என் மலர்
மிதுனம்
வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை
29.12.2024 முதல் 4.1.2025 வரை
முன்னோர்களின் நல்லாசிகள் நிறைந்த வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் பாக்கியா திபதி சனியுடன் பாக்கிய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் வலிமை பெறுகிறது. குல தெய்வ வழிபாட்டிற்கும் முன்னோர்கள் நல்லாசிக்கும் உகந்த காலம்.எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கைகூடும்.திருமணம், புத்திரம் போன்ற சுப காரியங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.
பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய மனை வாங்கி வீடு கட்டுவது போன்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். கணவன், மனைவிக்குள் நிலவிய பிணக்குகள் நீங்கி இணக்கம் ஏற்படும். 1.1.2025 காலை 6.01 மணி முதல் 3.1.2025 காலை 10.49 மிண வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். குடும்பப் பொறுப்புகள் காரணமாக பெண்களுக்கு அலைச்சலும் சோர்வும் ஏற்படும். அமாவா சையன்று உணவு, உடை, ஆடை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406