என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
இந்தவார ராசிபலன்
26.11.2023 முதல் 3.12.2023 வரை
வெற்றி வாய்ப்பு அதிகமாகும் வாரம். 5-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 2-ம் அதிபதி சூரியனுடன் இணைவதால் வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.எதிலும் முதன்மையானவராக இருக்க விரும்புவீர்கள். பதவி ஆசை தலை தூக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சொத்துக்கள் மீதான வருமானம் பேச்சை மூலதனமாகக் கொண்ட ஆசிரியர்கள், வங்கிப் பணியா ளர்கள், மார்க்கெட்டிங் துறையைச் சார்ந்த வர்கள், வக்கீல்களின் திறமைகள் போற்றப்படும். இந்த வாரத்தில் உருவாகி இருக்கும் யோகங்க ளால் எல்லாத் துறையிலும் மகத்தான வெற்றியைப் பெற்றிட முடியும்.
தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை விட அதிக முன்னேற்றம் பெற முடியும்.பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து பார்க்கும் வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைமை சீராக இருக்கும். எதிர்காலத்திற்கான புதிய முயற்சிகள் பற்றிச் சிந்தனை கூடும். நேர்மறை ஆற்றலுடன் செயல்பட்டால் இந்த வாரம் முழுவதையும் நல்ல நாளாக மாற்ற முடியும். சிவப்பு நிற பட்டாடை அணிவித்து அம்பிகையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
20.11.2023 முதல் 26.11.2023 வரை
நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாரம். 5-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள்.கடந்த ஒரு வருடமாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும். புத்திர பாக்கியம் சித்திக்கும். சாஸ்த்திர ஈடுபாடு, ஆன்மீக நாட்டம் கூடும். பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள தொழில் தொடர்பான வழக்குகள் சாதகமாகும். பல வருடங்களாக இருக்கும் தீராத பிரச்சி னைகள் முடிவுக்கு வரும். தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.
குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இடப்பெயர்ச்சி நடக்கும். 20.11.2023 அன்று காலை 10.07 முதல் 22.11.2023 பகல் 12.57 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. பவுர்ணமியன்று புனித நீரால் அம்பிகைக்கு அபிசேகம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
13.11.2023 முதல் 19.11.2023 வரை
எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் வாரம். தனம், வாக்கு,குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் யோக அதிபதி செவ்வாயுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் விலகிய உறவுகள் தவறை உணர்வார்கள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் மனதை மகிழ்விக்கும் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தடைபட்ட வாடகை வருமானம் வசூலாகும். சொத்துக்களில் உங்களுக்கு உரிய பங்குகள் கிடைக்கும். எப்பொழுதோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். பத்திரப் பதிவில் நிலவிய தடைகள் அகலும். மாற்றுமுறை வைத்தியம் பலன் தரும். அரசு ஊழியர்கள் மேலதிகாரியின் நன்மையையும் பாராட்டையும் பெறுவார்கள். முன்னேற்றமும் திருப்தியும் நிலவும்.
தொழில் துறையில் லாபங்கள் பெருகும் அதே நேரத்தில் வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் செயலில் பொறுமையும், பேச்சில் நிதானத்தையும் கடைபிடிப்பது அவசியம். தீபாவளி அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். குல, இஷ்ட தெய்வ பரிபூரண அருள் கடாட்சம் உண்டாகும்.குபேர லட்சுமியை தீபாவளியன்று வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
6.11.2023 முதல் 12.11.2023 வரை
எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் வாரம். தனம், வாக்கு,குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் யோக அதிபதி செவ்வாயுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் விலகிய உறவுகள் தவறை உணர்வார்கள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் மனதை மகிழ்விக்கும் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தடைபட்ட வாடகை வருமானம் வசூலாகும். சொத்துக்களில் உங்களுக்கு உரிய பங்குகள் கிடைக்கும்.
எப்பொழுதோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். பத்திரப் பதிவில் நிலவிய தடைகள் அகலும். மாற்றுமுறை வைத்தியம் பலன் தரும். அரசு ஊழியர்கள் மேலதிகாரியின் நன்மையையும் பாராட்டையும் பெறுவார்கள். முன்னேற்றமும் திருப்தியும் நிலவும். தொழில் துறையில் லாபங்கள் பெருகும் அதே நேரத்தில் வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் செயலில் பொறுமையும், பேச்சில் நிதானத்தையும் கடைபிடிப்பது அவசியம். தீபாவளி அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.குல, இஷ்ட தெய்வ பரிபூரண அருள் கடாட்சம் உண்டாகும்.குபேர லட்சுமியை தீபாவளியன்று வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
30.10.2023 முதல் 5.11.2023 வரை
தொழிலில் புதிய அணுகு முறையை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்றாலும் 4,11-ம் அதிபதி சுக்ரன் சூரியனுடன் பரிவர்த்தனையாகி தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புகழ்,பணம்,அந்தஸ்து, செல்வாக்கு பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் தனலாபத்தால் ஆடம்பர வாழ்க்கையை மனம் விரும்பும். பங்குச் சந்தை ஆர்வம் அதிகமாகும்.எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும். நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் நிரந்தர தன்மை உண்டாகும். சுப நிகழ்விற்கான முயற்சியில் சிறு, தடை, தாமதம் உண்டாகும். வேலையின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் விரும்பிய வேலை கிடைக்கும்.கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும்.
விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சில பெண்களை பல வருடங்களாக அச்சுறுத்தி வந்த மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு இடைக்கும். பெண்களுக்கு கணவரின் தீபாவளி அன்பளிப்பால் குதூகலம் நிரம்பும். 3-ல் கேது இருப்பதால் எல்லாம் திட்ட மிட்டபடி நடந்தாலும் சிறு மன மன சஞ்சலம் இருக்கும். பைரவரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
23.10.2023 முதல் 29.10.2023 வரை
ஆரவாரமான வாரம். ராசிக்கு நான்கில் 2-ம்அதிபதி சூரியன் 3-ம் அதிபதி புதன், 5-ம் அதிபதி செவ்வாய் என அற்புதமான கிரகச்சேர்க்கை ஏற்பட்டுள்ளது. தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்மாமன் வழி ஆதாயம் உண்டாகும்.வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கு தீபாவளி விற்பனை அமோகமாக இருக்கும்.போட்டி, பொறா மையால் கண் திருஷ்டி உண்டாகும். ஆன்மீக யாத்திரை சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். மறு திருமண முயற்சி சாதகமாகும்.
இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. 24.10.2023 அன்று அதிகாலை 4.22 முதல் 26.10.2023 அதிகாலை 5.57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு களைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. கிரகணம் முடிந்த பிறகு அம்பிகையை வழி படவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
16.10.2023 முதல் 22.10.2023 வரை
நிம்மதியான வாரம்.ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை. சுய ஜாதகத்திலும் கோட்சாரத்தில் ராசியை எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது விசேஷ மான நல்ல பலன்களைத் தரும். மனம் இலகுவாக இருக்கும். முகப் பொலிவு உண்டாகும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். மனத்தடுமாற்றம் நீங்கி காரியசித்தி உண்டாகும். புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும்.பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்துவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள்.
வேலை இழந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.சிலர் வெளியூர்,வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.விரும்பிய கடன் தொகையை அரசுடைமை வங்கிகளில் பெறுவது உத்தமம். அஷ்டமத்தில் சனிபகவான் நிற்பதால் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளை வழங்க தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிபலன்
9.10.2023 முதல் 15.10.2023 வரை
வேதனைகள் விலகும் வாரம்.தன ஸ்தானத்தில் குருப்பார்வை பதிவதால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள்.சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள்.புத்திர பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பிராப்தம் உண்டாகும். வீட்டில் ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு. அந்நிய மொழியை கற்றுக் கொடுப்பதால் வருமானம் வரும். சிலர் மதம் மாறலாம். காதல் கலப்பு திருமணம் நடைபெறும்.
வரவிற்கு மீறிய செலவாக இருக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். புதிய கூட்டாளிகள் வரவும் வாய்புள்ளது. என்றாலும் புதிய தொழில் கூட்டாளி ஒப்பந்தம் செய்ய ஏற்ற காலம் இல்லை. வீடு வாகன யோகம் சிறப்பாக உள்ளது. சிலர் தீபா வளி ஆபரில் பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குவார்கள். மகாளய அமாவாசையன்று புனித நதிகளில் நீராடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
2.10.2023 முதல் 8.10.2023 வரை
புதிய வாய்ப்புகள் பெருகும் வாரம். முயற்சி, சகாய ஸ்தான அதிபதி புதன் உச்சம் பெற்று தன ஸ்தான அதிபதி சூரியனோடு இணைவ தால் எண்ணங்கள் லட்சியங்கள் நிறை வேறும். தடைகற்கள் படிக்கற்களாக மாறும். தோற்றம் பொலிவு பெறும். தாராள தன வரவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறையும். இடமாற்றம் வேலை மாற்றம் ஏற்படும். உடன் பிறந்த வர்களால் ஏற்பட்ட மனசஞ்சலம் மாறும். அசையாச் சொத்துக்களால் லாபம் உண்டாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். பூர்வீகப்பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுப காரியப் பேச்சுவார்த்தை நடக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வினை பெறலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.கடன் தொல்லை குறையும். சக பணியாளர்களால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். சமையல் கலைஞர்கள் விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள்.பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். பரம்பரை நோய், கர்ம வினை நோய்க்கு செய்யும் சிகிச்சைகள் பலன் தரும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். மகாளயபட்ச காலத்தில் தயிர் சாதம் தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன்
25.9.2023 முதல் 1.10.2023 வரை
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். 3,12-ம் அதிபதி புதன் தனாதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் சுப விரயங்கள் சுப செலவுகள் அதிகரிக்கும்.சிலருக்கு அடுத்தவர்களுக்காக கடன் படுதல், கொடுத்த பணம் திரும்பி வராது போகுதல் போன்ற பிரச்சினை இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திரைப்படம், விருந்து, கலை நிகழ்ச்சி என குடும்பத்துடன் குதூகலமாக இருப்பீர்கள். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் உண்டாகும். வீடு கட்ட மத்திய அரசின் மானியம் கிடைக்கும்.புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும்.இந்த வாரத்தின் அனைத்து நாட்களும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.26.9.2023 இரவு 8.28 மணி முதல் 28.9.2023 இரவு 8.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக் கட்டுப்பாடு குறையும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. மகாளய பட்ச காலத்தில் வயது முதிர்ந்த தாத்தா, பாட்டியின் நல்லாசிகளைப் பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
18.9.2023 முதல் 24.9.2023 வரை
அதிர்ஷ்ட தேவதை அரவணைக்கும் வாரம்.தனஅதிபதி சூரியன் 5,10-ம் அதிபதி செவ்வாயுடன் சகாய ஸ்தானத்தில் சேர்ந்து நிற்பதால் வியாபாரம் வெற்றி நடை போடும். தொழிலுக்கான கூடுதல் முதலீடைத் திரட்டு வீர்கள். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகள் உறவில் ஏற்பட்ட விரிசல்கள் சீராகும். வருமானத்திற்கு ஏற்ற செலவும் ஏற்படும்.குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்து வீர்கள். உங்கள் உடல் தகுதியை பரா மரிக்கக் கூடிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். மாமனார் மூலம் சகாயமான பலன்கள் உண்டு. சிலருக்கு கடன் பிரச்சனை அதி கரிக்க லாம். இந்த காலகட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு.உங்கள் நேர்மறை மனப் போக்கால் கெட்டவை நல்லதாக மாறும். சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடு படுவீர்கள். மாலை நேரத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்தவார ராசிபலன்
11.9.2023 முதல் 17.9.2023 வரை
பெண்களுக்கு ஆதாயமான வாரம். நான்காம் அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி என முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் நிதானமும், நம்பிக்கையும் உங்களை காப்பாற்றும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய தாமதம், மந்த நிலை அகலும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். போட்டி பந்தயங்களை தவிர்க்க வேண்டும். கேளிக்கையான உல்லாச பயணங்கள் நடைபெறும். விவாகரத்து வழக்குகளை ஒத்திப் போடவும். அஷ்டமச் சனியின் பாதிப்பு குறையும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. திருமண வயதில் இருப்பவர்களுக்கு காலதாமதத் திருமணம் நல்லது.கணவரின் அன்பளிப்பான அசையாச் சொத்து மகிழ்சியை இரட்டிப்பாக்கும். அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.பிரதோஷத்தன்று புனித நீரால் சிவனுக்கு அபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406