என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
இந்தவார ராசிபலன்
13.5.2024 முதல் 19.5.2024 வரை
லாபகரமான வாரம். தன அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் குருவுடன் சேருவதால் கடந்த ஒரு வருடமாக அஷ்டம சனியின் காலத்தில் நீங்கள் செய்த முயற்சிகள் வீண் போகாது. கடந்த கால நெருக்கடிகள் விலகி நினைத்ததை சாதிக்கக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். பொருளாதாரத்திலும் வாழ்க்கையிலும் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி நிறைவேறும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். குருபகவான் தைரியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் கவசமாக இருப்பார். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள்.
வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையத் துவங்கும். சகோதர சகாயம் ஏற்படும். சிலர் வீடு, நிலம் வாகன வகையில் சுப முதலீடு செய்யலாம். அதற்காக கடன் பெறலாம். தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம் விலகும். சொத்து விற்பனையில் அதிக லாபம் கிடைக்கும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். உடல் நிலை மனநிலை சீராகும். வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிபலன்
6.5.2024 முதல் 12.5.2024 வரை
தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும் வாரம். லாப குருவால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும்.
பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். அரசுப்பணி, வெளிநாட்டுப் பணி போன்ற விருப்பங்கள் நிறைவேறும். வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகளில் சுமூக தீர்வு கிடைக்கும். எதிரிகள் பயம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பணம் எனும் தனம் சமூக அங்கீகாரம், பெற்றுத் தரும்.ராஜ மரியாதை கிடைக்கும். தாராள பணவரவால் கடன் பிரச்சினைகள் குறையும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகளிடம் இருந்த விரிசல்கள் நீங்கும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். பிறருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். குடும்ப உறவுகளிடம் தேவையற்ற தர்க்கம், வாதத்தை தவிர்ப்பது நல்லது. அமாவாசையன்று புனித நீராடவும்.இந்த வார ராசிபலன்
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
முயற்சிகளில் வெற்றி அடையும் வாரம். உச்சம் பெற்ற தனாதிபதி சூரியன் சுகஅதிபதி, லாபாதிபதி சுக்ரனுடன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வர வேண்டிய பதவிகள், சலுகைகள், பெயர், புகழ் அனைத்தும் தேடி வரும். வெளிநாட்டு வேலை முயற்சி நிறைவேறும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். இந்த கால கட்டத்தில் புதிய வீடு, மனை வாங்கும் அமைப்பும், பழைய சொத்துக்களில் இருந்து வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஞாபக மறதி குறையும். தந்தை மகன் முரண்பாடு முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணை மூலம் மதிப்பு, அதிகமான சொத்து, பணம், நகைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சிலர் போலியான விளம்பரங்களை நம்பி நல்ல வேலையை தவறவிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் குடும்பத்தை அமைதியாக வழி நடத்துவார்கள்.
2.5.2024 அன்று பகல் 2.32 மணி முதல் 4.5.2024 மாலை 4.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயலில் தடுமாற்றம், சிந்தனையில் குழப்பம் ஏற்படலாம். சிந்தித்து நிதானமாக செயல்பட வேண்டும். செவ்வாய்கிழமை அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
போராட்டங்கள் விலகும் வாரம். 10ம்மிட குருவாலும், அஷ்டமச் சனியாலும் ஏற்பட்ட போராட்டங்கள் நிம்மதியின்மை விலகும். லாப குரு உங்களை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்துச் செல்லப் போகிறார். தீர முடிவெடுத்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். இழந்த இன்பங்களை மீட்டுப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாக்குத் திறமையால் லாபம் ஈட்டுவீர்கள். பணத்தட்டுபாடு சீராகும். அனைத்து துறையினருக்கும் பணவரவுகள் அதிகரிக்கும். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தங்க விலை உயர்வை பொருட்படுத்தாமல் தங்கத்தில் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.
பாக்கிகளை கறாராக பேசி வசூவிப்பீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். புதிய சலுகைகள் சம்பள உயர்வும் உண்டு.ஏற்றுமதி இறக்குமதி தொழில் உத்வேகம் பெறும். தொழில், உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும். சிதைந்த கூட்டுக் குடும்பங்கள் அன்பை பரிமாறுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் ஆசை நிறைவேறும்.நோய் தாக்கம் குறையும். பயணங்கள் அதிகரிக்கும். சித்ரா பவுர்ணமியன்று சித்ர குப்தரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
15.4.2024 முதல் 21.4.2024 வரை
நன்மைகள் நிறைந்த வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 10-ல் தொழில் ஸ்தானத்தில் உச்சம். தன வரவு இரட்டிப்பாகும். உங்கள் பேச்சிற்கு குடும்ப நபர்கள் கட்டுப்படுவார்கள். வாக்கு வன்மை பெருகும். பேச்சு திறமையால் வருமானத்தை அதிகரிப்பீர்கள் மே 1 முதல் தொழில் குரு லாப குருவாக மாறுகிறார் .உங்கள் வாழ்க்கை பக்கத்தை சீர் திருத்தப்போகிறார்.தன வரவில் புதிய மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். குருவும், சனியும் உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தப் போகிறார்கள்.
வருமானத்திற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். தீராத பல வருட பிரச்சினைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். எதிர்கால புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். தொழில் தடைகள் அகலும். சிலர் புதிய வேலைக்கு மாறலாம். வீடு கட்டும் பணி துரிதமாகும்.
அதற்கான கடன் தொகையும் கிடைக்கும். அஷ்டமச் சனியால் ஏற்பட்ட ஆரோக்கிய கேடு சீராகும். உறவுகளால் ஏற்பட்ட மன பாரம் குறையும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.மலைபோல் வந்த துன்பங்கள் பனிபோல் விலகும்.சுப செலவு வரலாம். வீரபத்திரரை வழிபட வெற்றிகள் துணைவரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
8.4.2024 முதல் 14.4.2024 வரை
விருப்பங்கள் பூர்த்தியாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன், உச்சம் பெற்ற சுகாதிபதி சுக்கிர னுடன் பாக்கிய ஸ்தானத்தில் சேருவதால் செயல்களில் வேகம் இருக்கும். எதிர்பார்ப்பு கள் நிறைவேறும். எதிரி தொல்லைகள் விலகும். சுதந்திர உணர்வு உண்டாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.வராக்கடன்கள் வசூலாகும். பணம் பல வழிகளில் வரத் துவங்கும். ஏற்றுமதி, இறக்கு மதியில் நிலவிய சட்டச் சிக்கல்கள், வழக்குகள் முடிவுக்கு வரும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.இதுவரை உத்தி யோகத்தில் நிலவிய நெருக்கடிகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய சொத்துக்கள் சேரும்.
தொழிலில் முன்னேற்றம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கிய குறைபாடு விலகும். செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தந்து கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். பிள்ளைகளால் பெருமையும், நிம்மதியும் உண்டாகும். கணவன், மனைவி வாக்குவாதங்கள் சீராகும். அஷ்டமச் சனி முடியும் வரை முதல், மறு திருமண முயற்சியை தவிர்க்கவும். மகிழ்ச்சியை அதிகரிக்க காலபைர வருக்கு முந்திரி மாலை சாற்றி வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
1.4.2024 முதல் 7.4.2024 வரை
ஒளிமயமான எதிர்காலம் அமையப் போகிறது. லாப ஸ்தானத்தை நோக்கி குரு நெருங்கிக் கொண்டு இருக்கிறார். குருவின் பார்வை முயற்சி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தில் பதியப்போகிறது. அஷ்டமச் சனியால் ஏற்பட்ட இன்னல்களை குருபகவான் அகற்றப் போகிறார்.ஏற்கனவே சுய தொழில் நடத்துபவர்கள் புதிய தொழில் கிளைகள் துவங்கலாம். பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். மனைவியால், உடன் பிறந்தவர்களால், தாய்மாமனால் அனுகூலமான பலன்கள் நடைபெறும். வர வேண்டிய கடன் வசூலாகி கொடுக்க வேண்டிய கடனும் ஓடி அடையும்.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தலைக்கு மேல் வந்த பிரச்சினைகள் தலைப்பாகையோடு சென்று விடும். சகலவிதமான தடைகள் விலகி 5.4.2024 அன்று காலை 7.12 முதல் 7.4.2024 அன்று காலை 7.39 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் ரொக்க பணம் கையாள்வதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
25.3.2024 முதல் 31.3.2024 வரை
தேவைகள் பூர்த்தியாகும் வாரம். லாப ஸ்தானத்தை நோக்கி குரு சென்று கொண்டிருக்கிறார். காலைச் சுற்றிய பாம்பாக இருந்த பிரச்சினைகள் விலகும் காலம் வந்து விட்டது. அஷ்டமச் சனியாலும் 10-ம்மிட குருவாலும் பறிபோன பதவிகள் தேடி வரும். அன்றாடம் காய்ச்சி முதல் அரசியல் பிரமுகர்கள் வரை உள்ள கடக ராசியினர் காலரை தூக்கி விட்டு வெற்றி நடை போடும் நேரம் இது. வெளியில் தலை காட்ட முடியாமல் நிலவிய பிரச்சினைகள் விலகிச் செல்லும். துன்பங்கள் உங்களை துரத்திய காலம் சென்று உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் நேரம் வந்து விட்டது.தொட்டது துலங்கும். தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகும். பெண்களுக்கு புகுந்த வீட்டார் மற்றும் கணவரின் ஒத்துழைப்பால் நிம்மதி அதிகரிக்கும். தம்பதிகள் மனம்விட்டு பேசி குடும்பத்தை சீர் செய்வீர்கள்.
எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு உயரும். பேச்சு வன்மையால் காரியம் சித்தியாகும். வீடு, மனை, சொத்து வாங்குவது விற்பதில் லாபம் உண்டாகும். மாணவர்கள் பாடத்தை புரிந்து படித்து வெற்றிய டைவீர்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த செயலில் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குவது மிக நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
18.3.2024 முதல் 24.3.2024 வரை
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். ராசிக்கு 8-ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய், சுக்ரன். இது கடகத்தினருக்கு யோகமா? அவயோகமா?. அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் தன ஸ்தானத்தை பார்க்கிறது. எப்பொழுதுமே கிரகங்கள் உயிர்காரகதுவத்தை பாதித்தால் பொருளை தந்துவிடும். இப்பொழுது தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் கடகத்திற்கு இது அதிர்ஷ்டமான காலமாகும். இதுவரை வருமானக் குறைபாட்டால் அவதி அடைந்வர்களுக்கு இல்லை என்ற நிலை இனி இல்லை. கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். மனக்கசப்பை ஏற்படுத்திய உறவுகள் உங்களின் உண்மையான அன்பை புரிந்து கொள்வார்கள். விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானத்தால் ஏற்பட்ட மன பாரம் விலகும்.
வீடு வாங்குவது, நிலம் வாங்குவது வீடு கட்டி குடியேறுவது போன்ற சுப பலன்கள் நடக்கும். அஷ்டமச் சனி காலத்தில் இது போன்று சொத்தில் முதலீடு செய்யும் போது வீண் விரயங்கள் குறையும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட சொத்து பணம், நகை, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். திங்கட்கிழமை வெண்மையான மலர்களால் அம்பிகையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
11.3.2024 முதல் 17.3.2024 வரை
அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய், சுக்ரன் இருப்பதால் அஷ்டமச் சனியையும் மீறி சிலரின் காதல் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டம், லாட்டரி, போட்டி பந்தயங்களை நம்பி காலம், பொருள் விரயம் உண்டாகலாம். பிள்ளைகளின் உயர் கல்வி முயற்சி வெற்றியாகும். நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக சுற்றுப் பயணம் செல்வார்கள். பூர்வீகச் சொத்தை விற்று கடைகள் கட்டி வாடகைக்கு விடும் சிந்தனை உருவாகும். சிலர் பழைய வீட்டை அல்லது வாகனத்தை விற்று விட்டு புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவார்கள்.
குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் உண்டாகும். பெண்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் மகழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். வளர்பிறை சந்திரனை தரிசிக்க வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
4.3.2024 முதல் 10.3.2024 வரை
சாதிக்கும் வாரம்.ராசிக்கு செவ்வாய், சுக்ரன் பார்வை இருப்பது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். கடந்த கால கடன்கள், பிரச்சினைகள் எல்லாம் நிவர்த்தியாகும். சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்கள். புதிய சொத்துக்கள் வாகனங்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சி செய்யலாம். அதற்கு தேவையான நிதியும், சந்தர்ப்பமும் தானாக உருவாகும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் நல்ல நிர்வாகத்திறனுடன் கவுரவமாக பணியாற்றுவீர்கள்.
சில எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையலாம். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நி யோன்யம் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்த னைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. 8.3.2024 இரவு 9.20 முதல் 10.3.2024 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம். சிவராத்திரியன்று பன்னீர் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
26.2.2024 முதல் 3.3.2024 வரை
உயர்வுகள் உண்டாகும் வாரம். உச்சம் பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் சுக ஸ்தான அதிபதி சுக்ரனுடன் இணைந்து ராசியை பார்ப்பது கடக ராசிக்கு உயர்வினை ஏற்படுத்தும் உன்னதமான அமைப்பாகும். செயல்களில் வெற்றி மிளிரும். உபஜெய ஸ்தான அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் மன தைரியம் அதிகரிக்கும். கவுரவம், புகழ், அந்தஸ்து கூடும். பூர்வீகச் சொத்தில் மூத்த சகோதரம் மற்றும் சித்தப்பாவால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். அஷ்டமச் சனியையும் மீறி சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். சிலருக்கு தந்தையின் அரசுப்பணி கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகளை பேச்சுவார்த்தையில் சேர்த்து வைக்க உகந்த காலம். பெற்றோர்களின் அனுசரணை கிடைக்கும். இதுவரை உங்கள் மேல் இருந்த தவறான குற்றச்சாட்டு மறையும். உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நோய்கள் அகலும். சிவனை புனித நீரால் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406