என் மலர்
மிதுனம் - வார பலன்கள்
மிதுனம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
வெற்றிமேல் வெற்றி வந்து சேரும் வாரம். முயற்சி ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால்சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். இதுவரை தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சித்திக்கும். உழைத்து சம்பாதித்த ஊதியம் பயன்படாத நிலை மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி கிடைக்கும். சுயமாக சிந்தித்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தசகோதர, சகோதரிகளை நம்பி பிழைத்த நிலை மாறும்.
மாணவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும். திறமையை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பம் தேடி வரும். சிலர் தனித் திறமையால் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அதிகம் சம்பாதித்து பிரபலமடைவார்கள். உயில் எழுத உகந்த காலம். சொத்திற்கான முழுத்தொகை செலுத்தியும் தடைபட்ட பத்திர பதிவு தற்போது நடந்து முடியும். பாகப்பிரிவினை பேச்சு வார்த்தைகள் சுமூகமாகும்.
ஆன்மீக நாட்டம், கலை, இலக்கிய ஆர்வம் உண்டு. பெயர், புகழ் அந்தஸ்தை உயர்த்தும் கவுரவ பதவி உண்டு. பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை
உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ள அனைவரும்ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். உங்களது ஆலோசனையை ஏற்பார்கள்.
உங்களின் சகாய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியாகும். செய்தொழில் விருத்தியாகும். புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உகந்த நேரம். அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். இப்பொழுது நீங்கள் போடும் விதை ஜனவரியில் அஷ்டமச் சனியிலிருந்து முழுமையாக விடுதலை பெறும் போது விருட்சமாக வளரும். மேலும் பொருளாதார பாதிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை.
சிலருக்கு அக்கம் பக்கத்தினருடன் எல்லை தகராறு அல்லது வாய்க்கால் வரப்பு தகராறு உண்டாகும். வாழ்க்கை துணைவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இல்லறம் இனிக்கும். சிலர் குழந்தை பேற்றிற்கு மாற்று முறை மருத்துவத்தை நாடலாம். 16.6.2022. மாலை 5.55முதல்18.6. 2022 மாலை 6.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசி பலன்கள்
6.6.2022 முதல் 12.6.2022 வரை
மகிழ்சியான வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் சமூக அந்தஸ்து கவுரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும்.உற்றார், உறவுகளிடம் சுமூகமான நிலை நீடிக்கும்.
குழந்தைகளை திறமைகளைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். நல்ல தொழில் தொடர்புகளால் ஊக்கமும், சந்தோஷமும் உண்டாகும். 3-ம் அதிபதி சூரியன் 12ல் மறைவதால் இளைய சகோதரரின் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதிக்க நேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பெண்களுக்கு சரளமான பண புழக்கம் இருக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அஷ்டமச் சனியின் தாக்கத்தால் குற்றம் குறை கண்டுபிடித்த மனைவி உங்களை புரிந்து கொள்வார்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. பண வரவும் அதிகரிக்கும் அதற்கு இணையான செலவும் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அவர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரதோஷத்தன்று சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசி பலன்கள்
30.5.22 முதல் 5.6.22 வரை
தடைகள் தகர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும். வார இறுதியில் ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடு படுவீர்கள். ஆரோக்கிய தொல்லை சீராகும். உடன் பிறந்தவர்களின் நலனுக்காக சிறிய பொருள் விரயத்தை சந்திக்க நேரும்.
ராசியை செவ்வாய் பார்ப்பதால் முக்கிய பணிகள் சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு வெற்றி தரும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகி முன்னேற்றத்திற்கான அறிகுறி தென்படும். புதிய தொழில் வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். 9-ல் சனி ஆட்சி பலம் பெறுவதால் தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சினைகள் விலகி ஆதரவு உண்டாகும்.தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும்.
பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகளை, முக்கிய முடிவுகளை இந்த வாரத்திற்குள் முடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம் காரணமாக சிலரின் தந்தை குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்லலாம். கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகரிக்கும். புதன் கிழமை ஸ்ரீ வித்யா லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22
5-ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் சேர்க்கை பெற்றதால் நெடுங்காலமாக தடைபட்ட புத்திர பிராப்தம் கிட்டும். 6-ம் அதிபதி செவ்வாய் 10-ம் அதிபதி குருவுடன் இணைவதால் அஷ்டமச் சனியால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்.
அஷ்டமச் சனி முடியவில்லை என்பதால் கடன் விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். ராசி அதிபதி புதன் விரயத்தில் மறைந்து வக்ரம் பெற்றதால் வீண் அலைச்சல்கள், விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு உயில் அல்லது முக்கிய ஆவணங்களை வைத்த இடம் மறந்து போகும்.
சிலர் தொலைந்த பத்திரங்களுக்கு புதிய நகல் உருவாக்குவார்கள். பெண்களின் முயற்சிக்கு மாமியாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். 9-ல் சனி ஆட்சி பலம் பெற்று இருப்பதால் அமாவாசையன்று முன்னோர்களை வழிபட முத்தாய்ப்பான மாற்றங்கள் உண்டு.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிப்பலன்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் 10-ல் உச்சம் பெற்றதால் வாழ்நாள் லட்சியமாக எதிர்பார்த்த பதவி தேடி வரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு நலம் தரும். தொழில் உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் கூடி வரும். குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் உறவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சனி ஆட்சி பலம் பெற்றதால் தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த வாரிசுகள் வீடு வந்து சேருவார்கள். 20.5.2022 காலை 8.45 முதல் 22.5.2022 காலை 11.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் அல்லது அவர்களால் சிறு பொருள் விரயம் ஏற்படும். மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406