லாட்டரி, பந்தயம், சூதாட்டம், புத்தி சார்ந்த, கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு. சிறு தொழில் புதியதாக கற்று அதை சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். இது வரை வேலை கிடைக்காத மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிலருக்கு பிள்ளைகள் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். கவுரவப் பதவிகள், அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். கூலித் தொழிலா ளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குல, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை கவசமாக காத்தருளும். எனவே பவுர்ணமி நாளில் குல தெய்வ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும் வாரம். 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன் என மூன்று கிரகச் சேர்க்கை பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயின் பார்வையில் இருப்பதால் புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும்.
பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பிள்ளைகளுக்கு சுபநிகழ்வுகள் நடத்தி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக் கப்படும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் செல்ல நேரும். குடும்ப உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.
எந்த விஷயத்தையும் கணவன், மனைவிக்கிடையே திட்டமிட்டு செய்வது நன்மையை மேலும் அதிகரிக்கும். உடல், மன ரீதியான சங்கடங்கள் அகலும்.
29.11.2022 இரவு 7.50 முதல் 1.12.2022 இரவு 11.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பணப்பரி வர்த்தனைகளைத் தவிர்க்க வும். நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
21.11.2022 முதல் 27.11.2022 வரை
அனுகூலமான வாரம். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், முயற்சி ஸ்தானத்திற்கு வக்ர நிவர்த்தி பெற்ற குருப் பார்வை உள்ளது. ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தனாதிபதி சூரியன், முயற்சி, அயன, சயன ஸ்தான அதிபதி புதன், சுகாதிபதி, லாபாதிபதி சுக்ரன் என கிரகங்களின் சஞ்சாரம் கடக ராசியினருக்கு மிகச் சாதமாக உள்ளது.
வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும்.
பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.உத்தியோ கஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள்.பணவரவு திருப்தி தரும். சிலருக்கு பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம். நரசிம்மரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
14.11.2022 முதல் 20.11.2022 வரை
விரும்பிய மாற்றம் தேடி வரும் வாரம். 5, 10-ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்பட்டால் பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். ஆசிரியர் பணி மற்றும் பேச்சை தொழிலாக கொண்ட வர்களுக்கு மேன்மை உண்டாகும்.
பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார்கள். தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்ப தால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிப்பலன்
7.11.2022 முதல் 13.11.2022 வரை
நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம். ராசியை சனி பார்ப்பதால் ஏற்பட்ட ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்சியும் உண்டாகும். தந்தையால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். பூர்வீகச் சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படும்.புதிய தொழில் முதலீடு செய்பவர்கள் மனைவி பெயரில் செய்வது சிறப்பு.
பத்தாமிட ராகுவால் வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி பெரும். ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. தொழில் உத்தியோக ரீதியான சில எதிர்மறை சம்பவம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ அன்று தவிர்க்கவும். தாயின் ஆசிர்வாதம் பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். 3-ம் இடமான சகோதர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விரைவில் அஷ்டமச் சனியின் தாக்கம் ஏற்பட உள்ளதால் தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும். சிலர் தொழில், வேலைக்காக இடம் பெயரலாம். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். 2.11.2022 பகல் 2.15 முதல் 4.11.2022 மாலை 6.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன பிரச்சினையை கூட பெரிதாக எண்ணி கவலைப்படுவீர்கள். சந்திரனை தரிசனம் செய்ய வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் சுக ஸ்தான அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்சபங்க ராஜ யோகம் அடைவதால் வருமான பற்றாக்குறை அகலும். குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும்.
வாங்கிய கடனை திருப்ப கொடுப்பீர்கள். கொடுத்த கடனை வசூலிப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிதாக கட்டிய வீடு வாங்குவீர்கள் அல்லது கட்டுவீர்கள். பலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். மேல திகாரிகள் உங்களிடம் அதிகப் பணிச்சுமையை திணிக்கலாம்.
சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். திருமணமான இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள். பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். கிரகணத்தன்று நெல் அல்லது பச்சரிசி தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் சுகஸ்தான அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்சபங்க ராஜ யோகம் அடைவதால் வருமான பற்றாக்குறை அகலும். குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். என்றோ வாங்கிப்போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும். வாங்கிய கடனை திருப்ப கொடுப்பீர்கள். கொடுத்த கடனை வசூலிப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிதாக கட்டிய வீடு வாங்குவீர்கள் அல்லது கட்டுவீர்கள். பலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும்.
மேலதிகாரிகள் உங்களிடம் அதிகப் பணிச்சுமையை திணிக்கலாம். சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். திருமணமான இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள். பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். கிரகணத்தன்று நெல் அல்லது பச்சரிசி தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். தன ஸ்தான அதிபதி சூரியன் நீசம் பெறுவதால் வியாபாரத்தில் லாபம் குறைவது போல் இருந்தாலும் ஆட்சி பலம் பெற்ற சுக்கிரனால் பண வரவு திருப்தியாக இருக்கும். குழந்தைகள் தீபாவளிக்கு விதவிதமான பட்டாசு வாங்கி மகிழ்வார்கள்.
5,10-ம் அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் தொழில், கல்விக்காக இடம் பெயரலாம். முன்னோர்களின் சொத்தில் முறையற்ற பங்கீடு கிடைக்கும். மேலதிகாரி அதிக பணிச்சுமையை வழங்கலாம். சிலர் ஆரோக்கியத்தை சீராக்க மாற்று மருத்துவ முறையை நாடலாம்.
சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று அஷ்டம ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் தேவையற்ற வம்பு, வழக்குகள் வாசல் கதவை தட்டும். வாய்ப்புகள் தடைபடும்சிலர் பணியில் ஏற்பட்ட வீண் பழியால் வேலையில் இருந்து விலகலாம். சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் விவசாயிகள் பயிர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். சிரத் தையும், கடின உழைப்புமே தொழிலில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். எனினும் ராசியை குரு பார்ப்பதால் மழை போல் வந்த துயர்கள் பனி போல் விலகும். நவகிரகங்களில் சந்திரனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
10.10.2022 முதல் 16.10.2022 வரை
முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம். முயற்சி ஸ்தான அதிபதி புதனிற்கு குருப் பார்வை இருப்பதால் மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும்.வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம்.
பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள்.
பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட் தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதிய மாற்றமும் ஏற்றமும் உண்டு. தந்தையின் பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் பெயரில் மாற்றி எழுதப்படும்.
வெகு விரைவில் அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்கவும். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரவத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள். அம்பிகை வழிபாடு சிறப்பைத் தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406