search icon
என் மலர்tooltip icon

    மிதுனம்

    சுபகிருது வருட பலன் - 2023

    திட்டம் தீட்டுவதில் வல்லவர்களான மிதுன ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு காரிய சித்தி வழங்க நல் வாழ்த்துக்கள்.

    உங்கள் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். 5ம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார்.குருபகவான் 10ம் இடத்தில் நிற்கிறார். சனி பகவான் 8.9 ம் இடங்களில் உலா வரப்போகிறார். இந்த சுப கிருத வருடத்தில் உங்களின் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பிறருக்கு உதவி செய்து உங்கள் பாக்கிய பலனை அதிகரித்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண் பலிகள் அகலும். அஷ்டமச் சனியாலும் விரய ராகுவாலும் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும்.

    துணிந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாட்டின் மூலம் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.உங்கள் முயற்சியல் சிறு தடை, தாமதம் நிலவினாலும் முடிவில் பெற்றி உங்களுக்கே உண்டாகும்.பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் கன்சல்டிங் நிறுவனம் நடத்துபவர்களுக்கு கவ பொற்காலமாக அமையும். இந்த ஆண்டில் குரு மற்றும் ராகு/கேதுக்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. 17.1.2023க்குப் பிறகு அஷ்டமச் சனியிலிருந்து முழுமையாக விடுபடுவர்கள்.

    குடும்பம்: இரண்டாமிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. இந்த வருடம் குடும்ப உறவுகளுக்கு இனிய காலமாக அமையப் போகிறது. அஷ்டமச் சனியால் விலகிச் சென்ற உறவுகளை குருபகவான் மீட்டுத் தருவார்.

    உறவுகள் பகை மறந்து ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். உறவுகளிடம் கோள் மூட்டி வேடிக்கை பார்த்தவர்கள் விலகி ஓடுவார்கள்.உங்கள் வார்த்தைக்கு குடும்பம் கட்டுப்படும். குடும்ப முன்னேற்றத்திற்கான அனைத்து தேவைகளை நிறைவாகும். பிள்ளைகளால் மன நிறைவு, நிம்மதி கிடைக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதிலிருந்த தடைகள் அகலும். குடும்பத்துடன் குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    ஆரோக்கியம்:6ம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடு வந்தாலும் உடனே சரியாகி விடும். போதிய ஓய்வு, நிறைந்த சந்தோஷம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். டென்ஷன் குறையும். 8ம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் ஆயுள் தீர்க்கம். வண்டி வாகனங்களை இயக்கும் போது கவனமாக செயல்படவும்.

    திருமணம்: ஜனன கால ஜாதக தசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் 29.4.2022 முதல் 12.7.2022 வரை அதி சாரமாக கும்ப ராசிக்கு செல்லும் காலத்தில் திருமணம் நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மற்றவர்களுக்கு 2023 ஜனவரியில் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு திருமணம் நடக்கும்.

    பெண்கள்: பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் போட்டி போட்டு கவனிப்பார்கள்.குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். கணவரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்ப உறவுகளிடையே சந்தோஷம் நிலைக்கும். 8ல் கோட்சார சனி இருப்பதால் மாங்கல்யத்தை அடிக்கடி கழட்ட கூடாது. புதிய செயின் மாற்ற விரும்புபவர்கள் 17.1.2023க்கு பிறகு மாற்றலாம்.

    மாணவர்கள்: ராசிநாதன் புதன் என்பதால் இயல்பாகவே சிறப்பாக படிக்கும் மிதுன ராசி மாணவர்களுக்கு கல்வி முன்னோற்றம் சிறப்பாக இருக்கும். 4ம் இடமான கல்வி ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்ததை விட பிரமாண்ட வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பும் கல்லுரிக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசு கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்: 10ல் குரு வருவதால் பதவி பறி போகுமோ என்ற பயம் தேவையில்லை. 10ம் அதிபதியாகிய குரு 10ல் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. குருவிற்கு சனி பார்வையும் கிடைப்பதால் தர்மகர்மாதிபதி யோகத்தால் உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் சீராகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி. செய்பவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும்.

    முதலீட்டாளர்கள்:10ம் அதிபதி குரு 10ல் ஆட்சி பலம் பெறுவதால் உங்கள் சிந்தனை முழுவதும் தொழில் பற்றியே இருக்கும்.இதுவரை ஒரு தொழிலில் செய்தவர்களுக்கு இரண்டு தொழில் செய்யும் எண்ணம் வரும். லாப ஸ்தான ராகுவால் தொழிலில் நிலவிய மந்த நிலை மாறி லாபம் உண்டாகும். சிலருக்கு தொழில் விரிவாக்க சிந்தனை தோன்றும். வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

    அரசியல்வாதிகள்:10ல் குரு ஆட்சி பலம் பெற்றதால் பெயர், புகழ் உயரக்கூடிய காலம். மக்கள் சேவையே மகேசன் சேவை என பல மிது ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்து அரசியல் களத்தில் இருங்குவார்கள். கட்சிக்காக அலைச்சல் மிகுந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். 14.6.2022க்குப் பிறகு புதிய மாற்றங்கள் உருவாகும். கலைஞர்கள்:கலைத்துறையினருக்கு அற்புதமான நல்ல காலம். பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.15.6.2022 முதல் 20 .2.2023 வரை புதிய படப்பிற்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பெயர், புகழ், செல்வாக்கு கொடி கட்டி பறக்கும்.

    விவசாயிகள்:விவசாயிகளுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அஷ்டமச் சனி மற்றும் கொரோனா கால இழப்புகளை ஈடு செய்ய முடியும். ராகு 11ம் இடத்தை கடக்கும் முன்பு உங்கள் கடனை அடைத்து விடுவார்.பயிர் கடன்கள் முற்றிலும்அடைபடும்.

    ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 11,5ம் இடத்தில் கோட்சார ராகு| கேதுக்கள் சஞ்சரிப்பதால் தவறான எண்ண அலைகளால் மனக் குழப்பம் ஏற்படும். தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும்.குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக மாற்ற முயற்சித்து சட்டத்தின் பிடியில் திக்கலாம். சிலருக்கு சட்டத்திற்கு எதிரான இரண்டாம் திருமணம் நடக்கும். செயற்கை கருத்தரிப்பு முறை தோல்வியில் முடியும். உடன் பிறந்த மூத்த சகோதர, சகோதரிகளிடம் மனக்கசப்பு உண்டாகும். பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

    குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரைராரிக்கு 8ல் சஞ்சரிக்கும் கோட்சார சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். எதிர்பார்பார்ப்புகளில் தடை தாமதம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்கள் கை மாறிப் போகலாம். வழக்குகள் இழுபறியாகும்.

    பரிகாரம்:புதன்கிழமை காலை 6 --7 மணி வரையான புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.

    சொகுசு வாழ்க்கை

    தன வரவில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இல்லை என்ற நிலை இல்லை. முன்பு இருந்ததை விட வருமான உயர்வு அதிகமாகவே இருக்கும்.வட்டிக்கு வட்டி கட்டிய கடன் பிரச்சனைகள் குறையும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு.4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் சொகுசு வாழ்க்கை வாழப் போகிறீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், ஆபரணங்கள் வாங்கவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×