என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். ராசியில் தன அதிபதி சூரியன். அரசாங்க விருதுகள், அரச மரியாதை கிடைக்கும். புதிய வியாபார யுக்தி களால் அதிக லாபம் அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். மனோபலம் அதிகரித்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகமாகும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். தடைபட்ட புத்திர பிராப்தம் சித்திக்கும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிகம் உழைக்க நேரும்.
வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் திரும்பலாம்.பெண்களுக்கு கணவரின் ஒற்றுமை மகிழ்ச்சியை அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு இடப் பெயர்ச்சி எண்ணம் மிகுதியாகும்.ஞாபக குறைவு ஏற்படலாம். முக்கிய ஆவணங்கள் இல்லாத சொத்திற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு கள் சாதகமாகும்.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறையும். ஆடிப் பெருக்கு அன்று புனித நதிகளில் நீராடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
22.7.2024 முதல் 28.7.2024 வரை
பொருளாதாரத்தில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசியில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன். தெளிவான மனநிலையோடு இருப்பீர்கள். ஆன்ம பலம் பெருகும். இது வரை நீங்கள் அனுபவித்த சங்கடங்கள் அகன்று நன்மைகளும் ஆதாயங்களும் உண்டாகப் போகிறது. உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் மறையும். செல்வாக்கு, சொல்வாக்கு அந்தஸ்து, உயரப்போகிறது. கடன் சுமை குறையும். பொன், பொருள் சேர்க்கை, சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அடமான நகைகள் மீளும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்களின் நல் ஆசிகளைப் பெறு வீர்கள்.
குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிக்கல்கள் விலகும். கல்லூரி உயர் படிப்பிற்கான முயற்சிகள் அனுகூலமாகும்.23.7.2024 அன்று காலை 9.20 மணி முதல் 25.7.2024 அன்று காலை 10.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தனிமையில் இருப்பதை விரும்புவீர்கள்.எந்த புதிய முடிவும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
15.7.2024 முதல் 21.7.2024 வரை
ராசியில் சூரியன் சுக்ரன் சேர்க்கை, லாப ஸ்தானத்தில் செவ்வாய் குரு சேர்க்கை என முக்கிய கிரகங்கள் கடக ராசிக்கு ஒரு உன்னதமான மாற்றத்தை வழங்கப் போகிறது. சனி பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும். வியாபாரத்தில் ஏற்றமான சூழல் உண்டாகும். அரசு காரியங்களில் சாதகமான நிலை நிலவும். வழக்கு விவகாரங்கள் ஒத்திப் போகும். ஆயுள் ஆரோக்கியம் தொடர்பான பயம் விலகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும் உடல் ஆரோக்கியம் மேம்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும்.தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.முத்துமாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
8.7.2024 முதல் 14.7.2024 வரை
தடைகள் விலகும் வாரம். ராசியில் புதன், சுக்ரன் சேர்க்கை. மனம் ஆனந்தமாக இருக்கும். மனதில் இனம் புரியாத இன்பம் உண்டாகும். அழகான ஆடை அணிவ திலும், ஆடம்பர வாழ்க்கையிலும் ஆர்வம் கூடும். எதிர்ப்புகள் இல்லாத நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் சீராகும். பணத்தை எவ்வாறு சம்பாதிப்பது, சம்பாதித்த பணத்தை எவ்வாறு சேமிப்பது என்ற கலையை கற்றுக் கொள்வீர்கள். அதனால் வளர்ச்சியும், லாபமும் பெருகி சேமிப்பு உயரும். ஆரோக்கி யத்தில் முன்னேற்றம் உண்டாகி மருத்துவமனையில் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள். வைத்திய செலவு குறையும்.
குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். இல்லத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் விலகி நன்மைகள் உண்டாகும். தொழில், வியா பாரத்தில் தடை, தாமதங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். வெளிநாட்டு, தனியார் உத்தியோகம், அரசு வேலை முயற்சியில் நல்லது நடக்கும்.அரசு பணியாளர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடக்க வாய்ப்புள்ளது. வீடு, வாகனம், கல்விச் செலவு என சுப விரயமாக மாறும்.உடன் பிறப்புகளால் சகாயமான பலன்கள் ஏற்படும். விநாயகரை வழிபட வினைகள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசியில் 3, 12-ம் அதிபதி புதன் சஞ்சரிக்கிறார். திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயத்தை அடைவீர்கள். சனி பகவான் வக்ரம் அடைவதால் அஷ்டமச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். வழக்குகள் தள்ளுபடியாகும். அவமானம் குறையும். உங்களை புரிந்து கொள்ளக் கூடிய புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே தலையாய நோக்கமாக இருப்பீர்கள். வீரமும் தைரியமும் எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடி ஒரு முடிவை பார்த்து விட வேண்டும் என்ற உத்வேகமும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை, உழைக்காத அதிர்ஷ்ட வருமானம், உயில் சொத்துக்கள் போன்ற அதிர்ஷ்ட பலன்கள் நடைபெறும். சம்பள உயர்வு, மனத்திற்கு விருப்பமான இடப்பெயர்ச்சி, அழகு ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்க கூடாது. சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆன்மீக சிந்தனை மிகுதியாகும். சுப பலனை அதிகரிக்க விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
மனதை உலுக்கிய கவலைகள் விலகும் வாரம். ராசி அதிபதி புதன் செவ்வாய் பார்வையில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிதுனத்திற்கு மிகவும் சாதகமான அமைப்பு . செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.ஆரோக்கியம், ஆடம்ப ரமான, அந்தஸ்தான வாழ்க்கை, தாயின் அன்பு, அரவணைப்பு, அதிகப்படியான சொத்து சேர்க்கை, கால்நடை பாக்கியங்கள், சொத்துகள் மூலம் வாடகை, விவசாய வருமானம் ஆகிய சுப பலன்கள் நடக்கும். மன ரீதியான உளைச்சல், சங்கடங்கள் விலகும். சனி வக்ரம் பெற்றதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். முதல் திருமணம் தோல்வியடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு மறு விவாகத்தால் வாழ்க்கை வளம் பெறும். தள்ளிப் போன வழக்குகள் விசாரணைக்கு வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும்.எதிர்பாராத மாமனாரின் உதவிகள் ஆச்சரியமூட்டும். கணவன் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். வெளிநாட்டு பயணம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கோதண்ட ராமரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
24.6.2024 முதல் 30.6.2024 வரை
சங்கடங்கள் விலகும் வாரம். யோகாதிபதி செவ்வாயின் 4-ம் பார்வை ராசியில் பதிகிறது. எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வந்து சேரும். அரசு உத்தி யோகம் கிடைக்கும். அரசியல் பிரமுகர்க ளுக்கு சோதனைகள் சாதனைகளாகும்.பங்குச் சந்தை ஆதாயம் கூடும். பிள்ளை களுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். வார இறுதியில் அஷ்டமாதிபதி சனி வக்ர மடைவதால் அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும்.பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும். தொழிலில் எப்பொழுது விடிவு காலம் வரும் என்று புலம்பி தவித்தவர்களுக்கு தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவுர வமான சூழல் உண்டாகும். மன ரீதியாக, உடல் ரீதியாக அனுபவித்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம். வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். 26.6.2024 அன்று மதியம் 1.49 மணி முதல் 28.6.2024 அதி காலை 4.31 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். பிரயாணங்களை ஒத்தி வைக்கவும்.காளியை வழிபட துன்பங்களும், துயரங்களும் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
17.6.2024 முதல் 23.6.2024 வரை
தடை, தாமதங்கள் அகலும் வாரம்.சில நாட்களில் அஷ்டம ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் வாழ்வில் நிலவிய இடையூறுகள் விலகும்.லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் தீராத பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதுவரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்கள் புகழ், அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு, சொல்வாக்கு வளரும். சோதனைகள் சாதனைகளாகும். முயற்சிகள் பலிதமாகும். தைரியம், தெம்பு அதிகரிக்கும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும்.
தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரணையும் ஆதரவும் உண்டு.பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.லாப குருவால் பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கள் அகலும். வருமானம் அதிகரிக்கும். வராக்கடன் வசூலாகும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய பிரச்சனைகள் தீரும். பவுர்ணமியன்று பராசக்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
10.6.2024 முதல் 16.6.2024 வரை
அருளும் பொருளும் கிடைக்கும் வாரம். 5,10ம் அதிபதி செவ்வாய் ஆட்சி. பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவப் பதவி கிடைக்கும்.சிலர் வெளிநாட்டு கம்பெனிக்கு வேலையை மாற்றுவார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.நீண்ட நாட்களாக குலதெய்வத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருப்பவர்களுக்கு செவ்வாய் அந்த பலனை ஏற்படுத்துவார். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடமாற்றம் கிடைக்கும்.
உங்களின் மேல் அக்கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டிய காலமாகும். தனம் வாக்கு ஸ்தான அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் விரயாதிபதி புதனுடன் சேர்க்கை பெறுகிறார்.வார முற்பகுதியில் சிறு குழப்பங்கள், சுணக்கங்கள் இருந்தாலும் பிற்பகுதியில் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். முதலில் தடுமாறி பின்னர் வேகம் எடுக்கும் வாரம். கல்யாண முயற்சி கைகூடும். ஆரோக்கியத்தில் நிலவிய தொல்லைகள் அகலும். பராசக்தி வழிபாட்டால் மன நிம்மதி கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
3.6.2024 முதல் 9.6.2024 வரை
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை. லாப ஸ்தானம் பலம் பெறுவதால் கட கத்திற்கு பொருளாதார நெருக்கடிகள் விலகும்.குடும்ப உறவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியான சூழல் நிலவும். கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும். தாய்வழிச் சொத்துப் பிரச்சினை யில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும்.விவ சாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு கணிசமான ஆதாயம் கிடைக்கும். பூமி, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.
வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரி சித்தப்பா மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தொழில் உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் கூடி வரும். ஆரோக்கி யத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். விசா தொடர்பான சட்ட சிக்கல் விலகும். அமாவாசை யன்று புனித நதிகளில் நீராடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசி பலன்
27.05.2024 முதல் 02.06.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சூரியன், புதன். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி என கடகத்திற்கு கிரக சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள் கிடைக்கும். அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தின் மங்களகரமான சுப நிகழ்விற்கு நீங்கள் எதிர்பாராத சில பணவரவை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் சந்திப்பு மனதில் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். வாழ்க்கைத் துணையால் கவுரவம் அதிகரிக்கும். சிலருக்கு அரசியல் ஆர்வம் துளிர்விடும். பணம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். சொந்த வீடு கட்ட அரசின் மானியம் கிடைக்கும். தொழிலுக்காக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணத்தை சந்திக்க நேரும். பெண்கள் உடல் நலனை பராமரிக்க தியானம், யோகா மற்றும் இயற்கை உணவில் ஆர்வம் செலுத்துவீர்கள். இளம் வயதினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 29.5.2024 இரவு 8.06 மணி முதல் 31.5.2024 பகல் 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு, சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். மனதில் பய உணர்வு, அச்சம் ஏற்படும். சங்கடஹர சதுர்த்தியன்று பன்னீர் அபிஷேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
20.5.2024 முதல் 26.5.2024 வரை
தடை தாமதங்கள், எதிர்ப்புகள் விலகும் வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன், குரு சஞ்சரிப்பதால் தனம், வாக்கு. குடும்ப ஸ்தானம், லாப ஸ்தானம்பலம் பெறுகிறது.அஷ்டமச் சனியால் ஏற்பட்ட குடும்ப குழப்பங்கள் விலகி ஒற்றுமை பலப்படும். தேவைக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், தொழில் துவங்கும் அமைப்பும் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு கூடும். வராக் கடன்கள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கவுரவமான பதவி உயர்வும். எதிர்பார்த்த சில வாய்ப்புகளும் தாமாக கிடைக்கும். பங்குதாரர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். பெண்களுக்கு தங்கம் வாங்கும் யோகம் கிட்டும். வீடு, நிலம், வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.மனதளவில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் நீங்கும். பல நல்ல காரியங்கள் நடக்கும். பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். சொத்து விற்பனையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளை அரவணைத்துச் செல்லவும். உடல் அசதிகள் நீங்கி புத்துணர்வு உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக கக்தி கூடும். நவகிரக சந்திரனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406