என் மலர்
மிதுனம் - வார பலன்கள்
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
மகிழ்சியான வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பெற்ற சகாய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று புத ஆதித்ய யோகமடைவது சிறப்பான கிரக அமைப்பாகும். இந்த கிரக சேர்க்கைக்கு குருப் பார்வை கிடைப்பதால் அனைத்து முயற்சிகளும் பெரிய வெற்றியை தரும். உற்றார், உறவுகளிடம் சுமூகமான நிலை நீடிக்கும். சமூக அந்தஸ்தும் கவுரவமும் உயரும்.
இளைய சகோதர, சகோதரிகள் மேல் ஏற்பட்ட கோபம் வெறுப்பு தணியும்.குழந்தைகளின் திறமைகளைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். வீடு, மனை வாங்க நன்கு அறிமுகமானவர்கள் மூலம் கடன் கிடைக்கும். காணாமல் போன பொருட்கள், தங்க நகைகள் கை மறதியாக வைத்த உயில், சொத்து பத்திரங்கள்,ஆவணங்கள் கிடைக்கும். சிலர் கவுரவம் அல்லது பெருமையை நிலைநாட்ட வீண் செலவு செய்வார்கள். திருமணத் தடை அகலும். சிலர் காசி, கயா போன்ற தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடி அமாவாசையன்று வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு, உடை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
பொருளாதார பற்றாக்குறை அகலும் வாரம். ராசி அதிபதி புதன் 6,11-ம் அதிபதி செவ்வாயுடன் மூன்றாமிடத்தில் சேர்க்கை பெறுவதால் பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. நீண்ட காலமாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி குடும்பத்தில் நிம்மதி நிலவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழிலில் அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். குழந்தை பேறு உண்டாகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வெளி நபர்களிடம் குடும்ப விசயங்களை பேசாமல் இருப்பது நல்லது. ஆடி வெள்ளிக்கிழமை மீனாட்சியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் இருந்து வந்த பகை மறையும். இளவயது மிதுன ராசியினருக்கு திருமணம், குழந்தை பேறு உண்டாகும். மத்திம வயதினருக்கு மருமகன், மருமகள், பேரன், பேத்தி என புதிய உறவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
11ல் குரு ராகு இருப்பதால் சிலர் குறுக்குவழி வருமானத்திற்காக உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். தகுதி இல்லாதவர்களை நம்பி ஏமாறாமல் எது நல்ல வழி என சிந்தித்து செயல்படுவது நல்லது. சிலர் வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கப் பெற்று இடம் பெயரலாம். உடல் நிலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். 31.7.2023 இரவு 12.15 முதல் 2.8.2023 இரவு 11. 25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிம்மதியான தூக்கம் இருக்காது. கோப உணர்வு மிகுதியாகும். எல்லோரிடமும் சகஜமாக மனம் ஒன்றி பழக முடியாது. ஆடிப்பெருக்கு அன்று நாக வழிபாடு செய்யவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசி அதிபதி புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனோ தைரியம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சிலர் மன நிம்மதிக்காக வீடு மாறுவார்கள். முயற்சி ஸ்தான அதிபதி சூரியன் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு கேதுவின் மையப் புள்ளியில் சஞ்சரிப்பதால் சில தடுமாற்றத்திற்கு பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
வீண் விரயம் ஏற்படும். எனவே வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம். நோய் தாக்கம் குறையும். மனைவிக்கு ஆரோக்கிய குறைபாடு சீராகும்.புதிய வாகனம் வாங்கலாம்.
நிச்சயித்த திரும ணத்தை தள்ளிப்போடாமல் ஆவணியில் உடனே நடத்துவது நல்லது. மாமனார் மூலம் பூமி வயல், தோட்டம் கிடைக்கும் அல்லது என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவில் உலவாரப் பணிகளை செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
மகிழ்ச்சி நிறைந்த வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்ந்து இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். வித்தியாசமான சிந்தனைகளால் தொழிலில் மாற்றங்களை செய்வீர்கள்.
துறை சார்ந்த நிபுணத்துவம் மேம்படும். அரசு வகை ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் திருப்தியான சூழல் ஏற்படும். பங்காளித் தகராறுகள் சுமூகமாக தீரும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை மாறும். பூர்வீகத்தில் வீடு, மனை வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும். உங்களுக்கு வரவேண்டிய பணம் விரைவில் வசூலாக வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களாக நினைத்த சில ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.நல்ல ஆடம்பரம், வசதி நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். ஏமாற்றமும் மன அழுத்தமும் குறையும். ஆடி வெள்ளிக்கிழமை மரிக்கொழுந்து சாற்றி அம்மன் வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
சுபவிரயம், சுப மங்கலச் செலவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சொத்தை வாடகை்கு விட்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். குடும்பத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். சிலகுழந்தைகள் பள்ளி மாறலாம். ஆடி மாதத்தில் சிவ சக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் தன ஸ்தானம் செல்லுவதால் பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். பிரிந்த உறவுகள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 5,12-ம் அதிபதி சுக்ரனும், 6,11-ம் அதிபதி செவ்வாயும் குருவின் பார்வையில் செல்வதால் உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் உண்டாகும்.
தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். புத்திர பிராப்தம் உண்டாகும்.பெண்கள் நகை பட்டுப் புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள்.
4.7.2023 பகல் 1.43 மணி முதல் 6.7.2023 பகல் 1.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மீனாட்சியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
சாதகமான வாரம். ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் ராசியில் இணைவதால் ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். லாட்டரி பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து பொருள் வரவு அதிகரிக்கும்.
இடமாற்றங்கள் சாதகமான நிலையில் உள்ளது. பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய தொழிலை தொடங்குவீர்கள். மனைவி ஆசைப்பட்டு கேட்ட நகையை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும்.
சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் உயர்ரக வாகனங்கள் வாங்குவீர்கள். உயர்கல்வி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு பிள்ளைகளால் பெற்றோருக்கு ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும்.புதிய வேற்று மத நண்பர்கள் கிடைப்பார்கள். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். புதன் கிழமை ஸ்ரீ வராகரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
விவேகத்துடன் செயல்பட வேண்டிய வாரம். விரய ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் ராசிக்குள் நுழைவதால் இழப்புகள், மருத்துவச் செலவுகள், வீண் விரயங்கள் குறையும். குடும்பத்தில் சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் நிலைத்து இருக்கும். ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும்.பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் வக்ரம் பெறுவதால் அஷ்டமாதிபத்திய பலன் சற்று அதிகரிக்கும்.
சுய ஜாதக தசா புத்தி அசுபத் தன்மையுடன் இயங்கினால் வம்பு, வழக்கு, சிறை தண்டனை, விபத்து, கண்டம் அறுவை சிகிச்சை, தீராத கடன், தீர்க்க முடியாத நோய், கண் திருஷ்டி பாதிப்பு போன்ற அசுப பலன்கள் நடக்கும்.
தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும். சிலருக்கு பல் தொந்தரவு ஏற்படலாம். சிலருக்கு மறு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் நடைபெறும். சனிக்கிழமை சரபேஸ்வரரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் உண்டாகும் வாரம். 3-ம் அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் குண மேன்மை, செயல்திறன், தன்னம்பிக்கை கூடும். உடன் பிறந்தவர்களுடன் நிலவிய பனிப்போர் விலகும். 5,12-ம் அதிபதி சுக்ரன் 6,11-ம் அதிபதி செவ்வாயுடன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாமல் வேலைப்பளு இருக்கும்.
காதல் விவகாரங்கள் உண்மையையும், மாயையையும் புரிய வைக்கும். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோயால் இன்னல் அனுபவித்தவர்களுக்கு புத்தொளியும், உடல்பொலிவும் உண்டாகும். தடைப்பட்ட பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும்.
மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. திருமணம், குழந்தைப்பேறு வீடு, வாகனம் போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். கோர்ட், கேஸ் பிரச்சினையில் இழுபறியான நிலை நிலவும். பைரவரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
திறமைகள் வெளிப்படும் வாரம். ராசி அதிபதி புதன் 12-ம்மிடத்தில் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் மறைவதால் வெளியில் தெரியாமல் புதைந்து கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும். அஞ்சாமல் தைரியமாக எல்லா முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறப்புகளிடையே ஒற்றுமை உண்டாகும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலில் புதுமை புகுத்தி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.நண்பர்களுடன் ஏற்பட்ட விரிசல் சீராகி ஆதாயம் உண்டாகும். வியாதிகள் குறைந்து நலமடைவீர்கள்.
7.6.2023 அன்று 4.40 காலை முதல் 9.6.2023 அன்று 6.02 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சரபேஸ்வரரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
கடன் தொல்லை குறையும் வாரம். 5,12-ம் அதிபதி சுக்ரனும் 6, 11-ம் அதிபதி செவ்வாயும் தன ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் எதிர்பார்த்த தன லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகம், வெளிநாட்டு பணம், பிள்ளைகள் வருமானம் போன்றவற்றால்உங்கள் வாழ்க்கை நிலை உயரப்போகிறது. பழைய கடன்களை செலுத்தி புதிய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். சிலர் புதிய தொழில் துவங்கலாம்.
நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப் போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது. தோற்றத்தில் மிடுக்கு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். வீடு மாற்றும் எண்ணம் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும்.
மாமியார், மாமனாரால்' ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். மறுதிருமண முயற்சி வெற்றி தரும். எதிரிகள் தொல்லை குறையும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். இதனால் தேவையில்லாத கெட்ட பெயர் உருவாகும். பவுர்ணமியன்று சத்திய நாராயணரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406