search icon
என் மலர்tooltip icon

    கடகம் - வார பலன்கள்

    கடகம்

    வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

    20.10.2024 முதல் 26.10.2024 வரை

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். தன ஸ்தான அதிபதி சூரியன் நீசம் பெறுவதால் வியாபாரத்தில் லாபம் குறைவது போல் இருந்தாலும் பண வரவு திருப்தியாக இருக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.

    5, 10-ம் அதிபதி செவ்வாய் ராசியில் நீசம் பெறுவதால் சிலர் உத்தியோகம், தொழிலுக்காக இடம் பெயரலாம். முன்னோர்களின் சொத்தில் முறையான பங்கீடு கிடைக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப்பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். குழந்தைகள் தீபாவளிக்கு விதவிதமான பட்டாசு வாங்கி மகிழ்வார்கள். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். நவகிரக சந்திரனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

    மனச் சங்கடம் குறையும் வாரம். ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 4,11-ம் அதிபதி சுக்ரன் குரு பார்வையில் உள்ளார். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே காணப்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகளால் பிரகாசமான எதிர்காலம் உருவாகும். ஆன்லைன் வர்த்தகர்களுக்கு தீபாவளி தொழில் நல்ல லாபத்தை பெற்றுத் தரும்.

    தீபாவளி போனஸ் உற்சாகப்படுத்தும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். 13.10.2024 அன்று மாலை 3.44 முதல் 15.10. 2024 அன்று மாலை 4.48 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக வேலைப்பளுவினால் மனஅழுத்தம் உருவாகும்.மனதில் கலக்கம் தோன்றும். ஞாபக சக்தி குறையும். இரட்டைப் பிள்ளையாரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

    6.10.2024 முதல் 12.10.2024 வரை

    நன்மைகள் நிறைந்த வாரம்.ராசிக்கு 4-ம்மிடமான சுக ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சுக ஸ்தான அதிபதி சுக்ர னுடன் 3, 12-ம் அதிபதி புதன் சேர்க்கை. லாப ஸ்தானதில் குரு வக்ரம் அடைகிறார்.மனபலம், தேகபலம் கூடும். படுத்தவுடன் நிம்மதியாக தூங்குவீர்கள்.வீடு, வாகன யோகம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும்.

    குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். சிலர் பழைய வாகனத்தை புதுப்பிப்பார்கள். சொத்து தொடர்பான முக்கிய நிகழ்வுகள் நடக்கும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வேலை மாற்றம் செய்யலாம்.பெண்களுக்கு உயர்ரக ஆடம்பர ஆடை, பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாயகம் வந்து செல்ல வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சேமிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பராசக்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

    29.9.2024 முதல் 5.10.2024 வரை

    உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். லாப ஸ்தானதில் குரு. லாப அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தில் ஆட்சி என லாப ஸ்தானம் வளம் பெறுகிறது. தன வரவு தாராளமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும். இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும்.தொழிலில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் உள்ள சரக்குகளின் மதிப்பு உயரும். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில் புரிபவர்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் சூழல், ஆர்வம் உருவாகும்.

    அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும். குடும்ப நலனுக்காக ஆன்மீக தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும். அரசிடமிருந்துவீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். சில சமூக ஆர்வலளர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். அமாவாசை நாளில் ஆன்மீக தலங்களுக்குச் சென்று புனித நீராடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)

    22.9.2024 முதல் 28.9.2024 வரை

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும் வாரம். கோட்சார சனி பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி காலத்தில் ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும். எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள் அல்லது ஒதுங்கிப் போவார்கள். ஆரோக்கிய குறைபாடு அகன்று மருத்துவச் செலவும் குறையும். மார்ச் 2025ல் அஷ்டமச் சனி முடியும் வரை புதியதாக சுய தொழில் துவங்குவதை தவிர்க்கவும். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது.

    பிள்ளைகளுக்கு கவுரவம் அந்தஸ்துள்ள இடங்களில் வரன் அமையும். தந்தை மகன் உறவு பலப்படும். முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும். சிலர் பிழைப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம்.வீடு, வாகனம் சொத்து, படிப்பு சார்ந்த விஷயங்களில் ஏற்பட்ட தர்மசங்கடங்கள் சீராகும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது ஆனந்தமாக இருக்கும்.அதிகமாக உழைக்க நேரும். வயோதிகர்களுக்கு தயிர் சாதம் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)

    15.9.2024 முதல் 21.9.2024 வரை

    சொத்துக்களில் முதலீடு செய்ய உகந்த நேரம். சுக ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி.சந்தேகம்,பேராசை, ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுவீர்கள். அழகு ஆடம்பர பொருட்கள், தங்கம், வெள்ளி வீடு, வாகன யோகம் என வாழ்வாதாரம் உயரும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை தொந்தரவு செய்யும்.

    மகிழ்ச்சியான சக்திமிக்க காதல் மன நிலையில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். தாயன்பு கிடைக்கும். தாயார் உங்களை புரிந்து கொள்வார். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.அது உங்கள் ஆன்மீக வாழ்வுக்கு அடித்தளமாக அமையும்.16.9.2024 அன்று காலை 5.44 முதல் 18.9.2024 அன்று காலை 5.44 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்னெச்சரிக்கை தேவை, விவேகமற்ற வேகமான முடிவு எடுக்காதீர்கள். காஞ்சி மகா பெரியவரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை

    இழந்த திரவியங்களை மீட்கும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று அஷ்டமாதிபதி சனியின் பார்வை பெறுவதால் இழந்த இன்பங்கள் பொருட்களை மீட்கக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும்.லட்சுமி கடாட்சம் முன்னேற்றம் உண்டாகும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்க கூடிய நேரம். கையில் தாராள பணம் புழங்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எதிரிகளை வெல்லும் சக்தியும் ஏற்படும். அரசாங்க ஆதரவு புதிய காண்ட்ராக்ட் கிடைக்கும். வேதனைகளை விரட்டி சாதனையாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். ஜாமீன் கடன் தொல்லைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். பச்சை கற்பூரம் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)

    1.9.2024 முதல் 7.9.2024 வரை

    தடைபட்ட அனைத்து சுப பலன்களும் கூடி வரும் வாரம்.ராசியில் 3,12ம் அதிபதி புதன். லாப குருவால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிக் குடித்தனம் சென்ற வாரிசுகள் மீண்டும் வீடு வந்து சேருவார்கள். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் விலகும். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும்.சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும். புகழ், அந்தஸ்து, கவுரவம், நம்பிக்கை, நாணயம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும்.குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    கடன் சுமை குறையும்.பெண்களுக்கு சகோதரர் வகையில் வரவு உண்டு. கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். தம்பதிகளிடம் சுமூக உறவு நிலவும்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உருவாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். இளநீர் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)

    25.8.2024 முதல் 31.8.2024 வரை

    தன வரவில் தன் நினிறைவு உண்டாகும் வாரம். ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற 3,12ம் அதிபதி புதன். தன ஸ்தானத்தில் தன அதிபதி சூரியன் இருப்பதால். சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்கும். மனதை வாட்டி வதைத்த தொழில் கடன்கள் குறையத் துவங்கும். பூர்வீக சொத்தில் பாகப் பிரிவினை நடக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும்.உத்தியோகத்தில் சக பணியாளர்களால், உயர் அதிகாரிகளால் நிலவிய தொல்லைகள் மாறும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம்.

    அஷ்டமச் சனியின் தாக்கம் குறைவதால் சுய ஜாதக ரீதியாக எத்தகைய திருமணத் தடை இருந்தாலும் நீங்கி திருமண பாக்கியம் கூடி வரும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது. சிலரின் பிள்ளைகளின் கல்விக்காக இடம் பெயர நேரும். எதிர் கால தேவைக்காக திட்டமிடுவீர்கள். வீடு . வாகன முயற்சிகள் வெற்றி தரும். பெரிய முதலீட்டில் தொழிலில் செய்பவர்கள் இன்சூரன்ஸ் செய்து கொள்வது நலம்.சிலர் காசி, கயா போன்ற புனித தலங்களுக்கு சென்று வரலாம். கிருஷ்ணன் வழிபாட்டால் மேன்மை உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)

    19.8.2024 முதல் 25.8.2024 வரை

    குடும்ப தேவைகள் நிறைவேறும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். சிறு தொழில் புரிபவர்களுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைத்துத் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புத்திர பாக்கியம் உண்டாகும்.அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். கவுரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும்.

    அஷ்டமச் சனியின் தாக்கம் குறைவதால் எதையும் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உண்டாகும். பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும்.இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள். 19.8.2024 அன்று மாலை 6.59 முதல் 21.8.2024 இரவு 7.31 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் எதிர்காலம் பற்றிய கற்பனை பயம் அதிகரிக்கும். தினமும் சுந்தரகாண்டம் படிக்க பாவங்கள் விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)

    12.8.2024 முதல் 18.8.2024 வரை

    பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன் சேர்க்கை, இது கடகத்திற்கு மிகுதியான பொருள் வரவை அதிகரிக்கும் அமைப்பாகும். மறைமுக நெருக்கடிகள், கடன் தொடர்பான சர்ச்சைகள் முழுமையாக விலகி தொழிலில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். அடிப்படை தேவைக்கு திணறியவர்கள் தாராள தன வரவால் தன்நிறைவு அடைவார்கள். தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள்.

    அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். வைத்தியச் செலவு, நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சகோதரர்களால் வீண் விரயம் உண்டு. கடன் பெற்று சொந்த வீடு வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். மறுமண முயற்சி சித்திக்கும். எதிர்பாராத மாமனாரின் உதவி ஆச்சரியமூட்டும். எதிரிகளின் பலம் குறையும். அசைவ உணவுப் பிரியர்கள் சிலர் சைவ உணவிற்கு மாறுவார்கள். வரலட்சுமி நோன்பு அன்று விரதம் இருந்து மகா லட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)

    5.8.2024 முதல் 11.8.2024 வரை

    விரும்பிய மாற்றங்கள் தேடிவரும் வாரம். ராசியில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன். மனதில் நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும். நல்ல யோகமான பலன்கள் நடக்கும். கடந்த கால மனச் சோர்வுகள் நீங்கும். திடமான எண்ணத்தோடு அனைத்து காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். மனக்கசப்பால் பிரிந்த உடன் பிறந்தவர்கள் குடும்ப உறவுகள் ஒன்று சேருவார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    கடன் வாங்காமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். பிள்ளைகள் மீண்டும் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல் ஏற்படும். பெண்கள் புதிய நகைச் சீட்டு போடலாம். ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு பச்சை புடவை சாற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×