search icon
என் மலர்tooltip icon

    மிதுனம்

    வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை

    26.1.2025 முதல் 1.2.2025 வரை

    புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும் வாரம். ராசியில் 6-ம் அதிபதி செவ்வாய் வக்ர கதியில் சஞ்சாரம் செய்கிறார்.5ம் அதிபதி சுக்ரன் 10-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். புதிய தொழில் ,உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட சங்கடங்கள், விரயங்கள் சீராகும்.குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.

    பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மீண்டும் சொந்த ஊர் செல்லும் எண்ணம் உதயமாகும்..பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. 28.1.2025 அன்று மதியம் 2.52 முதல் 30.1.2025 அன்று மாலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தில் பகைமை உருவாகும். எனவே முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக திட்டமிட்டு செயல்பட்டு சமாளிக்க வேண்டும். உடல் ஆரோக்கி யத்தில் அக்கறை தேவை.அமாவாசையன்று திருமஞ்சன அபிசேகம் செய்து மகா விஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×