search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    28.11.2022 முதல் 4.12.2022 வரை

    மகிழ்ச்சியான வாரம். விரைவில் அஷ்டமச் சனியின் பாதிப்பு விலகுவதால் இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். அவப்பெயர்கள், சங்கடங்கள் விலகும். புதிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்பத்தில் நிம்மதி,மகிழ்ச்சி பெருகும். வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச்சினைகள் தானாக தீரும்.

    பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்களால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும். கணவன்-மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள்.

    இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பெண்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நன்மை தரும்.

    29.11.2022 இரவு 7.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். சிவனை வில்வ அர்ச்சனை செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    21.11.2022 முதல் 27.11.2022 வரை

    எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வாரம். 7, 10-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெற்று ராசி அதிபதி புதன், சகாய ஸ்தான அதிபதி சூரியன், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனை பார்ப்பதால் தொட்டது துலங்கும். புத்திர பாக்கியம், திருமணம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும்.

    குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பெயர், புகழ் அந்தஸ்து உயரும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். அடமானச் சொத்து, நகைகளை மீட்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். உடல்நிலை தேறும்.

    27.11.2022 மணி மாலை 6.05 மணி முதல் 29.11.2022 இரவு 7.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். பேச்சைக் குறைக்கவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    14.11.2022 முதல் 20.11.2022 வரை

    பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும் வாரம். அஷ்டமச் சனியால் பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும்.

    வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும்.

    சிலருக்கு அத்தை அல்லது சித்தியின் மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். வேலையின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். விஷ்ணு காயத்திரி படிப்பது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிப்பலன்

    7.11.2022 முதல் 13.11.2022 வரை

    நம்பிக்கைகள் நிறைவேறும் வாரம். குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு, கடும் விரோத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 3க்குடைய சூரியன் மற்றும் 5ம் அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை பெற்றதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் தொடங்கப்போகிறது.

    ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்க உள்ளதால் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்துடன் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசித் தீர்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வாடகை வீட்டுப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி குடியேறுவீர்கள். திருமணத்தடை அகன்று நல்ல வரன் பற்றிய தகவல் கிடைக்கும். தாய்மாமாவிடம் ஆசி பெறவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிப்பலன்

    31.10.2022 முதல் 06.11.2022 வரை

    எதிர்கால வாழ்க்கை பற்றிய புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். அஷ்டமாதிபதி சனி பாக்கிய ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்களை வாட்டிய வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள்.

    திடீர் வருமானம், பெயர், புகழ் என யோகமான நிலை உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் சீராகும். இதுவரை வராமல் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு. 31.10.2022 காலை 11.23 முதல் 2.11.2022 பகல் 2.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு சிறப்பு.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம். சகாய ஸ்தான அதிபதி சூரியன் சுக்ரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் பெறுவதால் பாகப் பிரிவினை சுமூகமாக முடியும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.திருமண முயற்சி கைகூடும்.பொது வாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும்.

    வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும்.

    குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் 5-ம் இடத்தில் உள்ள களத்திரக்காரகன் சுக்ரன் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். வழக்குகள் சாதகமாகும். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். கிரகணத்தன்று பச்சைப்பயிறு தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம். சகாய ஸ்தான அதிபதி சூரியன் சுக்ரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் பெறுவதால் பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.திருமண முயற்சி கைகூடும். பொது வாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப்புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும்.

    குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் 5-ம் இடத்தில் உள்ள களத்திரக்கா ரகன் சுக்ரன் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலை யைத் தருவார். வழக்குகள் சாதகமாகும். சனிப் பெயர்ச்சிக்கு பிறகு பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். கிரகணத்தன்று பச்சைப்பயிறு தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிபலன்

    17.10.2022 முதல் 23.10.2022 வரை

    எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்று செவ்வாய் மற்றும் குருப்பார்வை பெறுவதால் சுக, போக பொருட்களின் சேர்க்கை இரட்டிப்பாகும். 6, 11-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் தன வரவு திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

    புதிய உத்தியோக முயற்சிகள் பலிக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று பாக்கிய ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.

    7, 10-ம் அதிபதி குரு 10-ல் ஆட்சி பலம் பெறுவதால் சிலரின் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். நவகிரகங்களில் புதன் பகவானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    10.10.2022 முதல் 16.10.2022 வரை

    மனதிற்கு நிம்மதியும் தன்னம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும் வாரம்.அஷ்டமச் சனியின் தாக்கம் குறைவதால் தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுத் தரும். பாகப்பிரிவினையால் மன பேதம் மிகுதியாகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள்.

    சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீபாவளி விடுமுறையில் தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். இல் வாழ்க்கையில் பற்று குறையும். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீடு பிடித்து செல்லலாம். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். சிலர் பழைய வேலையை விட்டு தீபாவளி போனஸ் வாங்கியவுடன் புதிய வேலைக்கு செல்லலாம்.

    கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதன் கிழமை வீர பத்திரரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    3.10.2022 முதல் 9.10.2022 வரை

    அமோகமான மாற்றங்கள் உள்ள வாரம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும்.

    சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். பழைய பாக்கிகள் வசூலாகும்.வீடு, வாகன முயற்சி பலிக்கும். ஐந்தில் உள்ள கேது சிலருக்கு கோவில் கட்டும் பாக்கியத்தை தருவார் அல்லது பொதுக் காரியங்களுக்கு உதவச் செய்வார். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும்.

    புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும், ஆதாயம் அதிகரிக்கும். கணவன்-மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். வரன் பார்த்துச் சென்றவர்களின் பதில் சாதகமாக இருக்கும். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள்.

    4.10.2022 காலை 6.01 முதல் 6.10.2022 காலை 8.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அக்கம் பக்கத்தினரின் தீய பார்வையால் ஆரோக்கியம் குறையும். உப்பு, மிளகாய் சுற்றிப் போடுவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    26.9.2022 முதல் 2.10.2022 வரை

    விடா முயற்சிகள் வெற்றி தரும் வாரம்.பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டு.காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். விரும்பிய கடன் தொகை நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். இல்லத்து விசேஷங்களுக்கு பாராமுகம் காட்டிய உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.

    உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். தொழில், உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும்.வாரிசுகளுக்கு விரும்பிய அரசு வேலை கிடைக்கும். சிறை தண்டனை அனுபவிப்பவர்களுக்கு நன்னடத்தை காரணமாக விடுதலை கிடைக்கும்.

    அஷ்டமச் சனியில் இருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கப் போவதால் தந்தை பரம்பரை சொந்தத் தொழிலின் முழு பொறுப்பையும் ஒப்படைப்பார்.சிலருக்கு சொத்துக்கள் விற்பனையின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆன்மீகப் பெரியவர்கள் நட்பு கிடைக்கும்.திருநள்ளாறு சென்று வர சுபமான திருப்பங்கள் உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    19.9.2022 முதல் 25.9.2022 வரை

    சோதனைகள் சாதனைகளாக மாறும் காலம். அஷ்டமத்துச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். புதிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களால் தொழிலில் முன்னேற்றம், லாபம் உருவாகும். தொழிலுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். சிலருக்கு நல்ல வசதியான வீட்டிற்கு இடமாற்றம் ஏற்படலாம். பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தாலும் இரண்டாமிடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் தேவைகள் நிறைவேறும்.

    வீடு மற்றும் பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். வராக் கடனை வசூலிப்பதில் முனைப்புக் காட்டலாம்.திட்டமிட்டபடி சுப காரியங்கள் பிரமாண்டமாக நடந்து முடியும். தாய், தந்தையின் ஆரோக்கியம் மகிழ்சியைத் தரும். மனக்கசப்பில் பிரிந்து சென்ற பிள்ளைகள் உணர்வுகளை புரிந்து மீண்டும் உறவை புதுப்பிப்பார்கள்.

    தம்பதிகளின் அன்பு பரிமாற்றம் மன நிறைவாக இருக்கும். அஷ்டமச் சனி காலத்தில் ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும். எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள் அல்லது ஒதுங்கிப் போவார்கள். ஆரோக்கிய குறைபாடு அகன்று மருத்துவச் செலவும் குறையும். அமாவாசையன்று பச்சைப் பயிறு தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×