search icon
என் மலர்tooltip icon

    கடகம் - வார பலன்கள்

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    20.3.2023 முதல் 26.3.2023 வரை

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் சுமாராக படித்த வர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.தலைக்கு வந்த பிரச்சி னைகள், தலைப்பாகையோடு சென்று விடும் என்று உறுதியாக கூறலாம். 5, 10-ம் அதிபதி, ஏக யோகாதிபதி செவ்வாய் 12-ம்மிடத்தில் மறைந்ததால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் புதிய தொழில் ஒப்பந்தம், பணப்பரிவர்த்னை செய்வதை தவிர்க்கவும். அதிர்ஷ்டம் சற்று குறையும்.

    உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் சக பணியாளர்களிடம் சகிப்புத் தன்மையுடன் பழக வேண்டும். எதிர் கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரையம் தான்.பிள்ளைகளை நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவும்.

    21.3.2023 அன்று காலை 11.57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவியை வழிபட வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    13.3.2023 முதல் 19.3.2023வரை

    மகிழ்ச்சியான வாரம். சற்றே ஏறக்குறைய 40 நாட்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் குரு ராசி, ஐந்தாமிடத்தைப் பார்க்கிறார். அதன்பிறகு குரு பார்வை நீங்குவதால் அஷ்டமச் சனியின் ஆதிக்கம் சற்று தலை தூக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின் தொழில் ஸ்தான குருவால் தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.

    வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். தொழில் மாற்றம், இட மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம் நிகழ்ந்தாலும் அவற்றினால் நன்மையே உண்டாகும். பணவரவு பல வழிகளில் வரத்தொடங்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.சுருக்கமாகச் சொன்னால் அஷ்டமச் சனியால் தொழில் பாதிப்பு ஏற்படாமல் குருபகவான் துணையிருப்பார். 5,10-ம் அதிபதி செவ்வாய் ராசிக்கு 12ம்மிடத்தில் மறைவதால் புத்திரப் பேறு தாமதமாகும். காதல் காலை வாரும். பூர்வீகச் சொத்தில் வம்பு, வழக்கு உருவாகும்.

    19.3.2023 காலை 11.17 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அடுத்தவர் பேச்சைக் கேட்டு உங்களுடைய மூளையை குழப்பாமல் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. தினமும் சிவ கவசம் படிக்கவும்

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    6.3.2023 முதல் 12.3.2023 வரை

    வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும்.

    உடன் பிறந்தவர்களிடம் சொத்துப் பங்கீட்டில் நிலவிய கருத்து வேறுபாடு மறையும்.பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெற்று மன நிம்மதியாக செயலாற்றுவீர்கள். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

    கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடங்கள் விலகும். மாணவர்கள் சற்று கடினமாக உழைத்தால் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். அஷ்டமச் சனியால் ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள். மாசி மகத்தன்று சிவனுக்கு தயிர் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    27.2.2023 முதல் 5.3.2023 வரை

    எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் பாக்கிய அதிபதி சனி மற்றும் சகாயஸ்தான அதிபதி சூரியனுடன் பாக்கிய ஸ்தானத்தில் கூடுவதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. தெய்வ சிந்தனை அதிகரிக்கும். முன்னோர்களின் நல்லாசி கிட்டும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆழ்ந்த தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும் உண்டாகும்.

    உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்ந்தவர்களுக்கு முன்னேற்றப் பாதை தென்படும். வேலை இல்லாதவர்களுக்கு நிலையான, நிரந்தரமான வேலை கிடைக்கும். ஐந்தாம் அதிபதி சுக்ரன் பத்தில் உச்சம் பெறுவதால் கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.

    ஆண்களுக்கு மனைவியால் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பங்கு மார்க்கெட் லாபம் கூடும். காதல் கைகூடும்.சிலர் வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் பெறலாம். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும். பஞ்சமுக நெய் தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    20.2.2023 முதல் 26.2.2023 வரை

    தொழிலில் உயர்வு உண்டாகும் வாரம். 4, 11-ம் அதிபதி சுக்ரன் 6,9-ம் அதிபதி குருவுடன் இணைவதால் தொழில் மூலம் புகழ், வெற்றி, லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்றமும், மேன்மையும் உண்டாகும். அதற்கு தேவையான தொழில் கடனும் கிடைக்கும்.

    ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை சூரியன், சனி, செவ்வாய் பார்ப்பதால் சகோதர, சகோதரிகளுடன் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தலாம். தம்பதிகளுக்குள் உறவினர்கள் மூலம் கொடுக்கல், வாங்கலில் சிறு மனக் கசப்பு தோன்றலாம். சிலர் குடும்ப உறுப்பினர்கள்ஒன்றிணைந்து பித்ருக்கடன் தீர்த்து முன்னோர்களின் நல்லாசி பெறுவீர்கள்.

    20.2.2023 அன்று காலை 1.15 முதல் 22.2.2023 அன்று 1.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    13.2.2023 முதல் 19.2.2023 வரை

    வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சாரும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி சனியுடன் இணைந்து தன ஸ்தானத்தை பார்ப்பதால் விபரீத ராஜ யோகத்தால் பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். பண வரவு சரளமாக இருப்பதால் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    ஆடம்பர பொருட்களின் சேர்க்கையும், சேமிப்பும் அதிகரிக்கும். இழந்த அரசுப் பணி மீண்டும் கிடைக்கும். கூலித் தொழிலாளிகளுக்குபுதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.தொழில், உத்தியோகத்தில் திட்டமிட்டு வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பெண்களுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். சிலருக்கு மறுமணம் வாய்ப்பு உண்டாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவார்கள். அண்டை அயலாருடன் ஏற்பட்ட பிணக்குகள் சீராகும்.

    அதிர்ஷ்டம், லாட்டரி, போட்டி பந்தயங்கள் சாதகமாகும். உயர் கல்வியில் நிலவிய மந்த நிலை மாறும். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக சுற்றுப்பயணம் செல்வார்கள். சிவனுக்கு சுத்தமான பசும்பாலால் அபிசேகம் செய்ய அஷ்டமச் சனியினால் ஏற்படும் தடை, தாமதம் விலகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம். ராசியை குரு பார்ப்பதால் தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் துரிதமாகும். முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். நேர்மை உங்களை சுமூகமாக வழி நடத்தும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்படும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். தன ஸ்தான அதிபதி சூரியன் விரய ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து ராசியைப் பார்ப்பதால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். சில எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையலாம்.

    வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். சகோதர, சகோதரிகளின் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். அம்பிகையை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    கடமைகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு ஏழில் சனி சுக்ரன் சேர்க்கை இருப்பதால் உடலிலும் மனதிலும் புதிய தெம்பு , உற்சாகம் பிறக்கும். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். விரைவில் அஷ்டமச் சனி துவங்கினாலும் ஏப்ரல் 22,2023 வரை ராசிக்கு குருப் பார்வை இருப்பதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. தாய் அன்பும், தாய்வழி உறவு களின் ஆதரவும் கிடைக்கும்.  மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் பயன் படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம்.

    சிலர் சொந்த வீட்டில் இருந்து மன மாற்றத்திற்காக வாடகை வீடு செல்லலாம். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.  பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள்.  ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் உண்டாகும். ஏகாதசியன்று லட்சுமி நர சிம்மரை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    23.1.2023 முதல் 29.1.2023 வரை

    பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம். தன அதிபதி சூரியன் மற்றும் பாக்கிய அதிபதி குருவும் ராசியைப் பார்ப்பதால் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். வாழ்வில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்வீர்கள். பணத்தேவைகள் நிறைவேறும். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சொத்து விற்பனையில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். பூர்வீகத்தில் புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு.தொழில் ரீதியான முன்னேற்றமும் இருக்கும்.

    விவசாயிகளுக்கு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும். அஷ்டமச்சனியின் காலம் என்பதால் எதைச் செய்தாலும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்யவும். 23.1.2023 மதியம் 1.50 முதல் 25.1.2023 மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரியளவு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது காளி வழிபாடு சிறப்பைத் தரும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    16.1.2023 முதல் 22.1.2023 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் தெளிவாக திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை இருக்கும்.சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் ஏற்படலாம். வேலைப் பளு கூடும். எளிமையாக முடிய வேண்டிய வேலைகள் சவ்வாக இழுக்கும்.

    அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் விரோதம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும். தொழில் சார்ந்த துறையில் உங்களின் புதிய முயற்சிகளில் தடை உண்டாகலாம். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும்.

    பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். பெண்களுக்கு ஆடை அலங்காரத்தில் ஆர்வம் குறையும். எதிர் பாலினத்த வரிடம் தேவையற்ற சக வாசத்தை தவிர்க்கவும். முன் கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். குடும்பத்துடன் ஆடம்பர விருந்து மற்றும் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மகா கணபதியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    9.1.2023 முதல் 15.1.2023 வரை

    குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும் வாரம். 5,10-ம் அதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தி பெறுவதால் பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பான திட்டமிடுதலில் ஆர்வம் அதிகரிக்கும்.சிந்தனையில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். நிர்பந்தத்திற்காக ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும். கணவன், மனைவி தொழில் உத்தியோக நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் பணிபுரிய நேரும்.

    அஷ்டமச் சனியின் காலம் என்பதால் உங்கள் கவனத்தை தொழிலில் மட்டும் செலுத்தினால் சங்கடங்களில் இருந்து தப்ப முடியும். புதியதாக சொந்த தொழில் செய்யும் முயற்சியை ஒத்தி வைக்கவும்.  வாழ்க்கைத் துணையின் படிப்பிற் கேற்ற வேலை கிடைக்கும். சிலரின் கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும்.

    காவல்துறையினருக்கு வேலை பளு அதிகரிக்கும். புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். கை மறதியாக வைத்த நகை கிடைக்கும். குறுக்கு வழியில் வருமானம் ஈட்டுவது, தவறான நட்பு போன்றவற்றைத் தவிர்க்கவும். திங்கட்கிழமை அம்பிகையை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    2.1.2023 முதல் 8.1.2023 வரை

    கடமைகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு ஏழில் சனி சுக்ரன் சேர்க்கை இருப்பதால் உடலிலும் மனதிலும் புதிய தெம்பு , உற்சாகம் பிறக்கும். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். விரைவில் அஷ்டமச் சனி துவங்கினாலும் ஏப்ரல் 22,2023 வரை ராசிக்கு குருப் பார்வை இருப்பதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. தாய் அன்பும், தாய்வழி உறவு களின் ஆதரவும் கிடைக்கும். 

    மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் பயன்படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். சிலர் சொந்த வீட்டில் இருந்து மன மாற்றத்திற்காக வாடகை வீடு செல்லலாம். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.  பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள். 

    ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் உண்டாகும். ஏகாதசியன்று லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×