search icon
என் மலர்tooltip icon

    கடகம் - வார பலன்கள்

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    12.6.2023 முதல் 18.6.2023 வரை

    மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும் வாரம்.5ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் தெய்வ சிந்தனை, நம்பிக்கை, பலம், தைரியம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். உங்கள் தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா உங்களுக்கு உதவலாம். மிக்க மகிழ்ச்சியான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வருவார்கள். எதிரிகள் தொல்லை நீங்கும்.

    இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும்.உங்களை வாட்டிய கடன் பிரச்சினையிலிருந்து மீளக்கூடிய மார்க்கம் தெரியும். ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பயம் விலகும். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

    உறவுகளிடம் அமைதிப் போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையுடன் நட்பு, புரிதல் ஆழமாகும்.உணவு கட்டுப்பாடு தேவை. மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க கற்பக விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    5.6.2023 முதல் 11.6.2023 வரை

    ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் வாரம்.தன ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.அஷ்டமச் சனியால் வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

    அசையும், அசையாச் சொத்துக்களால் மேன்மை அடைவீர்கள். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு விலகி நல்ல புரிதல் உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். ராசியில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும். நோய்க்கான சிகிச்சை பலன் தரும்.

    9.6.2023 அன்று 6.02 முதல் 11.6.2023 அன்று காலை 8.46 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    29.5.2023 முதல் 4.6.2023 வரை

    சுபவிரயம் ஏற்படும் வாரம். 5,10-ம் அதிபதி செவ்வாய் நீசம் அடைந்து 4,11-ம் அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை பெறுவதால் எந்த ஒரு செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். கடந்த காலத்தில் நிலவிய பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாது. சொத்து தொடர்பான முயற்சிகள் இழுபறிக்குப் பின் வெற்றி தரும்.

    சொத்து விற்பனையில் பெரும் பணம் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பான மன உளைச்சல் நீடிக்கும். கடன்பத்திரம், ஆவணங்கள் தொடர்பான தொல்லைகள் விலகும். அரசியல் பிரமுகர்கள் எடுத்தேன், கவிழ்தேன் என்று புதிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அரசு வேலை கிடைக்கும். வேலையில் நிலவிய பிரச்சினைகள் குறையத்துவங்கும்.தேவைக்கு பணப்புழக்கம் இருக்கும்.

    தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்கி அணிவீர்கள். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பிள்ளைப்பேறு, உயர்கல்வி போன்ற சுப விரயங்கள் ஏற்படும். பவுர்ணமியன்று சிவனுக்கு புனித நீரால் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    22.5.2023 முதல் 28.5.2023 வரை

    மறைமுக எதிர்ப்புகள் விலகும் வாரம். 5, 10ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கையால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் வெற்றியும், பாராட்டுகளும் கிடைக்கும். அரசு உதவியுடன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்றி முன்னேற்றம் காண்பீர்கள்.

    கோவில் கட்டுதல், கும்பாபிசேகம் செய்தல், கல்வி நிறுவனம் துவங்குதல், தான தர்மம் செய்தல் போன்ற பாக்கிய காரியங்கள் செய்யும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவரை சட்டத்திற்கு புறம்பாக வாழ்ந்தவர்கள் உண்மையை யும்,நேர்மையையும், சத்தியத்தையும் கடைபிடிப்பார்கள். தாயாரின் விருப்பங்களை நிறைவு செய்வீர்கள்.

    வீடு, மனை வாகன முயற்சி நிறைவேறும். திருட்டுப் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். மன சஞ்சலம் தீய எண்ணங்கள் குறைந்து நிம்மதியான தூக்கம் உண்டாகும். நோய் தொந்தரவு குறையும். திங்கட்கிழமை மயிலாப்பூர் கற்பகாம்பாளை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    15.5.2023 முதல் 21.5.2023 வரை

    சங்கடங்கள் விலகும் வாரம். 5,10-ம் அதிபதி செவ்வாய் நீசம் பெறுவதால் ஊர் மாற்றம்,வேலை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் வெளிநாட்டுப் பயணம் உறுதியாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். காதல் பாதகமாகும்.

    தனஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானம் செல்வதால் பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். வியாபாரத்தில் நிலவிய தேக்க நிலைமாறி நல்ல லாபம் கிட்டும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.

    எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். சிலருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை நிலவும். வழக்குகள் சாதகமாக முடியும். கண்ணில் உள்ள குறைபாட்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அமாவாசையன்று புனித நதிகளில் நீராடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    8.5.2023 முதல் 14.5.2023 வரை

    புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கும் வாரம். ராசிக்கு 10-ல் சூரியன் உச்சம் பெறுவதால் அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுபமங்கள காரியங்களால் தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும்.

    வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். 3, 12-ம் அதிபதி புதன் வக்ரம் பெறு வதால் இழுபறியாக இருந்த பணிகள் முடியும். ஒரே நாளில் முக்கியமான பல செயல்களை கவனிக்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற குழப்பம் இருக்கும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக் கலாம். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும்.ராசியில் நிற்கும் நீசம் பெற்ற செவ்வாயின் 8-ம் பார்வை சனியின் மேல் பதிவதால் கணவன் மனைவி தங்களுக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது.

    13.5.2023 காலை 0.19 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முன் கோபத்தைக் குறைத்துப் பொறுமையோடு செயல்பட வேண்டும் உடல் நலம் காக்க வேண்டும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    1.5.2023 முதல் 7.5.2023 வரை

    மகிழ்ச்சியான வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் அஷ்டமச் சனியால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் சுமூகமாகும். உணவு மற்றும் பேச்சுத் தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். பழைய கடன் மற்றும் வட்டி கட்டி புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். தந்தையுடனான உறவு பலப்படும்.

    சிலர் தொழில், வேலைக்காக பூர்வீகத்தில் இருந்து வெளியூர், வெளி நாடு போகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெண் குழந்தை பிறந்து வீட்டில் மங்களம் பெருகும். சத்ரு ஜெயம் உண்டாகும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகும். ஜாமீன் போடுவதை தவிர்த்தல் நலம்.

    பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். மாணவர்களின் வெளிநாட்டு படிப்பிற்கு தேவையான பொருள் வசதி கிடைக்கும்.பவுர்ணமியன்று விரதமிருந்து சிவசக்தியை வழிபட வரும் துன்பங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    24.4.2023 முதல் 30.4.2023 வரை

    வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாரம்.இந்த வாரத்தில் உலாவரும் கிரக நிலைகள் உங்களுக்கு நல்ல சுப யோகங்களை பெற்றுத் தரப்போகிறது. 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் குரு பகவான் தன அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் தொழில் போட்டிகளை சமாளிக்கும் மன வலிமை அதிகரிக்கும்.

    பணியிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மரியாதை உயரும். பதவி உயர்வு கிடைக்கும், வேலை செய்யும் இடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும்.குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும். மருமகன், மருமகள் பேரன், பேத்தி போன்ற புதிய உறவுகள் உருவாகும் காலம். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகபோகங்களும் அதிகரிக்கும்.

    2-ம்மிடமான குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். மருத்துவச் செலவு குறையும். அஷ்டமச் சனியையும் மீறிய சுப பலன்கள் உண்டாகும்.வள்ளலாரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    17.4.2023 முதல் 23.4.2023 வரை

    புதிய முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய வாரம். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு தன ஸ்தானத்தில் குருப் பார்வை பதிவதால் அஷ்டமச் சனியால் பொருளாதார சுணக்கம் ஏற்படாது. இல்லை என்ற நிலை இருக்காது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். பேச்சில் தெளிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.பூர்வீகம், சொத்து தொடர்பான விவகாரங்கள் தடை தாமதமானாலும் நினைத்தபடி சாதகமாக நிறைவேறும்.

    தொழிலால் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். இதுவரை ராசிக்கு கவசமாக சாதகமாக இருந்த குருப் பார்வை தற்போது இல்லை என்ப தால் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் உத்தியோக நிமித்தமாக இடப் பெயர்ச்சி செய்ய நேரும். கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தங்கம் சேரும்.

    17.4.2023 இரவு 8.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கிரகணத்தன்று பித்ருக்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிப்பலன்

    10.4.2023 முதல் 16.4.2023 வரை

    தேவைகள் பூர்த்தியாகும் வாரம். 5, 10-ம் அதிபதி செவ்வாயும், 3,12-ம் அதிபதி புதனும் பரிவர்த்தனை பெறுவதால் காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான விவகாரங்கள் தடை தாமதமானாலும் நினைத்தபடி சாதகமாக நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். இழந்த பதவிகள் கிடைக்கும். புதிய பதவிகளால் மதிப்பு, கவுரவம் கூடும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. வரவு வந்தாலும் செலவும் கூடும். கைப் பணம் கரையும். சிலர் புதிய சொத்து, வாகனம் வாங்கலாம். குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்ட மிடுவீர்கள். தம்பதிகளின் உறவில் அந்நியோன்யம் நீடிக்கும். குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    ஆரோக்கிய தொல்லைகள் அகலும். மாணவர்களுக்கு கணிதத்தில் திறமையும் கல்வியில் முன்னேற்றமும் கூடும். 15.4.2023 மாலை 6.44-மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. எனவே புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.அதீத உடல் உழைப்பால், சோர்வு மிகுதியாகும். தினமும் மகாலட்சுமியை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    3.4.2023 முதல் 9.4.2023 வரை

    சங்கடங்கள் விலகும் வாரம்.வெகு விரைவில் தன ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைக்கப்போவதால் தரித்திரம், அவமானம், பண நெருக்கடி, தொழில் முடக்கம், நஷ்டம், உத்தியோகத்தில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை விலகத் துவங்கும். எதை எப்படி செய்ய வேண்டும், எதிரியை எப்படி வீழ்த்த வேண்டும் என்று தெளிந்து செயல்படுவீர்கள்.

    அன்றாடம் அழியக் கூடிய பொருட்கள், குளிர் பானங்கள் போன்ற பொருட்களை வியாபாரம் செய்து வந்தால் முன்னேற்றம் உண்டாகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுவர். வாழ்க்கை தரம் உயரும். வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது.

    நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். குரு பகவான் உங்களுக்கு லாபத்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவார். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் மனதை ஒரு நிலைப்படுத்தி செயல்பட வேண்டும். பங்குனி உத்திரத்தன்று சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    27.3.2023 முதல் 2.4.2023 வரை

    மகிழ்ச்சியான வாரம். தற்போதுராசிக்கு இருக்கும் குரு பார்வை ஒரு சில வாரங்களில் தன ஸ்தானத்தில் பதிவதால் தனவரவு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். குருப் பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றம் தெரியத் துவங்கும். அஷ்டமச் சனியை மீறிய நல்ல பலன் கிடைக்கத் துவங்கும்.பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும்.

    பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால்குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாகஇருக்கும். குடும்பத்தில் இருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். பேச்சாற்றலால்உங்களின் காரியங்களை சாதிக்க முடியும் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள்கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

    பயணங்களால் அலைச்சல் அதிகமாகும் புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். தினமும் சந்திர தரிசனம் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×