என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
இந்தவார ராசிபலன்
4.9.2023 முதல் 10.9.2023 வரை
நிம்மதியுடன் செயல்படும் வாரம். 4,11-ம் அதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் மூத்த சகோதரம், சித்தப்பா வகையில் ஆதாயம் உண்டு. குடும்ப உறவுகளிடம் சுமூக நிலை நீடிக்கும். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். கட்டுமான தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையினர் கை நிறைய பணத்தைப் பார்ப்பார்கள் நிலம், கட்டிடம் வாங்கி விற்பதில் சாதனை படைப்பார்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நகைகள் வாங்கி சேமிப்பீர்கள். நீண்ட கால மாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து கிடைக்கும். வீடு, நிலம் வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம்மிடான தொழில் ஸ்தானத்தில் வக்ரமடைகிறார். தொழில் வியாபாரம் செய்பவர்க ளுக்கு எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சனி வக்ரமாக இருப்பதால் அஷ்டமத்து சனி பற்றிய கவலை வேண்டாம். மங்கல காரியங்களுக்கான முன் ஏற்பாடுகளை செய்வீர்கள். புதிய நண்பர்களின் நட்பு ஏற்படும். செவ்வாய்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிபலன்
28.8.2023 முதல் 3.9.2023 வரை
தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும் வாரம். அஷ்டம சனி நடந்தாலும் தன ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பெற்று குரு பார்வையில் இருப்பதால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிக் குடித்தனம் சென்ற வாரிசுகள் மீண்டும் வீடு வந்து சேருவார்கள். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். ஆரோக்கிய குறைபாடும் மருத்துவச்செலவும் அதிகரிக்கும். உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பா ர்கள். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.தொழில் பாதிக்காது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். சிலருக்கு ஞாபகமறதி கூடும். 30.8.2023 காலை 10.௧௮ முதல் 1.9.2023 காலை 9.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறிய செயலுக்கு கடினமாக முயற்சி செய்ய நேரும். பிரதோஷத்தன்று பால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிபலன்
21.8.2023 முதல் 27.8.2023 வரை
காரியங்கள் கைகூடும் வாரம்.தன ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெறுவதால் பொருளாதார பாதிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. வரவு, செலவு வழக்கம் போல் இயல்பாக இருக்கும். வராக்கடன்கள், நிலுவை சம்பளம் வசூலாகும். குடும்பத்தினரின் நிம்மதிக்காக கோபத்தை வெல்லும் சூட்சமத்தை கற்பீர்கள். சக ஊழியர்களுடன் பொறுமையுடன், பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். ராசியில் 4, 11-ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் ராகு, கேதுவின் மையப்புள்ளியில் சஞ்சரிப்பதால் தாயார், மூத்த சகோதரத்துடன் சாதுர்யமாக நடந்து கொள்ளவும். மூத்த உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும். புதிய சொத்து வாங்குதல், முன்பணம் செலுத்துவது, பத்திரப் பதிவு ஆகியவற்றை ஒத்தி வைக்கவும். சிலரின் வாழ்க்கை துணைவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்க ளுக்கு இல்லறம் இனிக்கும்.சிலர் குழந்தை பேற்றிற்கு மாற்று முறை மருத்துவத்தை நாடலாம். சிலர் பல் சீரமைப்பு செய்யலாம். கருட பஞ்சமியன்று கருடரை பால் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் குருப் பார்வையில் ஆட்சி பலம் பெறுவதால் குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். நல்ல தொழில் தொடர்புகளால் ஊக்கமும், சந்தோஷமும் உண்டாகும். அஷ்டமச் சனியின் தாக்கத்தால் அரசின் சட்ட திட்டத்தில் ஏற்பட்ட தொழில் இடர்கள் அகலும். பணச்சுழற்சி அமோகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
சிலருக்கு ஆன்மீகத் தலைவர் அல்லது மூத்த அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. சுக ஸ்தான அதிபதி சுக்ரன் வக்ர கதியில் ராசியில் சஞ்சரிப்பதால் சொத்து தொடர்பான பணிகளை ஒத்தி வைப்பது நல்லது. குற்றம் குறை கண்டுபிடித்த மனைவி உங்களை புரிந்து கொள்வார். அஷ்டம ஸ்தான சனியை புதன் பார்ப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவச் செலவு உண்டாகலாம். ஆடி அமாவாசையன்று புண்ணிய நதிகளில் நீராடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிபலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாரம். தன அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.ஆத்மஞானம் அதிகரிக்கும். உட லுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியம் மேலோங்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். தொழில் வளம் பெருகி செல்வச் செழிப்பு ஏற்படும். மிகுதியான சுபவிரயம் உண்டாகும்.
வீடு கட்ட, வாகனம் வாங்க கடன் கிடைக்கும்.ஜனன கால ஜாதகத்தில் சுபம் தரும் தசை நடந்தால் புகழ் கொடிகட்டிப் பறக்கும். நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தால் மதிப்பு, மரியாதை உயரும். அலுவலகமே வியக்கும் வகையில் உங்களின் திறமைகள் வெளிப்படும். உங்களிடம் ஒப்படைத்த புதிய பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.உடல் உபாதைகள் அகலும்.விரோதிகள் நண்பர்களாவார்கள். விவாகரத்து வழக்கில் வெற்றி கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை கனக துர்க்கையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். 10-ல் குரு ராகு சேர்க்கை இருப்பதால் சிலர் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் தொழில் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லலாம். மதிப்புமிக்கவர்களின் நட்பும் அவர்களால் அனுகூலமும் உண்டாகும். தனம், வாக்கு குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் ராசியில் ராகு கேதுவின் மையப்புள்ளியில் சஞ்சரிப்பதால் காரியத் தடையும் மன சஞ்சலமும் மிகையாகும். எதையும் முறையாக திட்டமிட்டு செய்ய முடியாது.
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவே இருக்கும். அஷ்டமச் சனி என்பதால் விரக்தி அதிகமாகும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுத்தாலோ அல்லது பண உதவி செய்தாலோ திரும்ப கிடைக்காது. புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற கவுகீக ஆசைக்கு மனம் ஏங்கும். இளவயதினருக்கு எதிர்பாலினரிடம் மிகுதியான ஈடுபாடு உண்டாகும். திருமண முயற்சியை தவிர்க்கவும். 2.8.2023 இரவு 11. 25 முதல் 4.8 .2023 இரவு 11. 17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களிலும் முயற்சிகளிலும் தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடிப்பெருக்கு அன்று புண்ணிய நதிகளில் நீராடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
மனோதைரியம் அதிகரிக்கும் வாரம். தன ஸ்தானத்தில் புதன், செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் தனித்திறமைகள் மிளிரும். உங்கள் நீண்ட காலத் திட்டங்களும் கனவுகளும், நியாயமான ஆசைகளும் நிறைவேறும். சேமிப்பு உயரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சிதரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தைப் பெற்றுத்தரும். நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். பங்குதா ரர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். வீட்டுக் கடன் வட்டியில் அரசு சலுகையும் வட்டித் தள்ளுபடியும் கிடைக்கும்.
வட்டியையும், அசலையும் புரட்டிக்கட்டி வீட்டை கடன் என்ற முதலையிடம் இருந்து மீட்பீர்கள். படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் அரியர்ஸ் வைத்தவர்களும் தொடர்ந்து படித்து வெற்றி பெறுவீர்கள். கூலித் தொழிலாளி களின் நிலைமை சீராகும். ஆடி மாதம் புனித நதி மற்றும் நீர் நிலைகளில் நீராடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசியில் தன அதிபதி சூரியன். தன ஸ்தானத்தில் 3,10-ம் அதிபதி சுக்ரன். 4, 9-ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை என முக்கிய கிரகங்களின் நிலவரம் கடகத்திற்கு சாதகமாக இருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்ப டுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை, அரசாங்கப் பணி தேடுபவர்களுக்கு சாதகமான செய்தி வரும். தொழில் சூடு பிடிக்கும்.
தற்காலிகப் பணிகள் நிரந்தரமாகும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வ தற்கான வாய்ப்புகள் அமையும். மனச் சோர்வு, கடன், உடல்நலக்குறைவு ஆகிய துன்பங்கள் விலகும்.வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நல்ல தகவல்கள் வீடு தேடி வரும். கொடுக்கல், வாங்க லில் லாபம் உண்டாகும்.
பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆடி வெள்ளிக்கிழமை பால் அபிசேகம் செய்து அம்பிகையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய வாரம். ராசியில்3, 12-ம் அதிபதி புதன் சஞ்சரிப்பதால் உற்றார்,உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். சுமாரான வீட்டில் வசித்தவர்கள் நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. குடும்பஸ்தானத்தில் செவ்வாய் சுக்ரன் சேர்க்கை சனி பார்வையில் இருப்பதால் எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் நிலுவை சம்பள வரவு மனதை மகிழ்விக்கும்.
கூலித் தொழிலாளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் தொடங்கலாம். எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது.
பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். வெற்றியை தக்க வைக்க கடுமையானமுயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
செல்வம்,செல்வாக்கு மேலோங்கும் வாரம். 5, 10-ம் அதிபதி செவ்வாய் தன ஸ்தானம் சென்று 6, 9-ம் அதிபதி குருவின் பார்வை பெறுவது ராஜயோகம்.தைரியம், தெம்பு அதிகரிக்கும். தடை, தாமதங்கள் விலகும். தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. குடும்பத்தில் அமைதி நிலவும்.தம்பதிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடு மறையும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலை யில் இடமாற்றம் ஏற்படும். பிறந்த வீட்டாரும்,புகுந்த வீட்டாரும் ஒன்றாக கலகலப்பாக பழகுவார்கள். மாணவர் களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சொத்துக்களால் அனுகூலமும் தாய் மாமன் வழி ஆதாயமும் உண்டு. வீட்டில் சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். ஆரோக்கியம் சீராகும்.
6.7.2023 பகல் 1.38 மணி முதல் 8.7.2023 பகல் 2.57 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில், வேலையில் அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்படவும். சிவசக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
துன்பம் குறைந்து இன்பம் பெருகும் வாரம். அஷ்டமாதிபதி சனி வக்ரமாக இருப்பதால் தொழில், வழக்குகளில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். தனஅதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோக அனுகூலம் நல்ல விதமாக இருந்தாலும் விரயம் மிகைப்படுத்தலாக இருக்கும்.
விரயத்தை சுபமாக்க முயற்சிப்பது நலம். வீடு கட்டும் எண்ணமும் நில புலன் வாங்கும் எண்ணமும் இல்லாதவர்களுக்கு சொத்து சேரலாம். கடன் பெறுவதற்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகி அலுத்துப் போன உங்களுக்கு கடன் தர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீடு தேடி வரும். பருவ வயது எட்டியும் பருவமடையாத பெண் குழந்தைகள் பருவமடைவார்கள்.
கோபித்துக் கொண்டோ, தொலைந்து போன, கை மறதியாக வைத்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திரும்பவும் கிடைக்கும். திருச்செந்தூர் முருகனை சரணாகதியடைந்து வழிபட கடன் , உத்தியோகம், நோய் தொடர்பான பிரச்சினைகள் இருந்த சுவடு தெரியாது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
சுபமான வாரம். ராசியில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் புகழ், அந்தஸ்து கவுரவம் அதிகரிக்கும். நம்பிக்கை, நாணயம் உயரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். 7,8-ம் அதிபதி சனி வக்ரம் பெறுவதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.
அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடை வார்கள். மாணவர்கள் தனித்திற மையால் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். அஷ்டமச் சனியின் தாக்கம் சிறிது குறையும். வராக்கடனாக நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.
திருட்டுப் போன பொருள்கள் கிடைக்கும். புதிய சொத்துக்கள், வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். பிரத்யங்கரா தேவியை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406