search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    22.7.2024 முதல் 28.7.2024 வரை

    திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றி களை அடைவீர்கள். ராசி அதிபதி புதன் சகாய ஸ்தானமான உப ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அறிவும் ஆற்றலும் பளிச்சிடும் அனைத்து காரியங்களையும் திறமையாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணம் சம்பாதிக்க பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகளால் லாபமும் வளமும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைக்கலாம். கூட்டு முயற்சிகள் நல்ல ஆதாயம் தருபவையாக இருக்கும். அலுவலக பிரச்சினைகள் தீரும்.

    தொழில் ரீதியான லட்சியங்களை அடைவதற்கான சிந்தனையில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இருக்கும்.பணவரவு நன்றாக இருந்தாலும் சிறு விரயங்களும் ஏற்படும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும்.மேலிடப் பார்வை உங்கள் மீது விழுந்து பெரும் புகழ் அடைவீர்கள்.அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். 23.7.2024 அன்று காலை 9.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தாருடன் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஆடி வெள்ளிக்கிழமை பச்சை புடவை சாற்றி அம்மன் வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    15.7.2024 முதல் 21.7.2024 வரை

    தடைகள் தகறும் வாரம் . ராசி அதிபதி புதன் 3-ம்மிடமான முயற்சி ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானம் செல்வதால் மிதுனத்தாரின் புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொட்டது துலங்கும். சிலர் புதிய செல்போன் வாங்கலாம். சிலர் நெட்வொர்க் மாற்றலாம். தொழில் உத்தியோக ரீதியான நன்மை தரும் இடப் பெயர்ச்சிகள் செய்ய நேரும். உத்தி யோகத்தில் உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கை மறதியாக வைத்த ஆவணங்கள் மற்றும் தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். மாணவர்களின் கல்வித் திறமை மிளிரும். வீடு கட்டுவது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்ற பணிகள் நடக்கும்.

    நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் இப்பொழுது நடக்கத் துவங்கும் .எதிர்பாராத சில செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். 21.7.2024 அன்று காலை 7.27-க்கு சந்திராஷ்டமம் துவங்குவதால் உத்தி யோகஸ்தர்கள் வேலைப் பளுவால் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட நேரும். திருவேற்காடு கருமாரியம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    8.7.2024 முதல் 14.7.2024 வரை

    ஊக்கம் நிறைந்த வாரம். ராசியில் முயற்சி மற்றும் சகாய ஸ்தான அதிபதி சூரியன். தனம், வாக்கு ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் 5-ம் அதிபதி சுக்ரன் என உலவும் கிரக நிலைகள் மிதுன ராசியினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், வங்கிப் பணி, ஆசிரியர் பணி, வக்கீல்கள், ஜோதிடர்களின் தனித் திறமை மிளிரும். உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஓட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சிலர் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிப்பார்கள்.

    பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும். சனி வக்ரம் பெறுவதால் கை,கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.இந்த ஜென்மத்தில் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும், வெற்றிகளை யும் அடைவீர்கள்.அரசியல் ஆதாயம் உண்டு.அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும். சூரிய நமஸ்காரம் செய்வதால் சுகமான வாழ்க்கை அமையும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    24.6.2024 முதல் 30.6.2024 வரை

    விருப்பங்கள் முயற்சிகள் நிறைவேறும் வாரம்.வார இறுதியில் ராசி அதிபதி புதன் தன ஸ்தானம் செல்கிறார். 8, 9-ம் அதிபதி சனி வக்ரமடைகிறார்.உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் விலகும். உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபார தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். வழக்குகள் சாதகமாகும். நோய்கள் விலகி உடல் நிலை தேறும். வீடு, வாகன யோகம் உண்டா கும். அடமான நகைகள் மீண்டு வரும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் நிம்மதியை அதிகரிக்கும்.எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

    பூர்வீகம் சென்று செட்டிலாகும் விருப்பம் அதிகமாகும். திரைக்கலை ஞர்கள் தொழில் நிமித்த மாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. 26.6.2024 அன்று மதியம் 1.49 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடிகளை குறைக்க முடியும்.வெளிப்படையான பேச்சால் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கக் கூடாது. விநாயகரை வழிபட வாழ்க்கை வளமாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    17.6.2024 முதல் 23.6.2024 வரை

    மேன்மை நிறைந்த வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தான சூரியன் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை. மறைமுக எதிர்ப்புகள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். ஆன்ம பலம் பெருகும். புகழ் கொடிகட்டிப் பறக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மிகுதியான சுப பலன்கள் நடக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். வருமானம் வந்து கொண்டே இருக்கும். திடீர் தன லாபம் கிடைக்கும்.விரோதிகள் நண்பர்களாவார்கள். அலுவலகமே வியக்கும் வகையில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தொல்லை கொடுத்த வாழ்க்கை துணையிடமிருந்து விவாகரத்து கிடைக்கும்.

    வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். குடும்ப பொருளாதார பிரச்சினையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்கள் வெற்றிகரமாக அமையும். பவுர்ணமியன்று மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    10.6.2024 முதல் 16.6.2024 வரை

    இன்பம் நிறைந்த வாரம். வாரத்தின் மத்தியில் ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெற்று சுக்ரன் சூரியனுடன் சேர்க்கை .சூரியன் புதன் சம்பந்தம் புத ஆதித்ய யோகம்.மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சில புரிதல்கள் ஏற்படும். போட்டி பந்தயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும்.உத்தியோகத்தில் நட்பு வட்டாரம் விரிவடையும். உடல்நலம் சீராகும். கல்வியில் ஏற்பட்ட மந்தத்தன்மை விலகும். பொருளாதர உயர்வையும் பெயர், புகழையும் பெற்றுத் தரும். இல்லத்து சுப விசேஷங்களுக்கு எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும்

    பூர்வீகம் சென்று வருவீர்கள். குலதெய்வ அருளும், குடும்ப பெரியோர்களின் நல்லாசியும் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் பரிசளித்து வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். ஆண்கள் பெண்கள் விசயத்தில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரும் வாய்ப்புள்ளது. முக்கிய அலுவலக பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. தினமும் ஸ்ரீ லட்சுமி குபேர மந்திரம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    3.6.2024 முதல் 9.6.2024 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் விரயாதிபதி சுக்ரன் மற்றும் குரு சூரியனுடன் சஞ்சாரம். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து மன அமைதியை தக்க வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு உண்டு. வாழ்நாள் லட்சியமான எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். இறைப்பணியில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

    பெண்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறும். பாதியில் நிற்கும் கட்டிட பணிகள் துரிதமாகும்.பெண்கள் கற்பனை கவலைகளைத் தவிர்த்து எதார்த்தமாக வாழப் பழக வேண்டும். தம்பதிகள் ஒருவர் மேல் மற்றவர் அன்பை பொழிவார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் தாய் மாமனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். உடல் நிலை சீராக இருக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பிறரை குறை சொல்வதை தவிர்க்கவும். அமாவாசையன்று பெற்றோர்க ளிடம் ஆசி பெறவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசி பலன்

    27.05.2024 முதல் 02.06.2024 வரை

    சுப விரயங்களால் மனம் மகிழும் வாரம். ராசி அதிபதி புதன் தனது நட்பு வீட்டில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம். வார இறுதியில் லாபாதிபதி செவ்வாய் ஆட்சி என கிரக நிலவரம் சிறப்பாக உள்ளது. மிக கடினமான பணிகளைக் கூட திறமையாக எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணை உங்கள் வளர்ச்சிக்கு பக்க பலமாக உறுதியாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு பயனுள்ளதாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து பொருளாதாரம் மேம்படும். திருமணம், சீமந்தம், காது குத்து, புதுமனைப் புகுவிழா என குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு சொத்து அடமானக் கடன் அல்லது தொழில் கடன் கிடைக்கும். சிலரின் பிள்ளைகள் தொழில் அல்லது கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். சிறு சிறு வைத்தியச் செலவுகள் இருக்கும். 27.5.2024 அன்று மாலை 4.05 மணி முதல் 29.5.2024 இரவு 8.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் பிறரிடம் இறங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மந்த தன்மையுடன் செயல்படுவீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    20.5.2024 முதல் 26.5.2024 வரை

    சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிதுனத்திற்கு யோகமான அமைப்பாகும்.மனதில் தைரியம் பிறக்கும். வளர்ச்சிக்கான மார்க்கம் தென்படும்.முக்கிய முடிவெடுப்பதில் ஏற்பட்ட மனக்குழப்பம் அகலும். பொருளாதாரத்தில் தன்னிறைவு காணப்படும்.வரவிற்கு ஏற்ற செலவும் உண்டாகும். விரயத்தை சுப செலவுகளான வீடு, வாகனம், நகைகள், பங்கு பத்திரத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்.

    வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவரின் தசா புத்திக்கு ஏற்ற மாற்றம் உண்டு. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது உத்தமம். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நெருக்கமானவர்களின் சந்திப்பு குதூகலத்தை அதிகரிக்கும்.கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பிள்ளைகளை அரவணைத்துச் செல்லவும். உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். புதன் பகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    13.5.2024 முதல் 19.5.2024 வரை

    புதிய சந்தர்ப்பங்கள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதனும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனும் லாப ஸ்தானத்தில் நின்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பது மிதுன ராசிக்கு புதிய சந்தர்ப்பத்தை தேடித் தரும். உங்களின் முயற்சிகள் வீண் போகாது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும் நிறைவேறும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றி பெறுவீர்கள். உங்களின்திறமைகளை வெளிக்காட்ட அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது.

    தொழில்ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். செல்வ செழிப்பு, மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாகவே வந்து சேரும். வீடு கட்டும் யோகம் அல்லது மனையோகம் அமையும். மனக்கசப்பில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். சிலர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தனிமையில் ஓய்வு எடுப்பார்கள். சிலர் பணியில் இருந்து ஓய்வு பெறலாம். பசுமாட்டிற்கு வாழைப்பழம் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    லாபகரமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்திற்குள் நுழைகிறார். தொழில், உத்தியோக அனுகிரகம் பல விதத்தில் நற்பலன்களை அள்ளித் தருவதாக இருக்கும்.குடும்பத்திலும் அலுவலகத்திலும் உங்கள் பெருமை பேசப்படும். உங்கள் முன்னேற்றத் தடைகள் அகலும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.ஆரோக்கியம், கொடுக்கல், வாங்கல், ஜாமீன், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியமாகும். வெளிநாட்டு வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்துவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும். சமுதாயத்தில் ஒரு கவுரவமான நிலையை எட்டக் கூடிய யோகமும் உயர் பதவி அதிர்ஷ்டமும் உள்ளது.

    வாழ்க்கைத் துணை, பிள்ளைகளுக்கு ஏற்பட்ட ஆரோக்கிய கேடு சீராகும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனையில் எதிர்கால கல்வி பற்றி நல்ல முடிவு எடுப்பீர்கள். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும். விரும்பிய கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். அமாவாசையன்று மகா விஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிபலன்

    29.04.2024 முதல் 05.05.2024 வரை

    லாபகரமான வாரம். ராசி அதிபதி புதன் நீசம் பெற்றாலும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பதவியில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை குறைந்து உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் திறமைக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும்.

    தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். தொழில், உத்தியோக ரீதியான பயணங்கள் லாபம் பெற்றுத்தரும். ஆன்லைன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் வணிகம் புரிபவர்களுக்கு தொழில் வளர்ச்சி பெருகும். வீடு, மனை, வாகன எண்ணங்களை நிறைவு செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உருவாகும். பூர்வீகம் தொடர்பான சகோதர சச்சரவுகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வராக்கடன்கள் வசூலாகும். பெண்களுக்கு தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும்.

    30.4.2024 அன்று காலை 10.36 மணி முதல் 2.5.2024 அன்று பகல் 2.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிந்தித்து நிதானமாக திட்டமிட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதன்கிழமை ஸ்ரீ வித்யா லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×