என் மலர்
மிதுனம் - வார பலன்கள்
மிதுனம்
இந்தவார ராசிபலன்
29.1.2024 முதல் 4.2.2024 வரை
முயற்சிகள் பலிதமாகும் வாரம். ராசி அதிபதி புதனும் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சேர்ந்து தன ஸ்தானத்தை பார்க்கிறார்கள். இது மிதுனத்திற்கு பல விதமான சாதகங்களை ஏற்படுத்தும். தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும். மனதில் நிலவிய தேவையற்ற குழப்பங்கள் நீங்கி முயற்சியில் வெற்றி ஏற்படும். ஆன்ம பலம் பெருகும். கடன், நோய் எதிரி தொல்லை நிவர்த்தியாகும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் இருந்த கருத்து வேறுபாடு, கடும் விரோத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இதுவரை நீடித்த பகையும், வருத்தமும் மாறும்.பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.
ஊதிய உயர்வு, பணி உயர்வு, இடப்பெயர்ச்சி போன்ற நிகழ்வுகள் நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். இந்த வாரத்தில் திருமணம் நிச்சயமாகும். புத்திர பிராப்தம் சிந்திக்கும். பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். புதிய ஆடம்பர பொருட்கள் சேரும். பிள்ளைகளுடன் நல்ல புரிதல் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் சிறக்கும். புதிய முயற்சியில் வெற்றியும், லாபமும் பெற சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
22.1.2024 முதல் 28.1.2024 வரை
கவுரவமான உயர்வுகள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் உப ஜெய ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து ராசியைப் பார்ப்பதால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். முயற்சிகளில் நிலவிய தடை, தாமதங்கள் அகன்று இலக்கை அடைவீர்கள். ஞாபக சக்தி கூடும். உடல் நலம் அதிகரித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அரசு உத்தியோகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிட்டும். மேலதிகாரியால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மாறும்.உழைப்பிற்கான ஊதியம் உடனே கிடைக்கும்.
ஒரு கடன் வாங்கி மற்றொரு கடன் அடைத்த நிலை மாறும். செயற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு சாதகமான காலம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் ஆரோக்கியம் மன நிறைவு தரும். அடமானச் சொத்து நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உண்டாகும். வாழ்க்கை இழந்தவர்களுக்கு புதிய வாழ்க்கைத்துணை கிடைக்கும். திருமணத் தடை அகலும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் வாங்க தேவையான பண உதவி கிடைக்கும். தைப்பூசத்தன்று விபூதி அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
15.1.2024 முதல் 21.1.2024 வரை
தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும் வாரம்.சகாய ஸ்தான அதிபதி சூரியன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் புத்தி சாதுர்யம் வெளிப்படும். மதிப்பு, மரியாதை கூடும். சமுதா யத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். திறமைகள் வளரும். வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும்.புதிய தொழில் முதலீடு செய்யவர்கள் மனைவி பெயரில் செய்வது சிறப்பு. வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் நல்ல பொருளாதாரத்துடன் பூர்வீகத்தில் வந்து செட்டிலாவார்கள். கெடு பலன்கள் குறையத் துவங்கும் . .ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும். திருமணமாகாத ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும்.பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டா கும். தந்தையால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படும். கை, கால், உடல் வலி இருந்தாலும் சமா ளித்து விடுவீர்கள். குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
8.1.2024 முதல் 14.1.2024 வரை
முயற்சிகளில் வெற்றியடையும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 7-ல் வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைவது புத ஆதித்திய யோகம். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சூரியனைச் சேரும். உங்களுடைய செயல்பாடு களால் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கு வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் நிலவிய சங்கடங்கள் விலகும். சுபகரியங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பேசி முறையாக பாகப் பிரிவினைகளை முடிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஆர்வம் உண்டாகும்.
சிலருக்கு மறுமணம் நடக்கும். புதிய வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. சுப பலன்கள் உண்டாகும். உடல் நலம் திருப்தி தரும். 11.1.2024 இரவு 11.05 முதல் 13.1.2024 இரவு 11.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மூன்றாம்பிறையன்று சந்திர தரிசனம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
1.1.2024 முதல் 7.1.2024 வரை
காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசிக்கு 3-ம் அதிபதி சூரியன், 6,11-ம் அதிபதி செவ்வாயின் பார்வை. வார இறுதியில் ராசி அதிபதி புதனும் ராசியை பார்க்கிறார். ராசியை முயற்சி ஸ்தான அதிபதி சூரியன் பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும்.தைரியம், தெம்பு அதிகமாகும். உடலும், மனமும் பொலிவு பெறும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். அவர்களின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் அபி விருத்தி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உண்டாகும்.
வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நிலவிய சங்கடங்கள் மறையும் உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு வேலையை ராஜினாமா செய்து விட்டு தொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரதோஷத்தன்று வில்வ அர்ச்சனை செய்து
சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
25.12.2023 முதல் 31.12.2023 வரை
வெற்றிகரமான வாரம். உப ஜெய ஸ்தான அதிபதிகளான சூரியன், செவ்வாய் ராசியை பார்ப்பது மிதுனத்திற்கு மிகச் சிறப்பான யோகமான அமைப்பு.அதற்கும் மேல் பாக்கிய அதிபதி சனி பாக்கிய ஸ்தானத்தில் நின்று முயற்சி ஸ்தானத்தைப் பார்ப்பதால் வெற்றியைத் தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை. வெற்றி உங்களைத் தேடி வரும். சிறிய முயற்சியில் பெரிய தடைகள் விலகும். மனதிற்கு பிடித்த நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும். இல்லை யென்ற நிலை இனி இல்லை. பட்ட கடனும் நோயும் தீரும். வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். ஆயுள் சார்ந்த பயம் விலகி உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வெளிநாட்டு பணம் தாராளமாக புழங்கும்.
திருமணம், புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். உடலும் உள்ளமும் குளிரும் படியான நல்ல சம்பவங்கள் நடக்கும். தலைமைப் பதவி தேடி வரும். உயர் கல்வி வாய்ப்பு உள்ளது. சுப கடன் வாங்கி வீடு, வாகன வசதியை மேம்படுத்துவீர்கள். சுருக்கமாக அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும். கரு டாழ்வாரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
18.12.2023 முதல் 24.12.2023 வரை
முயற்சிகள் வெற்றி தரும் வாரம். ராசி அதிபதி புதன் வக்ரம் பெற்றாலும் தன் வீட்டைத் தானே பார்ப்பதுடன் சகாய ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைவது புத ஆதித்ய யோகம். எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பெறுவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. மிதுன ராசிக்கு மிக அற்புதமான நல்ல மாற்றங்கள் தெரியும்.புதிய முயற்சிக்கான பலன்கள் உடனே தெரியும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் விலகும்.
இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் படியாக வருமானம் கூடும்.சொத்து விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். சின்னத்திரை, சினிமா கலைஞர்களின் புகழ், அந்தஸ்து கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். காதல் திருமண முயற்சிக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும்.வெளிநாட்டில், வெளியூரில் வசிப்பவர்கள் பூர்வீகத்தில் சொத்து வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் நிலவிய தொல்லைகள் சீராகும். புதிய இன்சூரன்ஸ் பாலிசி கிடைக்கும். ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவை துளசி அர்ச்சனை செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
11.12.2023 முதல் 17.12.2023 வரை
முயற்சிகள் நிறைவேறும் வாரம். முயற்சி ஸ்தான அதிபதி சூரியன் 6-ம் அதிபதி செவ்வாயுடன் ராசிக்கு 6-ல் சேர்க்கை பெறுவதால் துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். முயற்சிகளால் சிறப்படைவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிரிகள் தாமாக விலகு வார்கள். தொழில் ஆர்வம் அதிகரிக்கும். வருமானத்தில் நிலவிய தடைகள் விலகும். கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடங்கள் விலகும். சொத்துக்கள் வாங்க வீடு கட்ட எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உங்கள் புகழ் பரவும். அரசியல் அரசாங்க ஆதரவு உண்டு. உத்தி யோகத்தில் மகழ்ச்சியான நிலை ஏற்படும்.
படித்த வர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளுக்கான சுப செலவு அதிகரிக்கும். பங்குச்சந்தை ஆர்வம் அதிகரிக்கும்.புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். 15.12.2023 பகல் 1.45 முதல் 17.12.2023 மாலை 3.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. அமாவாசையன்று காவல் தெய்வங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
4.12.2023 முதல் 10.12.2023 வரை
வீண் கவலைகள் அகலும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 7-ல் நின்று தன் வீட்டைத் தானே பார்ப்பதால் குடும்ப முன்னேற்றத்திற்கு வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். 5ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். புதிதாக பங்குச் சந்தை அல்லது அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். கமிஷன் அடிப்படையிலான தொழில் ஆடிட்டர், தொழில் ஆலோசகர் பணி, ஆசிரியர் பணி, வங்கிப் பணி புரிபவர்களின் திறமை போற்றப்படும்.
கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை சீராகும்.பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரவு திருப்திதரும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விஷ்ணு சகஸ்ஹர நாமம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
26.11.2023 முதல் 3.12.2023 வரை
அனுகூலமான பலன்கள் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் ராசிக்கு 7-ல் நின்று தன் வீட்டைத் தானே பார்ப்பதால் உள்ளுணர்வு மிகவும் சிறப்பாக இயங்கும். அதை மேலும் வலுப்படுத்த நல்ல சிந்தனை அவசியம். திறமைகளில் மெருகு கூடும். இளமை பொலிவு உண்டாகும்.உங்களின் செயல்பாடுகள் நல்ல வெற்றி தருவதாக அமையும். சீரான தொழில் வளர்ச்சியால் நம்பிக்கையும் தைரியமும் கூடும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் நல்ல வேலை அமையும். செவ்வாய் சனி சம்பந்தம் இருப்பதால் உடல் நலம் தொடர்பான அக்கறை தேவை.
வாழ்க்கைத் துணையின் செயல்பாடுகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள், நல்ல சலுகைகளைப் பெறுவார்கள். விவசாயிகள் இடைத்தரகர்கள் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நேரடி விற்பனையில் ஈடுபடுவது நல்லது. வீடு கட்டத் தேவையான நிதி கிடைக்கும். கணவன், மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.புதன் கிழமை துளசி மாலை அணிவித்து மகா விஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
20.11.2023 முதல் 26.11.2023 வரை
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரம்.லாப குருவால் நேர்மறை ஆற்றல் பெருகும்.பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கள் அகலும். வருமானம் அதி கரிக்கும். வராக்கடன் வசூலாகும். அடிப்படைத் தேவைக்கு திணறிய நிலை மாறும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வரும். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடு வீர்கள்.உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு.
பலருக்கு திருமணத் தடை நீங்கும். விருப்ப திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். ராசிக்கு 6-ல் செவ்வாய் ஆட்சி பலம் பெற்று பாக்கிய அதிபதி சனியின் பார்வை பெறுவதால் அடமானச்சொத்துக்கள் மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.உடல் உபாதைகள் அகலும்.வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்.புதிய வாகனம் வாங்கலாம். பவுர்ணமியன்று சத்திய நாராயணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
13.11.2023 முதல் 19.11.2023 வரை
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரம்.லாப குருவால் நேர்மறை ஆற்றல் பெருகும்.பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும். வராக்கடன் வசூலாகும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய பிரச்சனைகள் தீரும். பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. ராசிக்கு 6ல் செவ்வாய் ஆட்சி பலம் பெற்று பாக்கியாதி சனியின் பார்வை பெறுவதால் அடமானச் சொத்துக்கள் மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.
உடல் உபாதைகள் அகலும்.வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்.புதிய சொத்துக்கள் வாங்கலாம்.பலருக்கு திருமணத் தடை நீங்கும். விருப்ப திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். 18.11. 2023 காலை 7 மணி முதல் 20.11.2023 காலை 10.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்க்கவும். சஷ்டியன்று கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406