search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

    ராசிக்கு 5-ல் நீச்ச சூரியனும். ராசியில் 6-ம் அதிபதி செவ்வாயும் உள்ளதால் மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களையும் சனி பகவான் பெற்றுத் தருவார். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை சற்று தள்ளிப் போடுவது நல்லது. திருமணத் தடை அகலும்.

    உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். தந்தை தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வர். 13.10.2024 அன்று மாலை 3.44 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம்.கடமை யில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. மீனாட்சி வழிபாடு உயர்வு தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

    6.10.2024 முதல் 12.10.2024 வரை

    செல்வாக்கு மேம்படும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குல தெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்தும் காலம் என்றால் அது மிகையாகாது. என்றைக்கோ வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயரும். பங்கு பத்திரங்கள் நல்ல லாபம் பெற்றுத் தரும்.

    இது வரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அந்தஸ்தான வீடு, ஆடம்பர வாகனம் என வாழ்வாதாரம் உயரும். உயர்கல்வி முயற்சி சித்திக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். தொழில், உத்தியோகம் அனுகூலம் என அனைத்து சுப பலன்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.11.10.2024 அன்று பகல் 11.40 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். பாலாம்பிகையை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

    29.9.2024 முதல் 5.10.2024 வரை

    எதிர்பார்த்த உதவிகள் உடனே தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் சுக ஸ்தானமான 4ம் இடத்தில் உச்சம் பெறுவதால் மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை செயல்படுத்துவீர்கள்.புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.தன நெருக்கடிகள் குறையும். வருமானத்தை அதிகரிப்பது மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். வணிகம் சார்ந்த சிந்தனைகள் அதிகமாகும்.அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும்.

    உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறவுகளின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். குழந்தை பாக்கியம் கிட்டும்.மன வருத்தம், சங்கடங்கள் நீங்கும். அட மான நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். அமாவா சையன்று வயது முதிர்ந்தவர்களின் நல்லாசி பெறவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)

    22.9.2024 முதல் 28.9.2024 வரை

    வாங்கிய கடனை கொடுத்து மகிழும் வாரம்.ராசியில் 6-ம் அதிபதி செவ்வாய். 5-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி செய்வதால் இது மிதுன ராசிக்கு சுப பலனை அதிகரிக்கும் அமைப்பாகும். 6-ம் அதிபதி செவ்வாய் உருவாக்கும் கடனை 5-ம் அதிபதி சுக்ரன் நிவர்த்தி செய்வார். செவ்வாய் லாப அதிபதியாகவும் உள்ளதால் வராக் கடனை வசூலிப்பதில் முனைப்புக் காட்டலாம். எதிர்காலம் பற்றிய பயம் குறையும். சோதனைகள் சாதனைகளாக மாறும். தொழிலுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும்.

    சிலர் நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு மாறலாம்.பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். திட்டமிட்டபடி சுப காரியங்கள் பிரமாண்டமாக நடந்து முடியும். தாய், தந்தையின் ஆரோக்கியம் மகிழ்ச்சியைத் தரும். மனக்கசப்பில் பிரிந்து சென்ற பிள்ளைகள் உணர்வுகளை புரிந்து மீண்டும் உறவை புதுப்பிப்பார்கள். தம்பதிகளின் அன்பு பரிமாற்றம் மன நிறைவாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். பச்சைப் பயிறு தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)

    15.9.2024 முதல் 21.9.2024 வரை

    குலதெய்வ நல்லாசிகள் தேடி வரும் வாரம். 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி செய்வதால் தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். செயற்கை முறை கருத்தரிப்பை அணுக ஏற்ற நேரம்.கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஓடி வரும்.தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். பங்குச்சந்தை ஆதாயம் இரட்டிப்பு லாபம் தரும். கவுரவப் பதவி கிடைக்கும்.வீட்டில் சுபச் சடங்குகள் மற்றும் புனிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    பொதுக் காரியங்களில் ஆர்வம் உண்டாகும். வீடு, வாகன யோகம் உள்ளது. வெளியூர்,வெளிநாட்டில் வாழ்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. சிலர் புதியதாக காதல் வயப்படுவார்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். மன ஆரோக்கியத்தை பராமரித்திடுங்கள். மனம்தான் வாழ்வின் நுழைவாயில். நல்லது, கெட்டது அனைத்தும் மனதின் மூலமே வருகிறது. 16.9.2024 அன்று காலை 5.44 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு தேவைப்படும்.தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை

    வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சேரும். 6-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் எதிரிக்கு பலம் இருக்காது. வெற்றி உண்டு. எதிரிகள் ஒதுங்குவார்கள். விண்ணப்பித்த கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையை நிரூபிக்க நல்ல சந்தர்ப்பங்கள் தானாக கூடி வரும். அரசாங்க மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த தன வரவுகள் இருக்கும். சொத்து வாங்கும் முயற்சி ஈடேறும்.

    சொத்துகள் விருத்தியாகும். ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கை துணையின் வைத்தியச் செலவு குறையும். புதிய தொழில் முயற்சிகள் ஒப்பந்தங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் உத்தியோக அனுகூலம் நல்ல விதமாக இருக்கும். விரயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    தம்பதிகள் ஒருவர் விஷயங்களில் பிறர் தலையிடாமல் இருப்பது நல்லது. 14.9.2024 அன்று 3.23 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் கடின உழைப்பு தேவை .புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்திலிருந்து விடுபட விபூதி அபிஷேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)

    1.9.2024 முதல் 7.9.2024 வரை

    ஆரோக்தியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி, ராசியில் 6, 11-ம் அதிபதி செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது. திட்டமிட்டு வெற்றிபெற வேண்டிய நேரம். செய்த தர்மம் தலை காக்கும்.சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.

    விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள். திருமண வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். பெண்களுக்கு ஓய்வு நேரத்தில் தையல், அழகுகலை போன்ற தொழில் கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கிய குறைபாடு உரிய வைத்தியத்தில் சீராகும். சதுர்த்தியன்றி அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)

    25.8.2024 முதல் 31.8.2024 வரை

    சாதகமும், பாதகமும் நிறைந்த வாரம். 6,11-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ராசிக்கு 12ல் குரு. தன ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற ராசி அதிபதி புதன். பூர்வ புண்ணியாதிபதி சுக்ரன் நீசம் என கிரகம் சஞ்சாரம் சாதகமும், பாதகமும் கலந்த நிலையில் உள்ளது.அரசியல் பிரமுகர்களுக்கு கட்சிப் பணியினால் வீண் விரயங்கள், மன உளைச்சல் ஏற்படும். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி வம்பு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

    தொழில், உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும். போட்டித் தேர்வு, அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் பெருகும்.பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள். விண்ணப்பித்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைக்கும். ஆரோக்கியம் மற்றும் கடன் சார்ந்த விசயங்களில் விழிப்புடன் இருப்பது நல்லது. திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்வீர்கள்.ராசியை செவ்வாய் கடக்கும் வரை தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)

    19.8.2024 முதல் 25.8.2024 வரை

    நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். வக்ரம் பெற்ற ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பம் அமையும். மனசஞ்சலம் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். பழைய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விரும்பிய இடத்திற்கு இடப்பெயர்ச்சி உண்டாகும். வீண் விரயங்களும் வைத்தியச் செலவும் குறையும். பூர்வீகச் சொத்து தொடர்பான பாகப்பிரிவினை மற்றும் முக்கிய ஆவணங்கள் எழுத ஏற்ற காலம். உடன் பிறந்தவர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயரும்.

    புதிய வீடு,நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். புதிய திட்டங்களில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்களைப் புகுத்தி ஆதாயம் காண்பர். பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும்.19.8.2024 அன்று மாலை 6.59 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.கிருஷ்ணர் வழிபாடு இழந்ததை மீட்டுத்தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)

    12.8.2024 முதல் 18.8.2024 வரை

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம். உப ஜெய ஸ்தானமான 3ம் இடத்தில் சூரியன், புதன், சுக்ரன் சேர்க்கை.ராசி அதிபதி புதன் வக்ரம் என கிரக நிலவரம் உள்ளது. சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வீடு கட்டுதல், மற்றும் வாங்குதல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். உத்தியோகஸ்தர்கள் கடுமையான பணியை கூட சிறப்பாக செய்து முடிப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும்.

    சுய ஜாதக கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். காதல் விவகாரங்கள் ஒத்திப்போடுவது நல்லது. பெண்களுக்கு தாய் வழி சீதனம் கிடைக்கும். 17.8.2024 அன்று மாலை 5.28 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்ப மாகிறது. உங்களுக்கு சம்பந்த மில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வரலட்சுமி நோன்பு அன்று பாசிப்பருப்பு பாயசம் படைத்து மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)

    5.8.2024 முதல் 11.8.2024 வரை

    ஆக்கம் நிறைந்த வாரம். ராசி அதிபதி புதன் சகாய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனுடன் இணைந்து செவ்வாய், சனி பார்வையில் இருக்கிறார். பொருளாதார சிந்தனைகள் அதிகரிக்கும்.சமூக அந்தஸ்து உயரும் .குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த செல்போன், கார், பைக் வாங்கி மகிழ்வீர்கள்.வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியதை முறையாக பிரித்து கொடுப்பீர்கள். சிலர் சொத்துடன் குலத் தொழிலையும் பிரிக்கலாம்.

    தொழிலில் ஏற்றமும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம்.காதலில் நீங்கள் விரும்புபவரின் இசைவு கிடைக்கும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும்.தாய்வழி உறவுகளால் ஏற்பட்ட மனச் சங்கடம் அகலும்.ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி உடல் சுறுசுறுப்படையும். புத்திர பிராப்தம் உண்டாகும். ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு சந்தன அபிசேகம் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    29.7.2024 முதல் 4.8.2024 வரை

    செய்த தர்மம் தலை காக்கும் வாரம். ராசி அதிபதி புதன் சகாய ஸ்தானத்தில் 5, 12-ம் அதிபதி சுக்ரனுடன் சேருகிறார்.முன்னோர்கள் சேர்த்து வைத்த புண்ணியங்கள் உங்களை காக்கும் நேரம். இதனால் மனதிற்கு இதமளிக்கும் சம்பவங்கள் நடக்கும். பழைய நண்பரை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். மன அழுத்தம், இனம் புரியாத சங்கடங்கள் விலகும். தொழில், உத்தியோகத்தில் நிலையான நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் துரிதமாக நடக்கும். பூர்வீகத்தில் வீடு, மனை வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும்.அன்றாட பணியில் உள்ள சில சிக்கலான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

    ராசி அதிபதியை சனி பார்ப்பதால் வியாபாரிகள் முன்பின் தெரியாதவர்களிடம் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்குவதை தவிர்க்க வேண்டும். சுப மங்கல நிகழ்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். வாழ்க்கைத் துணை, நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆடி செவ்வாய் கிழமை அம்மனுக்கு மஞ்சள் அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×