என் மலர்
மிதுனம்
சோபகிருது வருட பலன் 2023
செல்வாக்கான வருடம்!
புத்திக்கூர்மையும், அறிவாற்றலும் சாதுர்யமும் நிறைந்த மிதுன ராசியினருக்கு சோபகிருது வருடம் மேன்மையான பலன்களை வழங்க நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் ஏப்ரல் 22 முதல் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானம் செல்கிறார். கடந்த ஜனவரி17 முதல்சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்போது 11,5ம்மிடத்தில் சஞ்சரிக்கும் ராகுகேதுக்கள் அக்டோபர் 30க்குப்பிறகு 10,4 மிடத்திற்கு மாறுகிறார்கள்.வெற்றியும் மேன்மையும் உண்டாகும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். அசாத்திய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். அதை செயல்படுத்ததேவையான நிதி உதவி கிடைக்கும்.பெரிய மனிதர்களின் தொடர்பால் கவுரவப் பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அமையும்.பட்டம்,பதவி, அதிர்ஷ்ட வாய்ப்புகள்தேடிவரும். நிலம், வீடு, வாகனம் என சொத்து சேர்க்கை உண்டாகும்.
சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம்.பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்கும்.செல்வாக்குடன் திகழ்வீர்கள்.
அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் உண்டாகும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சொந்த தொழில் துவங்கும் ஆர்வம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். நிர்பந்தத்திற்காக ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும்.
குடும்பம்,பொருளாதார நிலை : குடும்ப பிரச்சனைகள் அகலும். இருளடைந்த உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளி பிறக்கும்.மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். உங்கள் சிந்தனையில் வேகமும், விவேகமும் இருக்கும். குடும்ப உறவுகளிடம்ஒற்றுமை அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடன் பிறந்தோர்களுடன் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை.வராக்கடன் வசூலாகும். அடமான நகைகள் மீண்டு வரும்.குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும்.காதல் உங்களுக்கு சாதகமாகும். நீங்கள் கண்ட கனவின் படி உங்கள் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொள்ளக் கூடிய இனிய ஆண்டாக அமையும்.
பெண்கள்: மன வலிமை அதிகரிக்கும்.மனக் கவலைகள் மறந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும்.
மிருகசீரிஷம் 3, 4 : நன்மைகள் அதிகரிக்கும் வருடம். வேதனைகளும் சோதனைகளும் தீரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில்நல்ல முடிவிற்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில்உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு.அண்டை அயலாருடன் ஏற்பட்டமனபேதம் சீராகும்.செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். வம்பு, வழக்குகளிலிருந்து மீள்வீர்கள். தினமும் கந்தகுரு கவசம் கேட்கவும்.
திருவாதிரை: அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும் வருடம். சோதனைகள் சாதனைகளாக மாறும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு கடல் கடந்து வேலைக்கு செல்லும் யோகம் உண்டாகும்.அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும்.புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம்.
மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். சிலர் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்பை வாங்குவார்கள். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். மூதாதையர் சொத்தில் நிலவிய குழப்பங்கள் பேச்சு வார்த்தையில் திருப்பம் ஏற்படும். தினமும் மகிஷாசுரமர்தினி ஸ்தோத்திரம் கேட்கவும்.
புனர்பூசம் 1,2,3 : புண்ணிய பலன்கள் நடக்கும் காலம்.வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும்.உங்கள் வாழ்க்கை வளர்ச்சியும், எழுச்சியும் கொண்டதாக இருக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்து பாக்கிய பலன்களை அதிகரிப்பீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். தினமும் குரு கவசம் படிக்கவும்.
பரிகாரம்:மிதுன ராசியினர் சிதம்பரம்தில்லை நடராஜரையும், சிவகாமித் தாயாரையும் வணங்க வேண்டும். அங்கு சித்திர சபையில் உற்சவ மூர்த்தியாக இருக்கும் சொர்ணபைரவரை வழிபட்டு வர தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406