என் மலர்
மிதுனம் - வார பலன்கள்
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
27.2.2023 முதல் 5.3.2023 வரை
எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் பாக்கிய அதிபதி சனி மற்றும் சகாயஸ்தான அதிபதி சூரியனுடன் பாக்கிய ஸ்தானத்தில் கூடுவதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. தெய்வ சிந்தனை அதிகரிக்கும். முன்னோர்களின் நல்லாசி கிட்டும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆழ்ந்த தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும் உண்டாகும்.
உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்ந்தவர்களுக்கு முன்னேற்றப் பாதை தென்படும். வேலை இல்லாதவர்களுக்கு நிலையான, நிரந்தரமான வேலை கிடைக்கும். ஐந்தாம் அதிபதி சுக்ரன் பத்தில் உச்சம் பெறுவதால் கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.
ஆண்களுக்கு மனைவியால் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பங்கு மார்க்கெட் லாபம் கூடும். காதல் கைகூடும்.சிலர் வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் பெறலாம். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும். பஞ்சமுக நெய் தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
20.2.2023 முதல் 26.2.2023 வரை
மன நிறைவான வாரம். 5,12-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெறுவதால் எதிர்காலம் குறித்து என்ன முடிவு செய்வதென்று இருளில் திக்கு, திசை தெரியாமல் தடுமாறியவர்களுக்கு முன்னேற்ற பாதை தென்படும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள்.
நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு தெரியும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும். வீடு, வாகனம் முயற்சிகள் கைகூடும். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். முக்கிய ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும். ராசி அதிபதி புதன் 8-ல் மறைந்து தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் மற்றவர்களின் மனதை புண்படாமல் பேசி குடும்ப உறுப்பினர்களை சமாளிப்பீர்கள்.
கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.தாய் தந்தை, உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். பெண்களுக்கு புதிய தொழில் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். அமாவாசையன்று வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவ நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
13.2.2023 முதல் 19.2.2023 வரை
எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும் வாரம்.5,12-ம் அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் 7,10-ம் அதிபதி குருவுடன் சேருவதால்உற்சாகமாக சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய கூட்டுத் தொழில் முயற்சி நிறைவேறும்.பூர்வீக குலத்தொழிலில் புதிய பங்குதாரர் இணையலாம். பழைய பங்குதாரர் விலகலாம்.
பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் விலகி சாதகமான முடிவுகள் கிடைக்கும். சொத்துக்காக பிரிந்து சென்ற உறவுகள் தேடி வந்து இணைவார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.பெண்களுக்கு மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். வீடு மாற்றம் செய்ய நேரும்.பிள்ளைகள் பெற்றோர்களின் உண்மையான அன்பை புரிந்து கொள்வார்கள்.தாய், தந்தையே தெய்வம் என்ற உணர்வு மேலோங்கும். தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.
ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.18-ந் தேதி காலை 1.48 மணியில் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அமைதியாக இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். சிவராத்திரி அன்று வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் சகாய ஸ்தான அதிபதி சூரியனுடன் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்து தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். பண வரவு சிறப்பாக இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள், இன்னல்கள் மறையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். கடன் பிரச்சினை படிப்படியாக குறையும். சூரியனைக் கண்ட பனிபோல் பிரச்சினைகள் விலகும். உடன் பிறந்தவர்கள் உங்கள் முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள். நீண்ட காலமாக தீர்க்க முடியாத சில பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு மாமனார் மூலம் அதிர்ஷ்டப்பணம் கிடைக்கும். திருமணம், குழந்தை பேறில் நிலவிய தடைகள் அகலும். சிலருக்கு அறுவை சிகிச்சையில் ஆரோக்கியம் சீராகும். புதன் கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை வழங்கவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.அஷ்டமச் சனியின் தாக்கம் குறைவதால் உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். ஆரோக்கியம் சிறக்கும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். ஆரோக்கியம், தொழில், கல்வி உத்தியோகம் போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்சினைகள் சீராகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும்.
தந்தை வழி உறவு மேம்படும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்க சப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். நீண்ட காலமாக காத்திருந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும் எதிரிகளின் பலம் குறையும். ஏகாதசியன்று கருடாழ்வாரை வழிபட நிரந்தரமான முன்னேற்றம் உண்டாகும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
23.1.2023 முதல் 29.1.2023 வரை
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். மறைவு ஸ்தான அதிபதி செவ்வாய் மற்றொரு மறைவு ஸ்தானமான 12-ல் மறைவதால் நீண்ட நாளைய சில குழப்பங்களுக்கு முடிவு கிட்டும். பங்குச்சந்தை இழப்புகள் குறையும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. தொழில் தொடர்பான முயற்சிக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை இந்த அஷ்டமச் சனியின் காலத்தில் உணர்ந்து இருப்பீர்கள்.
வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயில் இருந்து முழு நிவாரணம் கிடைக்கும். ஆயுள் பலம் உண்டு. 23.1.2023 மதியம் 1.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் உணர்ச்சி போராட்டம் அதிகமாகும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
16.1.2023 முதல் 22.1.2023 வரை
அனுபவ அறிவு வெளிப்படும் காலம். ராசிக்கு 9-ம் இடத்தில் நிற்கும் சுக்ரன் மற்றும் சனியால் பாக்கிய ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பலம் பெறுகிறது. பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்கும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் அதிகரிக்கும்.
குல தெய்வ அருளால் பூர்வீகம் சம்பந்தமான விசயங்கள், வழக்குகள் முடிவிற்கு வரும். கடினமான வேலையும் எளிமையாக முடிக்கும் திறமை மேலோங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய சிந்தனைகள் மேலோங்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் முன்னேற்றங்கள் அதிகமாக இருக்கும். பொருளாதாரம் உயரும்.
கடன்களை படிப்படியாக குறைப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் கைகூடும். உங்களின் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளும் ஈடேறும். உடல் நலன்களின் முன்னேற்றம் இருக்கும்.
21.1.2023 மதியம் 2.53 முதல் 23.1.2023 பகல் 1.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது. கருட வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
9.1.2023 முதல் 15.1.2023 வரை
விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். 6,11-ம் அதிபதி செவ்வாய் ராசிக்கு 12-ல் வக்ர நிவர்த்தி பெறுவதால் வெளிநாட்டுப் பயணத்தில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தேவைக்கேற்ற வருமானம் இருந்தாலும் வரவிற்கு மீறிய செலவும் இருக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும்.
சிலருக்கு வீடு, வாகனத்தை பராமரிக்கும் செலவு அதிகரிக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு சீரான வேலையும், வருமானமும் கிடைக்கும். சிலருக்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலை கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோர்கள் மீண்டும் சேருவார்கள். திருமண முயற்சி கைகூடும்.
பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். அஷ்டமச் சனியின் காலத்தில் பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மீண்டும் சொந்த ஊர் செல்லும் எண்ணம் உதயமாகும். ஆரோக்கியக் குறைபாடு அகலும். அறுவை சிகச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும். புதன்கிழமை மகா விஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
2.1.2023 முதல் 8.1.2023 வரை
உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.அஷ்டமச் சனியின் தாக்கம் குறைவதால் உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். ஆரோக்கியம் சிறக்கும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும்.
ஆரோக்கியம், தொழில், கல்வி உத்தியோகம் போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்சினைகள் சீராகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும். தந்தை வழி உறவு மேம்படும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.
தம்பதியிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். நீண்ட காலமாக காத்திருந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும் எதிரிகளின் பலம் குறையும். ஏகாதசியன்று கருடாழ்வாரை வழிபட நிரந்தரமான முன்னேற்றம் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
அனுகூலமான வாரம். ராசி அதிபதி புதன் 5,12- ம் அதிபதி சுக்ரன் மற்றும் 3-ம் அதிபதி சூரியனுடன் ராசிக்கு 7-ல் இணைந்து ராசியை பார்ப்பதால் அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உறுதி. பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள், இன்னல்கள் மறையும். சிலருக்கு வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.திருமணத்தடை அகலும். சிலருக்கு பெற்றோரின் சம்மதத்துடன் விருப்ப பதிவு திருமணம் நடக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போல சிறப்பாக இருக்கும். சிலருக்கு வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 25.12.2022 அதிகாலை 3.30 மணி முதல் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். அமாவாசையன்று பசுவிற்கு மஞ்சள் வாழைப்பழம் தானம் தரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசி அதிபதி புதன், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனுடன் ஏழாம் இடத்தில் இணைந்து ராசியைப் பார்ப்பதால் உங்கள் திறமைகள் வெளிப்படும். செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள் புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.
கூட்டுத் தொழில், பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலர் நண்பர்களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். உடன் பிறந்தே கொல்லும் வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். ஆக மொத்தம் மிதுன ராசியினர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழும் அமைப்பு உண்டாகும். புதன் கிழமை மகா விஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும் வாரம். அஷ்டமத்து சனி விலகும் காலம் என்பதால் அற்புதங்கள் நிகழப்போகிறது. சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரப்போகிறது.
கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. மிகப் பெரிய பாரம் நீங்கப் போகிறது. ராசி அதிபதி புதன் தன் வீட்டைத் தானே 5,12-ம் அதிபதி சுக்ரனுடன் இணைந்து பார்ப்பதால் தடைகளைத் தாண்டி வெற்றிகள் தேடி வரும்.நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். திடீர் விரைய செலவுகளும் வரலாம் என்பதால் நிதானம் தேவை. திருமணம் முடிந்து சண்டை போட்டு பிரிந்தவர்கள் இனி சந்தோஷமாக இணையப்போகிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி மக்கள் மனதிற்கு இதமாக நடந்து கொள்வார்கள்.
பிள்ளைகள் பற்றிய நல்ல செய்திகள் தேடி வரும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு பொன் ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். மகாவிஷ்ணுவை வழிபட்டு இறை நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள அற்புதங்கள் நிறைந்த வாரமாக மாறும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406