என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
இந்த வார ராசிப்பலன்
3.10.2022 முதல் 9.10.2022 வரை
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம். வெகு விரைவில் அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும். முதலீட்டாளர்களுக்கு வெளியூர், வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். திருமண வயதினருக்கு காலதாமதத் திருமணம் நல்லது.
தம்பதிகள் கருத்து வேறுபாடு அல்லது உத்தியோக நிமித்தமாக குறுகிய காலம் பிரிவு உண்டாகும். 4-ல் கேது நிற்பதால் வீடுகட்டும் பணியில் சிறிய தொய்வு உண்டாக வாய்ப்புண்டு.சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம்.தொழிலை மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். வருமானம் ஒரு வழியில் வந்தால் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது
6.10.2022 காலை 8.27 முதல் 8.10.2022 பகல் 11. 23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உண்மையில் எந்த குறை இல்லாவிட்டாலும் மனக்குறை, கற்பனை பயம் ஏற்படலாம். பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
26.9.2022 முதல் 2.10.2022 வரை
உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். தன ஸ்தான அதிபதி சூரியனுடன் குரு பார்வையில் சஞ்சரிக்கும் புதன், சுக்கிரனால் குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும்.அடமான நகைகளை மீட்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொழிவு பெறச் செய்வீர்கள்.
கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். இளைய சகோதரருக்கு கொடுத்த பணம் வசூலாகும். வேலையாட்களிடம் நிலவி வந்த குழப்பம் மறையும். புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும்.
குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். ஆஞ்சநேயரை வழிபட்டு தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
கடகம்
இந்த வார ராசிப்பலன்
19.9.2022 முதல் 25.9.2022 வரை
புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஜனவரியில் அஷ்டமச் சனி ஆரம்பமாகுவதால் புதியதாக சுய தொழில் துவங்குவதை விட உத்தியோகமே சிறப்பு. அதிக முதலீட்டாளர்கள் புதிய தொழில் ஒப்பந்தத்தில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் கூட்டாளி களிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.புதிய தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் என புதுப்புது மாற்றங்கள் நிகழும். உத்தியோகஸ்தர்கள் தனித் தன்மையுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம்.
சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் குறையும். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். பிள்ளைகளுக்கு கவுரவம் அந்தஸ்துள்ள இடங்களில் வரன் அமையும். தந்தை-மகன் உறவு பலப்படும். முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும்.
ஏப்ரல் வரை ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம்.காரியத்தை நிறைவேற்றுவதில் இடையூறுகள், தடைகள் இழுபறிகள் வந்தாலும் தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாது. அமாவாசையன்று வயோதிகர்களுக்கு தயிர் சாதம் தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
12.9.2022 முதல் 18.9.2022 வரை
சாதகமான வாரம். ராசிக்கு குருப்பார்வை கிடைப்பதால் புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனுகூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் பெருகும். பணப்புழக்கம் சரளமாகும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும்.முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.பாக்கிய பலன் மிகுதியாகும்.விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்பனையாகும்.
மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும். உத்தியோ கஸ்தர்களுக்கு வேலையில் நிலவிய நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம்.
கடக ராசியினர் அஷ்டமச் சனி ஆரம்பிப்பதற்கு முன்பு திருமணத்தை நடத்தி முடிப்பது உத்தமம். சில தம்பதிகள் தொழில்,உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். அரசு வழி காரியங்கள் சித்திக்கும். வீண் அலைச்சல் விரயம் தொடரும். சனிக்கிழமை சரபேஸ்வரரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
5.8.2022 முதல் 11.9.2022 வரை
சாதகமான வாரம். தன ஸ்தான அதிபதி சூரியனும் 4,11-ம் அதிபதி சுக்ரனும் தன ஸ்தானத்தில் சேர்க்கை பெற்று இருப்பதால் தொலைந்த, கை மறதியாக வைத்த முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறு முடிவிற்கு வரும். சகோதர, சகோதரிகளுடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினைக்கு மத்தியஸ்தர்கள் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.
தொழில், உத்தியோகத்திற்காகமனைவி குழந்தைகளை பிரிந்து வேறிடம் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள். இந்த வாரம் இன்டர்வியூ உங்களுக்கு சாதகமாக முடியும். திருமணம், புத்திர பிராப்தம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வாய்ப்பு உள்ளது. கண்டகச் சனியால் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். தலைமைப் பதவிகள் தேடி வரும்.கணவன்-மனைவி கருத்தொற்றுமையுடன்இருப்பார்கள்.
9.9.2022 அன்று காலை 12.40 மணி முதல் 11.9.2022 அன்று காலை 2.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் முக்கிய முடிவுகளையும் ஒத்தி வைக்கவும்.
பிரதோஷ நேரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நற்பலன் மிகுதியாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
29.8.2022 முதல் 4.9.2022 வரை
அறிவாற்றலாலும் திறமையாலும் முன்னேற்றமடையும் வாரம். தன ஸ்தான அதிபதி தன ஸ்தானத்தில் ஆட்சி, சகாய ஸ்தான அதிபதி புதன் உச்சம், பாக்கிய அதிபதி குரு ஆட்சி என பல்வேறு கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். மாமனாருடன் ஏற்பட்ட மன ஸ்தாபம் விலகும்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். வெளிநாடு, மாநிலத்தில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் கிடைக்கும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஊர் மாற்றம், வேலை மாற்றம் செய்ய நேரும்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் மற்றும் அலுப்பு குறையும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சற்று இழுபறியாகும். புதிய வீடு, வாகனத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. வரவை விட செலவு அதிகரிப்பதால் எதிர்காலம் பற்றிய அச்சம் அதிகரிக்கும். ஆலங்குடி சென்று ஸ்ரீ குரு பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
22.8.2022 முதல் 28.8.2022 வரை
முன்னேற்றமான வாரம்.சுகாதிபதி, லாபாதிபதி சுக்ரன் ராசியில் சனி, குரு பார்வையில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் உயர்வை அடைவீர்கள். பற்றாக்குறை பட்ஜெட் அகலும். குடும்ப தேவைகள் நிறைவேறும். பெண்களுக்கு தாய் வழிப்பாட்டி வீட்டுச் சீதனம் கிடைக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முதலாளிகளுக்கு தொழிலாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். நம்பிக்கையான புதிய வேலையாட்கள் கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான கடன் கிடைக்கும். பாகப் பிரிவினையில் நிலவிய சட்டச் சிக்கல்கள் அகலும்.சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும்.
சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் கிடைக்கும்.செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக இயக்கங்கள் அல்லது சங்கங்களுக்கு தங்கள் சேவையை அர்பணிக்கலாம். 7, 8-ம் அதிபதி சனி வக்ரம் பெற்றதால் சில தம்பதிகள் கருத்து வேறுபாட்டால் பிரியலாம். பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பிற்கு உகந்த காலம் அல்ல. ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம்.நான்காம் அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். ஆண்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். குழந்தை பேறு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள்.
முக்கிய பணிகளை ஒத்திப்போடும் எண்ணத்தைத் தவிர்த்து வியாபாரத்தில் நுணுக்கமாக நடந்து கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். சில அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவார்கள். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும்.
சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்மேற்கொள்ளப்படும். சிலரின் மறுமண முயற்சி வெற்றி தரும்.
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். தினமும் லலிதா சகஸ்ர நாமம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
8.8.2022 முதல் 14.8.2022 வரை
திடீர் திருப்பங்கள் உருவாகும் வாரம். 5, 10-ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் நிற்கிறார். தன ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் காலமும், நேரமும் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது.
கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். புகழ், அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் தேடி வரும். சொந்த தொழில் செய்யும் அமைப்பு உருவாகும். ஒத்துப் போகாத பழைய கூட்டாளியிடம் இருந்து விடுபடுவீர்கள். நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும்.
ஆரோக்கிய குறைபாடு அகலும். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். மனச் சங்கடம் மறையும்.ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் வாழ்வாதாரத்திற்குத் தேவையான சேமிப்பை உயர்த்த ஏற்ற நேரம். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் நிவர்த்தியாகி திருமண வாய்ப்பு தேடி வரும்.
வைத்தியச் செலவு குறையும்.12.8.2022 பகல் 2.50 முதல் 14.8.2022 மாலை 4.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் உடல் நலிவுறும். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வயது முதிர்ந்த பெண்களுக்கு உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
1.8.2022 முதல் 7.8.2022 வரை
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் நிற்கும் சூரியனை சனி பார்ப்பதால் சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தேடி வரும்.
இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம்,வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத பணவரவுகள் ஏற்படும். தொழில் போட்டியாளர்களைக் காட்டிலும் அரிய சாதனைகளைப் புரிவீர்கள். சிலருக்குப் புதிய வாகன யோகம் ஏற்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். இடைவிடாத தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நிச்சயிக்கப்படும்.
குழந்தைகளின் வளர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எளிதில் கிடைக்கும். பெண்கள் ஆடி மாத விசேஷங்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். திங்கட்கிழமை அம்பிகையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசி பலன்கள்
25.7.2022 முதல் 31.7.2022 வரை
நினைத்த காரியங்கள் வேகமாக நடக்கும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியனும், சகாய ஸ்தான அதிபதி புதனும் ராசியில் சேர்க்கை பெறுவதால் பிரிந்து சென்ற உறவுகள் திரும்ப வருவார்கள். சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் நிச்சயமாகும். தொழில் நல்ல லாபத்தை அள்ளித்தரும்.
ஏழாமிடத்தில் சனி வக்ரமாக இருப்பதால் பங்குதாரர்கள் மாறக்கூடும். சிலர் புதிய கூட்டாளிகளுடன் இணைந்து புதிய தொழில் கிளைகள் ஆரம்பிக்கலாம். பெண்களுக்கு வாழ்க்கைத் துணைவர் மூலமாக விலை உயர்ந்த பொருட்கள்கிடைக்கும்.சிலருக்கு கற்பனை பயத்தால் மனதடுமாற்றம் உண்டாகலாம்.பெண்களுடன் அளவாகப் பழகுவது நல்லது.
செலவுகள் கூடும். நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு குலதெய்வ அனுகூலத்தால் குழந்தை பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பார். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். இழந்த பொருட்கள் மீண்டும் திரும்ப வந்து சேரும். அரசுப் பணிக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவிக்கான பணி நியமன ஆணை கிடைக்கும்.
பிரதோசத்தன்று சிவனுக்கு பால் அபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406