என் மலர்
மிதுனம் - வார பலன்கள்
மிதுனம்
இந்தவார ராசிபலன்
6.11.2023 முதல் 12.11.2023 வரை
திட்டமிட்டு வெற்றி பெறும் வாரம். பாக்கிய அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் தந்தை, தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட மனச்சுமை அகலும்.வீராப்பு பேசிய தந்தை வழி உறவுகள் இணக்கமாக பேசுவார்கள். சிலர் ஆலயத் திருப்பணி செய்வதற்கு தலைமைப்பொறுப்பு ஏற்பார்கள் வெளிநாட்டு வேலை, அரசாங்க வேலை முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு சலுகைகளும் சம்பள உயர்வும் கிடைக்கும்.சிலர் காசி, ராமேஸ்வரம் என ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். தீபாவளியன்று பழைய உறவினர், நண்பர்கள் சந்திப்பு குதூகலத்தை அதிகரிக்கும்.வெளிவட்டார தொடர்புகளால் புது அனுபவம் உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். ஆரோக்கிய கேடு விலகும். மனைவிவழி உறவுகளால் மதிப்பு கூடும். தீபாவளியன்று மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
30.10.2023 முதல் 5.11.2023 வரை
மனச் சுமை குறையும் வாரம். 3-ம் அதிபதி சூரியனும் 5-ம் அதிபதி சுக்ரனும் பரிவர்த்தனை பெறுவதால் பூர்வீகச் சொத்தில் உடன் பிறந்தவர்களின் திடீர் மனமாற்றம் மத்தியஸ்த்தரை அணுகவைக்கும். புதிய தொழில் முயற்சிக்காக வெளிநாடு சென்று வர திட்டமிடுவீர்கள். ஓய்விற்காக, மன நிம்மதிக்காக தீபாவளிக்கு பிள்ளைகளின் வீட்டிற்கு சென்று வரும் ஆர்வம் உண்டாகும். இடப்யெர்ச்சி செய்ய நேரும். 10-ம்மிட ராகுவால் உங்கள் பெருமையை பறைசாற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வருமானம் சிறப்பாக அமையும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளை உங்களின் நேரடி கவனிப்பில் வைத்திருப்பது அவசியம்.
பார்த்துச் சென்ற வரனிடம் சாதகமான பதில் வரும். 4ம்மிட கேதுவால் வீட்டு வாடகை உயரும். கால்நடை மற்றும் உயிரின வளர்ப்பு, மாடித் தோட்டம் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் அதிகமாகும். கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும் .மகான்கள் வாழ்ந்த இடத்திற்கு சென்று தரிசிப்பதால் பாக்கியங்கள் அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
23.10.2023 முதல் 29.10.2023 வரை
தைரியம், தெம்பு அதிகரிக்கும் வாரம். 10-ம்மிடத்தில் ராகு நுழைவதால் வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள்.அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும். தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும்.திருமணம் கை கூடும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வெற்றி தரும். இல்லத்தரசிகளுக்கு இது மிக சாதகமான வாரம். மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.தம்பதிகள் கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும்.
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள்.வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவைப்படும்.24.10.2023 அன்று அதி காலை 4.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தைக்கட்டுப்படுத்தவும். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். கிரகணம் முடிந்த பிறகு மகாவிஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
16.10.2023 முதல் 22.10.2023 வரை
தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம். 9-ம் அதிபதி சனியின் 3-ம் பார்வையில் குரு நிற்பதால் எல்லோரும் பாராட்டக் கூடிய நல்ல புண்ணிய காரியம் செய்வீர்கள். தொழில் மூலம் அனைத்து சுப பலன்களும் தேடிவரும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் இணைவார்கள். மிதுன ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம்.வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திருமண முயற்சி வெற்றி தரும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.
ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும். காவல் துறையினர், அரசியல் வாதிகளுக்கு மிகச்சாதகமான நேரம். லவுக நாட்டம் அதிகரிக்கும். 22.10.2023 அன்று காலை 1.38 காலை முதல் 24.10.2023 அதிகாலை 4.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்கள் மற்றும் மன சஞ்சலம் அதிகமாகும். கண் திருஷ்டி மற்றும் காரியத் தடை உண்டாகும். மகா விஷ்ணுவை வழிபட அனைத்து விதமான சுப பலன்களும் கூடி வரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிபலன்
9.10.2023 முதல் 15.10.2023 வரை
தடைகள் தகறும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று 3ம் அதிபதி சூரியனுடன் 4ம்மிடத்தில் நிற்பதால் உங்கள் தகுதியை திறமையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தேவைக்கு பணம் வரும். செல்வாக்கு கூடும். குடும்ப நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடினமான முயற்சியும், ஆர்வமும், உழைப்பும் உங்களை நல்ல முறையில் வழி நடத்தும்.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் கூடும். கடன் தொகை கட்டுக்குள் இருக்கும். தன வரவு மகிழ்ச்சியை தந்தாலும் வரவுக்கு மீறிய செலவு மன வருத்தத்தை தரும். தாய், தந்தை , உடன் பிறந்தவர்கள், மனைவி, குழந்தைகள் என யார் மூலமாவது செலவு வந்து கொண்டே இருக்கும். இட மாற்றம், வீடு மாற்றம், வேலைமாற்றம் ஆகியவை ஏற்படும்.
தினமும் சிறு தூர பயணம் செய்வது போன்ற வேலை மாற்றம் ஏற்படும். இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர உத்தரவு வரும். சுக ஸ்தானத்தில் கேதுவும் தொழில் ஸ்தானத்தில் ராகுவும் நுழைவதால் சுய ஜாதக தசா புத்தியறிந்து செயல்படுவது உத்தமம். மகாளய அமாவாசையன்று பச்சைப் பயிறு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
2.10.2023 முதல் 8.10.2023 வரை
முயற்சிக்கு ஏற்ற பலன் உண்டாகும் வாரம். ராசி, நான்காம் அதிபதி புதன் உச்சம் பெற்று முயற்சி ஸ்தான அதிபதி சூரியனோடு சேர்ந்து புத ஆதித்ய யோகம் ஏற்படுவதால் தைரியம், திறமை, செயல்திறன், நம்பிக்கை கூடும். இடப்பெயர்ச்சி ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். செல்வச் செழிப்பு உண்டாகும்.பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும்.தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும்.விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்பனை யாகும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்டத் தேவையான உபரி லாபம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிகிச்சை பலன் தந்து ஆயுள், ஆரோக்கிய பயம் விலகும். சுக ஸ்தானத்தை, தாய் ஸ்தானத்தை கேது நெருங்குவதால் தாய் வழி பூர்வீகச் சொத்து பிரச்சினையை விரைந்து முடிப்பது நல்லது. 9-ல் சனி இருப்பதால் பல தலை முறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னோர் வழிபாடு செய்ய ஏற்ற காலம். மகாளய பட்ச காலம் என்பதால் வெண் பொங்கல் தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
2.10.2023 முதல் 8.10.2023 வரை
மிதுனம்
வார ராசிபலன்
25.9.2023 முதல் 1.10.2023 வரை
இலக்கை நிர்ணயம் செய்யும் வாரம். ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் திட்டமிட்டு செயல்படு வீர்கள். மாற்றங்கள் உண்டாகும். லட்சியம் எண்ணங்கள் ஈடேறும்.விரும்பிய உதவிகள் தேடி வரும். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் காலம் இது. குழந்தைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரும். ராசி அதிபதி புதனை சனி பார்ப்பதால் உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்க கூடாது. சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். புத்திர பிராப்தம் உண்டாகும். பார்த்துச் சென்றவரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். மாமனார், மைத்துனரால் ஏற்பட்ட மனச் சங்கடம் மறையும்.மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். 26.9.2023 அன்று இரவு 8.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களின் நல்லாசி பெற முயற்சிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
18.9.2023 முதல் 24.9.2023 வரை
காரியத்தடைகள் அகலும் வாரம். ராசி, 4-ம் அதிபதி புதன் 3ம் அதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் பய ணங்கள் மற்றும் இடப் பெயர்ச்சியால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். உயர் அதிகரிகளிடம் நிலவிய இணக்கமற்ற சூழல் மன உளைச்சல் தீரும்.தொழிலில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும்.ஆதா யத்திற்காக பழகியவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உதவியுடன் வீட்டில் நல்ல சுபகாரியம் நடக்கும். குடும்பத்துடன் இன்பமாக மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.பிரகாசமான எதிர்கால த்தைத் திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத் தொல்லை குறையும்.24.9.2023 இரவு 7.18-க்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய பணிகளை அதற்கு முன்பு முடிப்பது நல்லது. திருச்செந்தூர் முருகனை சரணா கதியடைந்து வழிபட்டால் கடன் ,உத்தியோகம், நோய் தொடர்பான பிரச்சினைகள் இருந்த சுவடு தெரியாது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
11.9.2023 முதல் 17.9.2023 வரை
தாராள வரவு செலவால் மனம் மகிழும் வாரம்.ராசி, 4-ம் அதிபதி புதன் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் வாரம் என்பதால் சுகம், மற்றும் அதிர்ஷ்டத்தின் மேல் நாட்டம் அதிகரிக்கும். 5ம் அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் இப்பொழுது உங்களுக்கு வசப்படும். தொட்டது துலங்கும். சுப நிகழ்வுகளுக்கு தேவையான பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும்.சொந்த வீட்டுக் கனவு நினைவாகும். பூர்வீகத்திற்கு சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. குலதெய்வ அனுகிரகம் உள்ளது. பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித் திறமை மிளிரும்.அழகு, ஆடம்பர பொருட்களை விற்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாக இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம், வளைகாப்பு, நல்ல உத்தியோகம், உயர் கல்வி போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும்.5ம்மிடத்தை விட்டு கேது நகரும் முன்பு சிலருக்கு கோவில் கட்டும் பாக்கியத்தை தருவார் அல்லது பொதுக்காரியங்களுக்கு உதவச் செய்வார்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.பிரதோஷத்தன்று வில்வம் சாற்றி சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
4.9.2023 முதல் 10.9.2023 வரை
பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும் வாரம். 5,12-ம் அதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் லாட்டரி, பங்குச் சந்தை வணிகம் உத்வேகம் பெறும். அரசியல் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு நிச்சயம். போட்டி பந்தயங்களில் அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். போட்டி பந்தயங்கள் அனுகூலமான பலனை தரும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். ராகு தொழில் ஸ்தானத்தை நெருங்குவதால் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். கடன்கள் அடைபடும். எதிரிகள் தொல்லை ஒழியும்.குடும்பத்திற்கு வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். ராசிக்கு 11ம்மிடத்தில் குருபகவான் வக்ரமடைவதால். தொழிலில் வெற்றி கிடைக்கும்.நன்மைகள் இரட்டிப்பாகும். பணபலம் அதிகமாகும். தொட்டது துலங்கும். நினைத்த காரியம் வெற்றியைத் தரும். திருமண முயற்சிகளில் திருப்புமுனை உண்டாகும். மனதில் அமைதியும், ஆனந்தமும்,நிம்மதியும் குடியேறும். மகிழ்ச்சியை அதிகரிக்க கிருஷ்ணரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிபலன்
28.8.2023 முதல் 3.9.2023 வரை
அதிகமாக உழைக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வக்ரம், 5,12-ம் அதிபதி சுக்ரன் வக்ரம். 8,9-ம் அதிபதி சனி வக்ரம் என திரிகோணம் பலம் குறைகிறது. எனவே உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் நிலவி வந்த எதிர்ப்புகள் சீராகும்.ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும்.புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திருமணம் போன்ற விசேஷங்களில் குடும்ப உறவுகளின் சந்திப்பு மனதில் குதூகலத்தை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பை குறைத்தால் திருமண வாய்ப்பு உடனே தேடி வரும். 28.8.2023 காலை 10.40 முதல் 30.8.2023 காலை 10.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அனைத்து செயல்க ளிலும் நிதானமாக சிந்தித்து செயல்படவும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் மிகுதியாகும். பிரதோஷத்தன்று சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிபலன்
21.8.2023 முதல் 27.8.2023 வரை
மனக்கவலைகள் அகலும் வாரம். ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தானத்தில் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் சனி, குரு பார்வையில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் தடை, தாமதங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். இல்லத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் விலகி நன்மைகள் உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடக்க வாய்ப்புள்ளது. வளர்ச்சியும், லாபமும் பெருகி சேமிப்பு உயரும். வராத பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகனம், கல்விச் செலவு என சுப விரயமாக மாறும்.வெளிநாட்டு, உத்தியோக, வேலை முயற்சியில் நல்லது நடக்கும். 5,12ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் ராகு கேதுவின் மையப்புள்ளிக்கு செல்வதால் பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். அதிர்ஷ்டம், பூர்வீகம் தொடர்பான செயல்களை தவிர்க்கவும். உங்கள் வார்த்தைகள் குடும்பத்தினரை காயப்படுத்தலாம். உரிமையை விட உறவுகளே முக்கியம் என்பதை உணர்ந்து பேசவும். கருட பஞ்சமியன்று கருடரை பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406