search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    22.5.2023 முதல் 28.5.2023 வரை

    உழைப்பிற்கான சன்மானம் கிடைக்கும் வாரம். 5,12ம் அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் மனத் தடுமாற்றம் நீங்கும். விவேகத்துடன் செயல்படுவீர்கள். நிதானம், தைரியம், தெம்பு குடிபுகும்.வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பல பிரச்சினைகள் குறையத் துவங்கும். சிறிய உழைப்பில் பெரிய லாபம் கிடைக்கும்.

    கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்வுகளில் இருந்து விடுபடுவீர்கள்.வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி இரட்டிப்பாகும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அதிர்ஷ்ட சொத்து போன்ற பல வழிகளில் தனவரவு ஏற்படும். புதிய தொழில் துவங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

    தந்தைவழி ஆதாயமும் அனுகூலமும், பூர்வீகச் சொத்தும், முன்னோர்களின் நல்லாசியும் நிரம்ப பெறுவீர்கள். திருமணத் தடை அகலும்.சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.பூமி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி மதுரை மீனாட்சியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    15.5.2023 முதல் 21.5.2023 வரை

    கடன் சுமை குறையும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிப்பதால் மதி நுட்பமான காரியங்களால் எல்லோரது நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தனித்த அடையாளத்துடன் இருப்பீர்கள்.குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 5-ம் அதிபதி சுக்ரன் ராசியில் நிற்பதால் பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை தரும்.

    குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். 6ம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்றதால் அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். பழையவீட்டை விற்றுவிட்டு புதிது வாங்கத் திட்டமிடுவீர். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.

    நோய் தாக்கம் வெகுவாக குறையும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். குல தெய்வ, குடும்ப தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்ற உகந்த காலம். உயர்கல்வி முயற்சி கைகூடும். கலைத்துறையினரின் திறமை மிளிரும். அமாவாசைக்கு பள்ளி மாணவர்களுக்கு இயன்ற உதவிகளை வழங்கவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    8.5.2023 முதல் 14.5.2023 வரை

    புதிய அனுபவம் உண்டாகும் வாரம் ராசி மற்றும் 4-ம் அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் வீடு,வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பத்திரப் பதிவு தாமதமாகும். புதியபொறுப்புகள், பதவிகள் தேடி வரும். 6ம் அதிபதி செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் நீசம் பெறுவதால் உங்களை தவறாகப் புரிந்துகொண்ட உறவுகள் தவறை உணருவார்கள்.

    தம்பதிகளிடம் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றக் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

    10.5.2023 இரவு 9.50 முதல் 13.5.2023 0.19 am வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லதாக நினைத்து பேசினாலும் பிறர் தவறாக புரிந்து கொள்வதால் மன பேதம் ஏற்படும். எனவே தேவையற்ற பேச்சைத் தவிர்க்கவும். சங்கடஹர சதுர்த்தியன்று வெள்ளெருக்கு மாலை சாற்றி விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    1.5.2023 முதல் 7.5.2023 வரை

    தெய்வ பலம் வழிநடத்தும் காலம். 5-ம் அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் புதிய முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். பிறருக்கு கட்டளையிடும் படியான பெரிய பதவிகள் தேடி வரும்.உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். புத்திர சோகம் அகலும். வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகம் ஏற்படும். காதலுக்கு ஆதரவு கிடைக்கும்.

    வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் சுப விசேஷம் நடக்கும்.புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அள்ள அள்ள குறையாத பொன் பொருள் சேரும். செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும். 6-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் வேலை தேடி அலுத்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் ஆர்வம் உண்டாகும். திடீர் மாற்றத்தால் மனம் ஆனந்தமடையும்.

    ஞான வழியில் மனம் செல்லும். தந்தை வழியில் உள்ள பிரச்சினைகள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமூகமாக தீர்க்கப்படும். பவுர்ணமியன்று மகா விஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    24.4.2023 முதல் 30.4.2023 வரை

    பணவரவு, வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை இருப்பதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கடனாக கொடுத்து மாட்டிக்கொண்ட பணம் திரும்பக் கிடைக்கும். பணம் எல்லா நேரத்திலும் கிடைக்காது என்பதால் லாப குருவால் கிடைக்கும் உபரி பணத்தை சேமிப்பது நல்லது.

    உங்களது திட்டங்கள் செயல்பாடுகள், எண்ணங்கள் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சித்தப்பா, நண்பர்கள் மூலம் ஆதாயங்களும், உதவிகளும் தேடி வரும்.குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய தொழில் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பங்கு சந்தையில் ஆர்வம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள்.

    குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். தடைபட்ட மூத்த சகோதர, சகோதரியின் திருமணம் நடைபெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஸ்ரீ ராமானுஜரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    17.4.2023 முதல் 23.4.2023 வரை

    வெற்றி மேல் வெற்றி உண்டாகும் வாரம். வார இறுதி முதல் குருவின் பார்வை முயற்சி மற்றும் சகாய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தொழில் துறையில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணப்பற்றாக்குறை அகலும். ராசி அதிபதி புதன் ஆறாம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் சிறு சிறு மனக்கசப்பு ஏற்பட்டாலும் தெய்வ அருளால் விரைவில் விலகும்.

    அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. லாப ஸ்தானத்தில் குரு ராகு சேர்க்கை ஏற்படுவதால் அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். சிலருக்கு அதிர்ஷ்ட பணம் அல்லது பொருள் கிடைக்கும்.

    திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.சிலருக்கு மறு திருமணம் நடக்கும்.வெகு காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு வைத்தியத்தில் இரட்டைக் குழந்தை பிறக்கும். மாமியார் மற்றும் மாமனாரால் வரவு உண்டாகும். பெண்கள் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கலாம்.ஆரோக்கிய தொல்லைகள் அகலும். கிரகணத்தன்று வயதானவர்களின் தேவை அறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிப்பலன்

    10.4.2023 முதல் 16.4.2023 வரை

    துன்பங்கள் குறையும் வாரம். வெகு சில நாட்களில் குரு லாப ஸ்தானம் செல்வதால் கொடுக்கல், வாங்கல் சீராகும். வட்டி தொழில், ரியல் எஸ்டேட், ஏஜென்சி தொழில் புரிபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். ராசி அதிபதி புதன் 6, 11ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் படித்து முடித்தவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வரும்.

    5,12-ம் அதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் பதவி உயர்வு, பணி மாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிப்போகும். மாணவ மாணவிகளுக்கு நல்ல நட்பால் முன்னேற்றம் நிலவும். செலவை குறைத்து சேமிப்பை உயர்த்த ஒளிமயான வாழ்வு அமையும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன் அமையும். 13.4.2023 மாலை 4.22 மணி முதல் 15.4.2023 மாலை 6.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் செயலைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது.வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தினமும் கஜலட்சுமியை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    3.4.2023 முதல் 9.4.2023 வரை

    சுமாரான வாரம். ராசி அதிபதி புதனும் 6, 11-ம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை பெறுவதால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். பாகப்பிரி வினையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும்.

    படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கோட்சார குரு லாப ஸ்தானத்தை நெருங்குவதால் சிலருக்கு அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உதயமாகும். தொழில் சிறப்பாக நடந்தாலும் பெரிய லாபம் கையில் நிற்காது. கடன் தொகை, எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து பண வரவு கிடைக்கும்.

    சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மருத்துவ செலவு அதிகரிக்கும். பங்குனி உத்திரத்தன்று வய தான தம்பதிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வர அனைத்து விதமான சுப பலன்களும் தேடி வரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    27.3.2023 முதல் 2.4.2023 வரை

    சுமாரன வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் லாப ஸ்தானம் சென்று சுக்ரனுடன் சேருவதால் தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். 6,11-ம் அதிபதி செவ்வாய் ராசியில் இருப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

    5ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் நிற்பதால் குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். சுக்ரன் ராகுவுடன் நிற்பதால் ஒரு சில குடும்பங்களில் குல தெய்வ கோயிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற கருத்து வேறுபாடுஏற்படும் .ஒரு சிலருக்கு பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். சிலருக்கு குழந்தைகளால் மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். தீர்க்கமான முடிவு செய்யும் திறன் குறையும்.

    மன உளைச்சல் காரணமாக யாரைப் பார்த்தாலும் கோபம், டென்சன் ஏற்படலாம். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள் அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். குலதெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    20.3.2023 முதல் 26.3.2023 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். தன ஸ்தானத்திற்கு ஏப்ரல் 22 வரை குருப் பார்வை இருப்பதால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். 6, 11-ம் அதிபதி செவ்வாய் ராசியில் நின்று 4,7,8-ம்மிடத்தை பார்க்கிறார். இதனால் கடன் பெற்று சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

    பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். தேவையற்ற அலைச்சலால் அசதி, ஆரோக்கியத் தொல்லைகள் கூடும். 6-ம் அதிபதி செவ்வாய் 7-ம்மிடத்தைப் பார்ப்பதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சம்மந்திகளிடம் நயந்து பேசவும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். அல்லது தொழில், வேலைக்காக தம்பதிகள் ஓரிரு மாதம் பிரிந்து வாழலாம்.

    செவ்வாய் 8-ம்மிடத்தைப் பார்ப்பதால் ஒரு கடனை அடைக்க மறுகடன் பெறலாம். எதிரிகளை அடக்க முடியும் என்பதால் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். வேலைக்கு செல்லும் பெண்க ளின் வாழ்வாதாரம் உயரும். புதன்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகா விஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    13.3.2023 முதல் 19.3.2023வரை

    நீசபங்க ராஜயோகமான வாரம். ராசி மற்றும் சுக ஸ்தான அதிபதி புதன் நீச பங்கம் பெறுவதால் நல்ல சிந்தனை உண்டாகும். தொழில் ஸ்தான அதிபதி குரு லாப ஸ்தானத்தை நெருங்குவதால் எண்ணி லடங்கா சுப பலன்கள் மிதுன ராசிக்கு நடக்கவுள்ளது. இது போன்ற கிரக அமைப்பு என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையைத் தரும். உங்கள் செயல்கள் அனைத்திலும் தைரியமாக செயல்பட்டு வெற்றியடைவீர்கள்.

    வியாபாரத்திலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் அகலும். தாய் வழிச் சொத்தில் நிலவிய சங்கடங்கள் தீரும். தாயின் பூரண ஆசியும் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். கல்வியில் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும். சொத்து வாங்குவது விற்பதில் இருந்த தடைகள் விலகும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பாகப்பிரிவினை சுமூகமாகும்.

    17.3.2023 காலை 10.48 முதல் 19.3.2023 காலை 11. 17 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிரிகளால் சங்கடம், உறக்கமில்லாமல் குழப்பம், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தினமும் விஷ்ணு சகஸ்ஹர நாமம் கேட்கவும் அல்லது படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    6.3.2023 முதல் 12.3.2023 வரை

    கடன் தொல்லை விலகும் வாரம். தொழில் ஸ்தான அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் தொழில் சிறப்பாக நடக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.கூட்டம் கூடும். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அதிகரிக்கும். சிலர் நல்ல திட்டம் போட்டு புதிய தொழில் துவங்குவார்கள். உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பார்கள்.

    கூலித் தொழிலாளிகளுக்கு தொடந்து வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கான சுப செலவு அதிகரிக்கும். கடந்த 6 மாதங்களாக ஆறாம் அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்த்ததால் மிதுன ராசியினர் கடனாலும், நோயாலும், வம்பு வழக்காலும் பட்ட அவஸ்தை குறையத் துவங்கும். திருமணம், சுப காரியம் தொடர்பாக பேசலாம்.

    ராசி அதிபதி புதன் 3-ம் அதிபதி சூரியனுடன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சனியுடன் இணைவதால் பூர்வீகச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களுடன் பேசி பாகப் பிரிவினை செய்ய உகந்த நேரம். மாசி மகத்தன்று சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×