என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
இந்தவார ராசிபலன்
19.2.2024 முதல் 25.2.2024 வரை
விபரீத ராஜயோகம் ஏற்படும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன். புதன், சனி என மூன்று கிரகச் சேர்க்கை. அஷ்டம ஸ்தானம் பலப்பட்டால் மட்டுமே அதிர்ஷ்ட பணம், பொருள் சேரும். அஷ்டமச் சனி ஒரு புறம் இருந்தாலும் அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சை மூலதன மாக கொண்டவர்களின் தனித்திறமை வெளிப்படும். உழைக்கும் ஆர்வம் கூடும். எதிர்பாராத திடீர் தன லாபங்கள் உண்டா கும். கால நேரம் சாதகமாக இருக்கும் போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால் வருமானம் பல வழிகளில் வந்தடையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். தம்பதிகளுக்கு உறவினர்கள் மூலம் கொடுக்கல், வாங்கலால் ஏற்பட்ட இன்னல்கள் விலகி இல்லறம் நல்லறமாகும். பெண்களுக்கு தாய் வீட்டுச் சீதனம், பாகப் பிரிவினை பணம், சொத்து கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச்சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். மாசிமகத்தன்று சிவனுக்கு புனித நீரால் அபிசேகம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
12.2.2024 முதல் 18.2.2024 வரை
கடன் சுமை குறையும் வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சுக்ரன் மற்றும் புதனுடன் இணைந்து ராசியை பார்ப்பது கடகத்திற்கு மிகவும் யோகமான அமைப்பு. கவுரவப் பதவி கிடைக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். கூட்டுத்தொழில் செய்தவர்கள் விலகி தனித்து செயல்படலாம். தன ஸ்தானத்தை சூரியன், சனி,குரு பார்ப்பதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக்கூடிய விதத்தில் வருமானம் அதிகரிக்கும். வீடு வாகன பிராப்தம் உண்டாகும்.
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சீட்டுக் கட்டி இழந்த பணம், ஜாமீன் போட்டு ஏமாந்த பணம் கிடைத்து விடும். சுப கிரக வலுவால் வீண் நஷ்டம், பயம் தீரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு வார்த்தை நடக்கும். தந்தையால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். நோய் தாக்கம் சீராகும். சுகமான ஆடம்பர வாழ்க்கை அமையும்.வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்து வர வளர்ச்சி கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
5.2.2024 முதல் 11.2.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். 5, 10-ம் அதிபதி செவ்வாய் ராசிக்கு 7ல் உச்சம் பெற்று தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை . அஷ்டமச் சனி யையும் மீறி சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். பூர்வீகச் சொத்து கிடைக்கும். புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தந்தை மகள் உறவில் அன்பு மிளிரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். விரும்பிய சலுகைகள் கிடைக்கும். தீராத கடனைத் தீர்க்கும் வழி தென்படும். எதிரி தொல்லைகள் குறையும். அறுவை சிகச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும். மறு திருமண முயற்சிகள் கைகூடும். சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும்.
சிலருக்கு வீடு, வாகனத்தை பராமரிக்கும் செலவு அதிகரிக்கும். கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். கை மறதியாக வைத்த நகை கிடைக்கும். மன நிம்மதி தரும் இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். 10.2.2024 அன்று காலை 10.02-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எதையும் நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. தை அமாவாசையன்று புனித நீராடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
29.1.2024 முதல் 4.2.2024 வரை
திட்டமிட்டு செயல்படும் வாரம். ராசியை தனாதிபதி சூரியன் சகாய ஸ்தான அதிபதி புதனுடன் சேர்ந்து பார்ப்பதால் மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சாமர்த்தியம் வெளிப்படும். எதிர்காலம் பற்றிய பயம் விலகி நம்பிக்கை உண்டாகும். பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடையே இருந்து வந்த பகையும், வருத்தமும் மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடக்கும்.
சொந்த வீடு கட்டி குடியேறுவீர்கள். உயர் கல்வி முயற்சிகள் பலிதமாகும். அஷ்டமச் சனி முடியும் வரை திருமணத்தை ஒத்தி வைக்க வேண்டும். உடல் உஷ்ணம் தொடர்பான ஆரோக்கிய கேடுகள் உண்டாகும். எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
22.1.2024 முதல் 28.1.2024 வரை
மன நிம்மதி குடிபுகும் வாரம். ராசியை சூரியன் பார்ப்பதால் ஆத்ம ஞானம் பெருகும்.எதையும் எதிர்கொள்ளும் வலிமை கூடும். தியாக மனப்பான்மை மிகுதியாகும். தொழில் கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த கடன் உதவிகள் கிட்டும். வெளிநாட்டு படிப்பு அல்லது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். அரசின் உதவித்தொகை கிடைப்பதில் நிலவிய தடைகள் விலகும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும்.
முக்கியமான ஆவணங்கள் அல்லது கை மறதியாக வைத்த நகைகள் பொருள்கள் கிடைக்கும். தடைபட்ட குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.உயர் கல்வி முயற்சி பலிதமாகும்.வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். வரவிற்கு மேல் செலவு உண்டாகும்.பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு சமூக அந்தஸ்த்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தைப்பூசத்தன்று புனித நதிகளில் நீராடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
15.1.2024 முதல் 21.1.2024 வரை
மனசஞ்சலம் அகலும் வாரம்.தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி புதன் ராசியை பார்ப்பதால் குடும்ப உறவுகளால் ஏற்பட்ட மன சங்கடம் மாறும்.கடன் தொல்லை குறையும்.மனம் நிம்மதியாக இருக்கும். முயற்சியால் தொழில் உத்தியோ கத்தில் சாதகமான பலன் உண்டாகும். கூட்டுத் தொழில் மீது உருவான வழக்குகள் முடிவுக்கு வரும். சிலருக்கு பகுதி நேர வேலை கிடைக்கும். சம்பளம் குறைவாகவும் வேலை அதிகமாகவும் இருக்கும். மாமனார் மூலம் வெளிநாட்டு பணம் வந்து குவியும்.ஆன்மீக இயக்கங்கள், சமூக சேவையாற்றும் நிறுவனங்களில் கவுரவப் பதவிகள் கிடைக்கும். சேவை மனப்பான்மையுடன் சமூக சேவை செய்வீர்கள்.தொழில் நிமித்தமாக பிரிந்த வாழ்க்கைத் துணை இல்லம் திரும்புவார். பணம் வரும் வழியும் தெரியாது, போகும் வழியும் தெரியாது. வருமா னத்திற்கு ஏற்ற விரயமும் இருக்கும். ஆரோக்கியம் சீராகும். 16.1.2024 அன்று காலை 12.37 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற எண்ணங்களால் மன வேதனையே மிகுதியாகும். ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். எந்த காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். புவனேஸ்வரியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
8.1.2024 முதல் 14.1.2024 வரை
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் லாப அதிபதி சுக்ரன் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் நிலவிய கஷ்டங்கள் விலகும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். 5-ம் அதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறு வீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். விரும்பிய உதவிகள் தேடி வரும்.வழக்குகளில் புதிய திருப்பம் ஏற்படும். 3-ல் கேது இருப்பதால் குடும்ப உறவுகளுக்காக ஜாமீன் பொறுப்பு ஏற்கும் நிர்பந்தம் உண்டாகும்.
எதிர்காலத்தில் அது உங்களை தர்ம சங்கடத்தில் மாட்ட வைக்கும் என்பதால் கவனம் தேவை. பிள்ளை களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.13.1.2024 இரவு 11.35-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தெளிவாக சிந்தித்து திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை இருக்கும். அமாவாசையன்று அம்பிகையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
1.1.2024 முதல் 7.1.2024 வரை
மனம் மகிழும் வாரம். தனம், வாக்கு ஸ்தானத்தில் குருப்பார்வை பதிவதால் நினைத்ததை நினைத்தபடியே முடிப்பீர்கள்.தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சீராகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். சுப விரயங்கள், சுபச்செலவுகள் அதி கரிக்கும். மனதை மகிழ்விக்கும் சில நல்ல சம்பவங்கள் நடக்கும். அதிக முதலீட்டுடன் புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உறவுகளின் பகை மறையும். உடன் பிறந்தவர்களால் தந்தையால் ஏற்பட்ட மனசஞ்சலம் அகலும்.
வேறு வேறு ஊர்களில் பணிபுரிந்த தம்பதிகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் இடமாறுதல் கிடைக்கும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும் அரசு வழி ஆதாயம் உண்டு.வாழ்க்கை துணைக்கு தாய் வீட்டுச் சீதனமாக பெரும் சொத்து கிடைக்கும்.திடீர் பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும். பெண்களுக்கு மன நிம்மதி கூடும். கிருத்திகை அன்று முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
25.12.2023 முதல் 31.12.2023 வரை
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 4,11-ம் அதிபதி சுக்ரன் வக்ர மடைந்த 3,12-ம் அதிபதி புதனுடன் சேர்க்கை.வெளியூர், வெளிநாட்டு வெளி மாநில வேலை முயற்சி வெற்றி தரும். 9-ம்மிட ராகுவால் தடைகள் விலகி திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் மூலம் அதிர்ஷ்ட லட்சுமி உங்கள் வீட்டிற்கு வருவாள். வேற்று மதநம்பிக்கை அதிகரிக்கும். ஜாமீன் போடக் கூடாது. அஷ்டமச் சனியின் காலம் என்ப தால் சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற பாலிசி எடுக்கலாம். பெரிய முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். தவறான வாக்கு பிரயோகம் செய்யக் கூடாது.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்யவும். முன் கோபத்தை குறைக்கவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.பொருளாதார பற்றாக்குறை அக லும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். இருக்கும் வேலை, நடத்திக் கொண்டு இருக்கும் தொழிலை மாற்றக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கை ஒத்தி வைக்கவும். புவனேஸ்வரியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
18.12.2023 முதல் 24.12.2023 வரை
புண்ணிய பலன்கள் மிகுதியாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி. பிள்ளைகளால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் விலகி நிம்மதி கூடும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள். கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது வந்து சேரும்.பதவி உயர்வு, உத்தியோக உயர்வு தானாக கிட்டும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்களை கொடுத்து நிம்மதி அடைவீர்கள். வியாபாரிகளுக்கு உபரி லாபம் கிடைக்கும்.
கடக ராசி மாணவர்களுக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும்.வாழ்க்கை துணையின் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் சீராகும். இடம், பூமி, வாங்கும் முயற்சிகள் கைகூடும்.வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.குல தெய்வ வழிபாடு பலன் தரும். முக்கிய பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும் நிறைவு செய்வீர்கள். ஏகாதசியன்று பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
11.12.2023 முதல் 17.12.2023 வரை
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம்.தன அதிபதி சூரியன் 5,10-ம் அதிபதி செவ்வாயுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. யோக அதிபதி செவ்வாய் பலம் பெறுவதால் பிடிவாதமாக எந்த காரியத்தையும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். அரசு வேலை வாய்ப்பு முயற்சி சாதகமாகும்.அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும்.உடன் பிறந்தவர்களிடம் சொத்துப் பங்கீட்டில் நிலவிய கருத்து வேறுபாடு மறையும்.பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும்.
வாங்கிய கடனை திருப்பி கொடுப்பீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். நிலம், தோட்டம், வீடு, வாகனம் என முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகி குதூகலம் கூடும். மன மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் நடைபெறும். 17.12.2023 மாலை 3.45-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சங்கடமும் முயற்சியில் இழுபறியும் உண்டாகும்.அமாவாசையன்று சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
4.12.2023 முதல் 10.12.2023 வரை
மகிழ்ச்சியான நிம்மதியான வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு சனி மற்றும் குருபார்வை பதிவதால் அறிவாற்றல் அதிகமாகும்.முன் கோபம் குறையும்.நெருக்கடியாக இருந்த குடும்ப பிரச்சினைகள் நீங்கும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.கிடைக்கும் லாபத்தை முறையான முதலீடுகளில் ஈடுபடுத்த வேண்டும்.அஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் சுய ஜாதக ரீதியான தசா புத்திக்கு ஏற்ப சுய தொழிலில் புதிய முதலீடுகளைக் செய்வது நல்லது.பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிரகம் மன நிம்மதியைத் தரும்.அரசு வழி ஆதாயம் உண்டு.
பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். கை,கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியில் இருந்து விடுதலை கிடைக்கும்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மறுதிருமணத்திற்கு நல்ல வரன் அமையும். கந்தகுரு கவசம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406