என் மலர்
மிதுனம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
மிகப் பொன்னான காலம். ராசி அதிபதி புதன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். வெளிநாட்டு குடியுரிமை சாத்தியமாகும். பதவி உயர்வு கிடைத்து பொறுப்புகள் அதிகரிக்கும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும். உயர்கல்வி, மருத்துவகல்விகள், ஆராய்ச்சி சார்ந்த கல்விகள் போன்ற கல்வி பயில சிறப்பான காலம். பொங்கல் விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வருவீர்கள். குல, இஷ்ட, தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும் திருமணத் தடை அகலும்.
விரும்பிய வரன் கைகூடும். விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் தாமதம் உள்ள தம்பதியினர் உரிய மருத்துவம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்கும். பவுர்ணமி திதியில் நடராஜரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406